சுபேதார் ஜோகீந்தர் சிங்
சுபேதார் சுபேதார் ஜோகீந்தர் சிங் | |
---|---|
புது தில்லி தேசிய போர் நினைவகத்தில் சுபேதார் ஜோகீந்தர் சிங்கின் மார்பளவுச் சிற்பம் | |
பிறப்பு | மக்லா காலன், மோகா மாவட்டம், பஞ்சாப், இந்தியா | 28 செப்டம்பர் 1921
இறப்பு | 23 அக்டோபர் 1962 பூம் லா கணவாய், வட கிழக்கு எல்லைப்புற முகமை, இந்தியா | (அகவை 41)
சார்பு | இந்தியா இந்தியா |
சேவை/ | பிரித்தானிய இந்திய தரைப்படை இந்தியத் தரைப்படை |
சேவைக்காலம் | 1936–1962 |
தரம் | சுபேதார் |
தொடரிலக்கம் | JC-4547[1] |
படைப்பிரிவு | சீக்கிய ரெஜிமெண்ட் |
போர்கள்/யுத்தங்கள் | இரண்டாம் உலகப் போர் இந்திய-பாகிஸ்தான் போர், 1947 - 1948 இந்திய சீனப் போர் |
விருதுகள் | பரம் வீர் சக்கரம் |
சுபேதார் ஜோகீந்தர் சிங் ('Joginder Singh Sahnan), PVC (28 செப்டம்பர் 1921 – 23 அக்டோபர் 1962), இந்திய இராணுவத்தின் சீக்கிய ரெஜிமெண்டில் சிப்பாயாகச் சேர்ந்து, பின் சுபேதார் எனும் இளநிலை அதிகாரியாக போரின் போது இறந்தவர். இரண்டாம் உலகப் போர், இந்திய-பாகிஸ்தான் போர், 1947 - 1948 மற்றும் 1962 இந்திய சீனப் போர்களில் பங்காற்றியவர்.
1962-இல் இந்திய-சீனப் போரின் போது வட கிழக்கு எல்லைப்புற முகமையில் உள்ள பூம் லா கணவாயில் உள்ள ஒரு நிலையை, தனது தலைமையிலான குறைந்த படைகளுடன் காத்துக் கொண்டிருந்த போது, சீனப் படைகள் சரமாரியாக தாக்கினர். இறுதியில் சீனர்களிடம் போர்க் கைதியாக பிடிபடும் வரை, தனது நிலையை விட்டுக் கொடுக்காமல் தொடர்ந்து போராடினார்.[2] இந்திய-சீனப் போரில் காட்டிய வீரதீரச் செயல்களுக்காக இவருக்கு 1962-இல் பரம் வீர் சக்கரம் விருது வழங்கப்பட்டது.[3]
இதனையும் காண்க
[தொகு]அடிக்குறிப்புகள்
[தொகு]- ↑ Chakravorty 1995, ப. 58.
- ↑ Maninder Dabas (6 July 2017). "The Story of Subedar Joginder Singh - Who Crushed Waves Of Chinese Attacks At Bum La In Tawang In 1962". பார்க்கப்பட்ட நாள் 15 November 2018.
- ↑ "Param Vir Chakra winners since 1950 – Times of India". Times of India. Archived from the original on 18 October 2016. பார்க்கப்பட்ட நாள் 27 September 2016.
மேற்கோள்கள்
[தொகு]- Cardozo, Ian (2003). Param Vir : our heroes in battle (1st ed.). New Delhi: Lotus Collection. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788174362629.
- Chakravorty, B.C. (1995). Thapliyal, U.P. (ed.). Stories of heroism. New Delhi: Allied Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7023-516-3.
மேலும் படிகக
[தொகு]- Rawat, Rachna Bisht (2014), The Brave: Param Vir Chakra Stories, Penguin Books India Private Limited, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-01-4342-235-8
- Reddy, Kittu (2007), Bravest of the Brave: Heroes of the Indian Army (in English), New Delhi: Prabhat Prakashan, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-87100-00-3
{{citation}}
: CS1 maint: unrecognized language (link) - பரம் வீர் சக்கர விருது பெற்றவர்கள் பரணிடப்பட்டது 2020-09-18 at the வந்தவழி இயந்திரம்