வெ. இறையன்பு
வெ. இறையன்பு இ.ஆ.ப V. Irai Anbu, IAS | |
---|---|
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 7 மே 2021[1] | |
முன்னையவர் | இராச்சீவ் ரஞ்சன் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சூன் 16, 1963 காட்டூர், சேலம், தமிழ்நாடு, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
பெற்றோர் | வெங்கடாசலம் பேபி சரோஜா |
உறவினர் | திரு.திருப்புகழ் (ஓய்வு இ.ஆ.ப) |
கல்வி | இ. ஆ. ப |
இணையத்தளம் | தமிழ்நாடு தலைமை செயலகம் |
வெ. இறையன்பு (Dr V. Irai Anbu, IAS) இந்தியாவின் தமிழகத்தில் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவராவார். எழுத்தாளர், கல்வியாளர், சமூக ஆர்வலர் மற்றும் தன்னம்பிக்கை பேச்சாளர் என பன்முகங்களில் இவர் ஈடுபாட்டுடன் இயங்கினார்.[2][3] 2021 ஆம் ஆண்டு மே 7 ஆம் நாள் மு. க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் இறையன்பு தமிழக அரசின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.[4][5]
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]1963-ஆம் ஆண்டு சூன் மாதம் 16-ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் உள்ள காட்டூர் கிராமத்தில் வெங்கடாசலம்-பேபி சரோஜா தம்பதியருக்கு இறையன்பு மகனாகப் பிறந்தார்.[6] இறையன்புவின் அண்ணன் வெ. திருப்புகழும் ஓர் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஆவார். இவர் குசராத்து பணிப்பிரிவைச் சேர்ந்த இந்திய ஆட்சிப் பணியராகப் பணிபுரிந்தார். குசராத்தில் நடந்த நிலநடுக்கத்தின்போது திருப்புகழ் ஆற்றிய பணிகள் குறிப்பிடத்தக்கதாகும். நேபாள நாட்டின் மறுசீரமைப்பு பணிகளுக்காக அந்நாட்டின் திட்டக்குழு திருப்புகழை அழைத்து ஆலோசனை பெற்றது. இறையன்புவிற்கு பைங்கிளி மற்றும் இன்சுவை என்ற இரு சகோதரிகளும் உள்ளனர். முந்தையவர் கல்லூரிப் பேராசிரியராகவும், பிந்தையவர் எழுத்தாளர் மற்றும் ஆங்கிலப் பேராசிரியராகவும் உள்ளனர்.[7]
கல்வி
[தொகு]- விவசாயத்தில் இளங்கலைப் பட்டம், பல்கலைக்கழகத்திலேயே முதல் மாணவராகத் தேர்ச்சி
- வணிக மேலாண்மையில் முதுகலைப் பட்டம்
- ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம்
- தொழிலாளர் மேலாண்மையில் முதுகலைப் பட்டம்
- உளவியலில் முதுகலைப் பட்டம்
- வர்த்தக நிர்வாகத்தில் முனைவர் பட்டம்
- ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம்
- மேலாண்மையில் முதுமுனைவர் பட்டம்
- இந்தி மொழியில் பிரவீன்
- சமஸ்கிருதத்தில் கோவிதஹா
- 1987- ஆம் ஆண்டு நடைபெற்ற குடியுரிமைப் பணித் தேர்வில் அனைத்திந்திய அளவில் 15-ஆவது இடத்தையும், தமிழக அளவில் முதல் இடத்தையும் பிடித்தார்.
தொழில்
[தொகு]25.08.1988ஆம் நாளில் இந்திய ஆட்சிப்பணியில் சேர்ந்தார். (அடையாள எண் 031700) [8]
- உதவி ஆட்சியர், நாகப்பட்டினம். (01-07-1992 முதல் 01-07-1994 வரை [9] துணை ஆட்சியர் பணிக்காகத்தில் வெள்ள நிவாரணப் பணிகளில் முக்கியப் பங்காற்றினார். மாவட்டத்தில் கலவரங்களை கட்டுப்படுத்த அனைத்து முயற்சிகளையும் எடுத்தார். நாகூர் தர்காவில் கந்தூரி விழாவின் போது கலவரம் ஏற்படாமல் தடுக்கும் நடவடிக்கையாக ஓர் இரவு முழுவதும் தர்காவில் தங்கினார். மேலும், விநாயக சதுர்த்தி ஊர்வலத்தின் போது வன்முறையை தடுக்கும் விதமாக இவரும் ஊர்வலத்துடன் நடந்து சென்றார்.[10]
- கடலூர் மாவட்டத்தில் கூடுதல் ஆட்சியராக பணிபுரிந்த காலத்தில் கடலூர் மத்திய சிறையில் இருந்த கைதிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுத்தார். கைதிகளை சீர்திருத்துவதற்கான சிறந்த நடவடிக்கையாக இச்செயல் பார்க்கப்பட்டது. தென் ஆற்காடு மாவட்டத்தில் உள்ள நரிக்குறவர்களுக்கு மாவட்ட அதிகாரப் பரவலாக்கல் திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்க நடவடிக்கை எடுத்தார்.
- மாவட்ட ஆட்சியர், காஞ்சிபுரம்.
- 1995 ஆம் ஆண்டு தஞ்சாவூரில் 8 ஆவது உலகத் தமிழ் மாநாட்டை நடத்துவதற்கான சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். மாநாட்டின் போது அனைத்து குழுக்களின் ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றினார்.
- நன்னடத்தை அலுவலர், மதுரை (1999 முதல்)
- இணை ஆணையர், நகராட்சி நிர்வாகம்.
- இயக்குநர், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை.
- கூடுதல் செயலர், முதலமைச்சரின் செயலகம்.
- செயலர், செய்தி மற்றும் சுற்றுலாத்துறை.
- செயலர், சுற்றுலா மற்றும் பண்பாட்டுத்துறை.
- செயலர், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை.
- முதன்மைச் செயலர், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை.
- முதன்மைச் செயலர்/ஆணையர், பொருளியல் மற்றும் புள்ளியியல்துறை.
- முதன்மைச் செயலர்/இயக்குநர், தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம்.
- தலைமை இயக்குநர் (பயிற்சி) மற்றும் இயக்குநர், அண்ணா மேலாண்மை நிலையம்.
- அரசின் கூடுதல் தலைமைச் செயலர்/இயக்குநர், அண்ணா மேலாண்மை நிலையம் மற்றும் பயிற்சித் துறைத் தலைவர் (மார்ச் 01, 2019 முதல் 07.05.2021 வரை)
- தமிழக அரசின் தலைமைச் செயலாளர் (07.05.2021 [11] முதல் 30.06.2023 [12] வரை)
விருதுகள்
[தொகு]- சிறு சேமிப்பு வசூலிற்கான சிறந்த ஆட்சியர் விருது (1998)
- கொடி நாள் வசூலிற்கான விருது (1998 மற்றும் 1999)
- ‘வாய்க்கால் மீன்கள்’ நூலிற்கான தமிழக அரசின் சிறந்த கவிதைத் தொகுப்பு விருது (1996)
- ‘ஆத்தங்கரை ஓரம்’ நூலிற்காக திருப்பூர் தமிழ்ச் சங்கத்தின் சிறந்த நாவலுக்கான விருது (1998)
- சிறந்த கட்டுரைகளின் தொகுப்பிற்காக பாரத ஸ்டேட் வங்கியின் விருது (ஐ.ஏ.எஸ். தேர்வும் அணுகுமுறையும் மற்றும் ஏழாம் அறிவு ஆகிய நூல்கள் - 1998 மற்றும் 2003)
- ‘பத்தாயிரம் மைல் பயணம்’ நூலிற்காக திருப்பூர் தமிழ்ச் சங்கத்தின் சிறந்த நூலுக்கான விருது (2012)
- அமெரிக்காவில் நடைபெற்ற பன்னாட்டு மாநாட்டில் திருக்குறள் குறித்து சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரை முதல் பரிசைப் பெற்றது (2005)
- வாசிங்டனில் நடைபெற்ற பன்னாட்டு மாநாட்டில் புறநானூறு பற்றி சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரையும் முதல் பரிசைப் பெற்றது (2011)
- ‘இலக்கியத்தில் மேலாண்மை’ என்ற புத்தகத்திற்கு தினத்தந்தி நாளிதழ் இரண்டு லட்சம் ரூபாயுடன் கூடிய ‘2017-ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்’ என்ற இலக்கியப் பரிசை அளித்து சிறப்பித்தது. இந்த விருது மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள் கைகளால் வழங்கப்பட்டது.
சமூகப் பணிகள்
[தொகு]- விழுப்புரம் மாவட்டத்திலுள்ள முதலியார்குப்பம் கிராமம் சுனாமியால் பாதிக்கப்பட்டபோது மைசூர் சிட்டிசன்சு ஃபோரம் என்ற அமைப்பின் உதவியுடன் கிராமத்தை தத்தெடுத்து சீரமைத்தார். 4.5 கோடி ரூபாய் செலவில் ஃபோரம் அமைப்பு அனைவருக்கும் வீடு கட்டித் தந்தது.
- இரண்டாயிரத்துக்கும் மேலான கூட்டங்களில் பங்குகொண்டு மாணவர்களுக்கு அவர்களின் சமூகக் கடமைகளை உணர்த்தியுள்ளார். தினத்தந்தி, தினமலர், தினமணி, இந்து ஆகிய பத்திரிக்கைகள் ஏற்பாடு செய்த ஊக்கமளிப்புக் கூட்டங்களில் பேசி மாணவர்களுக்கு மாபெரும் ஆலோசனைகளை வழங்கியுள்ளார். இவரது எழுச்சியூட்டும் பேச்சுக்களின் மூலம் மாணவர்களைச் செதுக்கும் திட்டம் ஒன்றை குமுதம் வார இதழ் 20 கல்லூரிகளில் நிகழ்த்தியது.
- பள்ளிகளுக்கும், கிராமப்புற நூலகங்களுக்கும் நிறைய புத்தகங்களை வழங்கியுள்ளார். குடிமைப் பணிகளுக்கு எவ்வாறு தயார் செய்வது என்று இவர் எழுதிய புத்தகம் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு ஊக்கத்தையும், உத்வேகத்தையும் அளித்தது.
- பொதிகை தொலைக்காட்சியில் `கல்லூரிக் காலங்கள்’ என்ற தலைப்பில் ஒவ்வொன்றும் 30 நிமிடங்கள் ஓடக்கூடிய 500 நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். இது இளைஞர்களை மட்டுமல்லாமல் அனைத்துத் தரப்பினரையும் வெகுவாகக் கவர்ந்தது. வாரத்தில் ஐந்து நாட்கள் ஒளிபரப்பான இந்நிகழ்ச்சியை தமிழ்நாட்டிலுள்ளோர் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்கள் கண்டு களித்தனர்.[13]
- இறையன்பு இதுவரை 150 புத்தகங்களை பல்வேறு பிரிவுகளில் எழுதியுள்ளார்.[14]
- குடிமைப் பணிகளில் வெற்றி பெற்ற நூற்றுக்கும் மேலானவர்கள் இவரிடம் தனிப்பட்ட முறையில் ஆலோசனை பெற்றுள்ளார்கள். ஐம்பதுக்கும் மேலானவர்கள் இவரின் புத்தகங்களை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.
- அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்கத்தின் உதவியுடன் ஆட்டோ ஓட்டுநர்கள் தங்கள் நடத்தையை சீர்திருத்திக்கொள்ளவும், மது போன்ற தீய பழக்கங்களிலிருந்து விலகியிருப்பதற்கும் சிறப்புக் கூட்டங்கள் நடத்தி வருகிறார்.
- இவர் தனது புத்தகங்களின் மூலக் கிடைக்கும் உரிமை ஊதியத்தை நிலவொளிப் பள்ளிகளுக்கும், அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கும் கொடுத்துள்ளார். அதேபோல், முதலியார்குப்பத்தில் சுனாமி புனரமைப்பிற்கு மைசூரிலுள்ளவர்கள் உதவியதற்கு கைமாறாக அங்கு வெள்ளம் வந்தபோது தனது சேமிப்பிலிருந்து நிதியுதவியும் செய்துள்ளார். தினத்தந்தி வழங்கிய 2017-ஆம் ஆண்டிற்கான இலக்கிய விருதுக்கான இரண்டு லட்சம் ரூபாயை (வரி நீங்கலாக) மைலாப்பூரில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறையால் நடத்தப்படும் மாணவர் விடுதியில் நீர் சுத்திகரிப்பு அமைப்பை நிறுவுவதற்காக நன்கொடையாக அளித்துள்ளார்.
எழுதியுள்ள நூல்கள்
[தொகு]- இலக்கியத்தில் மேலாண்மை
- ஐ.ஏ.எஸ். தேர்வும் அணுகுமுறையும்
- படிப்பது சுகமே
- சிற்பங்களைச் சிதைக்கலாமா
- பணிப் பண்பாடு
- ஆத்தங்கரை ஓரம்
- சாகாவரம்
- வாய்க்கால் மீன்கள்
- நரிப்பல்
- Steps to Super Student
- சிம்மாசன சீக்ரட்
- துரோகச் சுவடுகள்
- ஏழாவது அறிவு பாகம்-1
- ஏழாவது அறிவு பாகம்-2
- ஏழாவது அறிவு பாகம்-3
- அரிதாரம்
- ஐ.ஏ.எஸ். வெற்றிப் படிக்கட்டுகள்
- பூபாளத்திற்கொரு புல்லாங்குழல்
- அழகோ அழகு
- சின்னச் சின்ன வெளிச்சங்கள்
- உள்ளொளிப் பயணம்
- ஓடும் நதியின் ஓசை பாகம்-1
- ஓடும் நதியின் ஓசை பாகம்-2
- மென்காற்றில் விளை சுகமே
- முகத்தில் தெளித்த சாரல்
- முடிவு எடுத்தல்
- நேரம்
- காகிதம்
- வனநாயகம்
- வரலாறு உணர்த்தும் அறம்
- ஆர்வம்
- ஆணவம்
- மருந்து
- மழை
- திருவிழாக்கள்
- இணையற்ற இந்திய இளைஞர்களே
- ரயில் பயணம்
- விவாதம்
- பொறுமை
- எது ஆன்மிகம்
- வைகை மீன்கள்
- பூனாத்தி
- வேடிக்கை மனிதர்கள்
- முதல் தலைமுறை
- நெஞ்சைத் தொட்டதும் சுட்டதும்
- வாழ்க்கையே ஒரு வழிபாடு
- சறுக்கு மரம்
- உழைப்பால் உயர்வோம்
- சின்னச் சின்ன மின்னல்கள்
- திருப்பாவைத் திறன்
- திருவெம்பாவை
- அன்புள்ள மாணவனே
- உச்சியிலிருந்து தொடங்கு
- தர்மம்
- இயற்கை
- மலர்கள்
- முதிர்ச்சி
- நட்பு
- தரிசனம்
- சந்தித்ததும் சிந்தித்ததும்
- Ancient Yet Modern – Management Concepts in Thirukkural
- சுய மரியாதை
- இல்லறம் இனிக்க
- எது சரியான கல்வி
- அச்சம் தவிர்
- அவ்வுலகம்
- நின்னிலும் நல்லன்
- போர்த்தொழில் பழகு
- பத்தாயிரம் மைல் பயணம்
- வையத் தலைமைகொள்
- சிதறு தேங்காய்
- வியர்வைக்கு வெகுமதி
- மேலே உயரே உச்சியிலே
- மனிதன் மாறிவிட்டான்
- உன்னோடு ஒரு நிமிஷம்
- எப்போதும் இன்புற்றிருக்க
- உலகை உலுக்கிய வாசகங்கள்
- கேள்வியும் நானே பதிலும் நானே
- செய்தி தரும் சேதி
- Comparing Titans – Thiruvalluvar and Shakespeare
- Random Thoughts
- Effective Communication : The Kambar Way
- கல்லூரி வாழ்க்கை
- நினைவுகள்
- பிரிவு
- சேமிப்பு
- சிக்கனம்
- சுத்தம்
- தாமதம்
- தவம்
- தூக்கம்
- உடல்
- காதல்
- கருணை
- தனிமை
- வாழ்க்கை
- வைராக்கியம்
- அழகு
- நம்பிக்கை
- மூளைக்குள் சுற்றுலா
- காற்றில் கரையாத நினைவுகள்
- நமது அடையாளங்களும் பெருமைகளும்
- மனிதர்களை வாசிக்கிறேன்
- உயர்ந்த உணவு
- தித்திக்கும் திருமணம்
- என்ன பேசுவது எப்படிப் பேசுவது
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Dr V. Irai Anbu, IAS.,". தமிழ்நாடு அரசு
- ↑ "லாக் டௌன் நாள்களும், ஓஷோவின் வாழ்வில் ஒரு நாளும்!"- வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ்". விகடன். 14 ஏப்ரல் 2020. https://www.vikatan.com/lifestyle/miscellaneous/iraianbu-ias-sharing-motivational-stories-to-handle-this-lockdown.
- ↑ "வெ. இறையன்பு". ஒன் இந்தியா. 15 சூலை 2015. http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=10161.
- ↑ "தமிழக தலைமைச் செயலாளராக இறையன்பு நியமனம்". Dinamani. பார்க்கப்பட்ட நாள் 2021-05-07.
- ↑ Jesudasan, Dennis S. (7 May 2021). "Irai Anbu made Chief Secretary; 4 Secretaries to assist CM" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/tamil-nadu/irai-anbu-made-chief-secretary-4-secretaries-to-assist-cm/article34510150.ece.
- ↑ Irai Anbu to fine tune TN administration?. The Indian Express. 8 May 2021.
Born on June 16, 1963 in Salem district
- ↑ "இரு மகன்களையும் ஐ.ஏ.எஸ் ஆக்கிய சாமானியர்.. தலைமைச் செயலாளர் இறையன்புவின் தந்தைக்கு ராயல் சல்யூட்". Asianet News Network Pvt Ltd. பார்க்கப்பட்ட நாள் 2021-06-07.
- ↑ https://easy.nic.in/civilListIAS/YrCurr/AgeListCL.asp?Slab=8&Cadre=TN&AsOnDate=01/01/2023
- ↑ https://supremo.nic.in/ERSheetHtml.aspx?OffIDErhtml=MTQ5OTI=&PageId=
- ↑ "About Irai Anbu IAS @youtube/ABP Nadu". YouTube.
- ↑ தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக இறையன்பு நியமனம். இந்து தமிழ் திசை. 7 மே.
{{cite book}}
: Check date values in:|date=
(help) - ↑ தினமணி, 30-சூன்-2023, பக்.7
- ↑ "Irai Anbu to fine tune TN administration?". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2021-06-13.
- ↑ "From Agricultural Officer to Tamil Nadu's New Chief Secretary...Life journey of V Irai Anbu IAS!". The New Stuff (in ஆங்கிலம்). 2021-05-07. பார்க்கப்பட்ட நாள் 2021-07-03.