சிவ் தாஸ் மீனா
சிவ்தாஸ் மீனா | |
---|---|
செயலர், தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | அக்டோபர் 5, 1964 இராசத்தான், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
கல்வி | முதுநிலை பொறியியல், இ. ஆ. ப |
இணையத்தளம் | [1] |
சிவ் தாஸ் மீனா (Shiv Das Meena) என்பவர் இந்திய ஆட்சிப் பணி அதிகாரி ஆவார். இவர் தமிழ் நாட்டரசின் 49 ஆவது தலைமைச் செயலாளராகப் பணியாற்றினார்.
இளமையும் கல்வியும்
[தொகு]சிவ் தாஸ் மீனா இராசத்தான் மாநிலத்தினைச் சேர்ந்தவர். இவர் செய்ப்பூரில் உள்ள மாளவியா மண்டலப் பொறியியல் கல்லூரியில் இளநிலை பொறியியல் பட்டமும் பின்னர் முதுநிலை பொறியியல் பட்டமும் பெற்றுள்ளார். இந்திய அரசு நடத்தும் குடிமைப்பணித் தேர்வில் தேர்ச்சிபெற்ற மீனா, 1989ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாகப் பதவியேற்றார்.[1]
ஆட்சிப் பணியில்
[தொகு]சிவ் தாஸ் மீனா 1989ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்ட துணை ஆட்சியராக ஆகத்து 21-ல் பயிற்சியினைத் துவங்கினார். கோவில்பட்டி, கோயம்புத்தூர் உதவி ஆட்சியர் மற்றும் கூடுதல் ஆட்சியராகப் பதவி வகித்த பின்னர் 1998ஆம் ஆண்டு நாகப்பட்டின மாவட்ட ஆட்சியராகப் பதவியேற்றார். சுமார் 33ஆண்டுக்கால ஆட்சிப் பணியில் மருத்துவப் பணிகள் இயக்குநர், வேளான் துறை ஆணையர், வணிகவரித் துறை ஆணையர், சென்னை பெருநகர் வளர்ச்சி குழும நிர்வாக இயக்குநர், கூட்டுறவுத்துறை உள்ளிட்ட முக்கியத்துறைகளின் பொறுப்புகளை வகித்துள்ளார். 2011-ல் சிறப்புத் திட்டச் செயலாக்க துறையின் செயலாளராகப் பணியாற்றிய இவர், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார். பொதுத்துறை செயலாளராகப் பணியாற்றிய மீனா, 2021 முதல் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் செயலாளராப் பணியாற்றி வருகிறார்.[2][3] தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த வெ. இறையன்பு, பணி ஓய்வு பெறுவதை அடுத்து, தமிழகத்தின் 49-வது தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்[4] 2024 ஆகஸ்ட் மாதம் ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை ஆணைய தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார்.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "யார் இந்த சிவதாஸ் மீனா IAS... இறையன்பு இடத்தை நிரப்புவாரா? ஸ்டாலின் கணக்கு!". Samayam Tamil. Retrieved 2023-06-29.
- ↑ "புதியவர்கள்" (in தமிழ்). தின மலர் (தஞ்சாவூர்: மலர்) (296): p. 01 & 05. 29.06.2023.
- ↑ https://www.tn.gov.in/detail_contact/21/3
- ↑ தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா நியமனம்!. தி இந்து தமிழ் நாளிதழ். 29 சூன் 2023.
{{cite book}}
: CS1 maint: year (link) - ↑ "புதிய தலைமை செயலாளராக முருகானந்தம்; தமிழக அரசு நியமனம்". தினமலர். https://www.dinamalar.com/news/tamil-nadu-news/-muruganandam-appointed-as-tamilnadu-chief-secretary--/3708270. பார்த்த நாள்: 19 August 2024.