உள்ளடக்கத்துக்குச் செல்

செய்யுளியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செய்யுளியல் என்பது யாப்பருங்கல விருத்தி, யாப்பருங்கலக் காரிகை உரை, ஆகியவற்றில் மேற்கோளாகத் தரப்பட்டுள்ள ஒரு நூல். இதன் காலம் 9 ஆம் நூற்றாண்டு எனக் கொள்ளப்படுகிறது. அரை நூல்கள் அதன் ஆசிரியரைச் செய்யுளியலுடையார் எனக் குறிப்பிடுகிறது. இந்த நூல் தொல்காப்பிய யாப்பிலக்கணத்தைப் பின்பற்றி எழுந்த இலக்கண நூல் எனத் தெரிகிறது.

இந்த நூலில் இலக்கண நூற்பாக்களும், மேற்கோள் பாடல்களும் இருந்திருக்கின்றன.

நூல் தரும் செய்தி

[தொகு]

இந்த நூல் தரும் புதுமையான செய்திகளில் சிலவற்றை இங்குக் கருதலாம்.

இந்நூல் நேர்புஅசை,நிரைபுஅசை முடிபுகளைக் கொண்ட சொற்சீர் பற்றி ஒரு நூற்பாவில் குறிப்பிடுகிறது.[1]

குறள் வெண்பா ‘பிறப்பு’ வாய்பாடு முற்றியலுகரம் [2], அகவல் வெண்பா [3], வெண்கூ வெண்பா [4], இரண்டாம் எழுத்தின்மேல் ஏறிய உயிரெதுகை [5]

கருவிநூல்

[தொகு]
  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, ஒன்பதாம் நூற்றாண்டு, முதல் பாகம், பதிப்பு 2005

அடிக்குறிப்பு

[தொகு]
  1. கட்டுரை வகையான் எண்ணொடு புணர்ந்து
    முட்ட்டி இன்றிக் குறைவு சீர்த்து ஆகியும்
    மொழியசை ஆகியும் வழியசை புணர்ந்தும்
    சொற்சீர்த்து இறுதல் சொற்சீர்க்கு இயல்பே

  2. மஞ்சுசூழ் சோலை மலைநாட மூத்தாலும்
    அஞ்சொல் மடவார்க் கருளு.

    குறள் வெண்பா ‘காசு’ வாய்பாடு முற்றியலுகரம்

    இனமலர்க் கோதாய் இலங்குநீர்ச் சேர்ப்பன்
    பனைமலர்த் தாரகலம் புல்லு.

  3. மனைக்குப்பாழ் வாணுதலை இன்மை, தான்சென்ற
    திசைக்குப்பாழ் நட்டோரை இன்மை, இருந்த
    அவைக்குப்பாழ் மூத்தோரை இன்மை, தனக்குப்பாழ்
    கற்ற்றி வில்லா உடம்பு

  4. அறந்தருதண் செங்கோலை அன்ன மடந்தை
    சிறந்தன சேவலோ டூடி – மறந்தொருகால்
    தன்னம் அகன்றாலும் தம்முயிர் வாழாவால்
    அன்னம் மகன்றில் இவை

  5. துளி[இ]யொடு மயங்கிய தூங்கிலுள் நடுநாள்
    அணி[இ]கிளர் தாரோய் அஞ்சுரம் நீந்தி
    வடி[இ]வமை எஃகம் வலவயின் ஏந்தித்
    தனி[இ]யே வருதி நீ எனின்
    மையிருங் கூந்தல் உய்தலோ அரிதே

"https://ta.wikipedia.org/w/index.php?title=செய்யுளியல்&oldid=3176398" இலிருந்து மீள்விக்கப்பட்டது