உள்ளடக்கத்துக்குச் செல்

சிவா பசுபதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிவா பசுபதி
சனாதிபதி வழக்கறிஞர்
இலங்கையின் 34-ஆவது சட்டமா அதிபர்
பதவியில்
5 சூன் 1975 – 1988
முன்னையவர்விக்டர் தென்னக்கூன்
பின்னவர்பண்டிக்கோரலலாகே சுனில் சந்திரா டி சில்வா
இலங்கையின் 28-ஆவது தலைமை வழக்குரைஞர்
பதவியில்
1974–1975
முன்னையவர்ஆர். எஸ். வனசுந்தரா
பின்னவர்ஐ. எஃப். பி. விக்கிரமநாயக்க
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
சிவகுமாரன் பசுபதி

(1928-08-26)ஆகத்து 26, 1928
இறப்புசனவரி 17, 2025(2025-01-17) (அகவை 96)
சிட்னி, ஆத்திரேலியா
துணைவர்புனிதவதி
உறவுகள்உடன் பிறந்தோர்: புவனேசுவரி இரத்தினசபாபதி, வைத்தீசுவரன் பசுபதி, சாமி பசுபதி, ஜெகா பசுபதி, யோகு பசுபதி
முன்னாள் மாணவர்ஆனந்தா கல்லூரி
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
இலங்கைப் பல்கலைக்கழகம்
தொழில்வழக்கறிஞர்
இனம்இலங்கைத் தமிழர்

தேசமான்ய சிவா பசுபதி (Shiva Pasupati, 26 ஆகத்து 1928 – 17 சனவரி 2025) இலங்கைத் தமிழ் முன்னணி வழக்கறிஞரும், சனாதிபதி வழக்கறிஞரும், முன்னாள் இலங்கை அரச தலைமை வழக்குரைஞரும், இலங்கையின் முன்னாள் சட்டமா அதிபரும் ஆவார்.

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

சிவகுமாரன் பசுபதி என்ற இயற்பெயர் கொண்ட சிவா பசுபதி, மருத்துவர் வி. டி. பசுபதி, கமலாம்பிகை ஆகியோருக்குப் பிறந்தார்.[1][2] கொழும்பு, ஆனந்தா கல்லூரி, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்ற சிவா பசுபதி,[3][2] இலங்கைப் பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் பட்டம் பெற்றார்.[4] பின்னர் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தில் பன்னாட்டுச் சட்டத்தில் திப்புளோமா பட்டம் பெற்றார்.[4] சிவா பசுபதி ஈழகேசரி பத்திரிகையின் நிறுவனர் நா. பொன்னையாவின் மகள் புனிதவதியைத் திருமணம் செய்தார்.

பணி

[தொகு]

பசுபதி அரச வழக்குரைஞர்களின் இயக்குநராகப் பணியாற்றினார்.[5] 1974 முதல் 1975 வரை அரசுத் தலைமை வழக்குரைஞராகவும்,[6] பின்னர் அவர் 1975 முதல் 1988 வரை சட்டமா அதிபராகவும் பணியாற்றினார்.[1][2][7] பசுபதி ஒரு சனாதிபதி வழக்கறிஞராவார்.[1]

பசுபதிக்கு 1989 ஆம் ஆண்டு இலங்கையின் இரண்டாவது மிக உயர்ந்த தேசிய விருதான தேசமான்ய பட்டம் வழங்கப்பட்டது.[8]

பிற்கால வாழ்க்கை

[தொகு]

சிவா பசுபதி சட்டமா அதிபர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் ஆத்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்து சிட்னியில் வாழ்ந்து வந்தார். 2002இல், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் ரணில் விக்கிரமசிங்கவின் அரசுக்கும் இடையில் பேச்சுகள் தொடங்கிய போது, விடுதலைப் புலிகளின் பேச்சுக் குழுவுக்கு உதவவும் ஆலோசனைகளை வழங்கவும் விடுதலைப் புலிகளால் நிறுவப்பட்ட அரசியல் விவகாரக் குழுவிற்கு சிவா பசுபதி சட்ட ஆலோசகராகப் பணியாற்றினார்.[9][10] 2002-2006 காலப்பகுதியில் நோர்வே தலைமையிலான அமைதிப் பேச்சுகளில் பங்கேற்றார்.[11][12][13]

பசுபதி ஆத்திரேலிய மனித உரிமைகள் அமைப்பின் தலைவராகவும், நியூ சவுத் வேல்சு மாநிலத் தமிழ் மூத்தோர் சங்கத்தின் தலைவராகவும் இருந்துள்ளார்.[14][15]

இறப்பு

[தொகு]

சிவா பசுபதி 2025 சனவரி 17 அன்று சிட்னியில் தனது 96-ஆவது அகவையில் காலமானார்.[16]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 Arumugam, S. (1997). Dictionary of Biography of the Tamils of Ceylon. p. 131.
  2. 2.0 2.1 2.2 Maneckshaw (23 April 2013). "The house that became the Uthayan office". Ceylon Today. http://www.ceylontoday.lk/69-30445-news-detail-the-house-that-became-the-uthayan-office.html. 
  3. Hettiarachchi, Kumudini (11 November 2012). "Sivagurunathan of Ananda: He came from Jaffna". The Sunday Times (Sri Lanka). http://www.sundaytimes.lk/121111/plus/sivagurunathan-of-ananda-he-came-from-jaffna-19756.html. 
  4. 4.0 4.1 "'Shiva Pasupati' - Distinguished old boy of Jaffna Hindu". JaffnaHindu.Org.
  5. "In Re Vincent and Benjamin". LawNet.
  6. "Permanent Holders of the Office of Solicitor General". Attorney-General's Department (Sri Lanka).
  7. "Permanent Holders of the Office of Attorney General". Attorney-General's Department (Sri Lanka).
  8. "National Awards". ஜனாதிபதி செயலகம்.
  9. "LTTE leadership in a state of dilemma". டெயிலி மிரர் (இலங்கை). 5 January 2007 இம் மூலத்தில் இருந்து 3 July 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130703021933/http://archives.dailymirror.lk/2007/01/05/opinion/02.asp. 
  10. "President facing deadly enemy within". The Sunday Times (Sri Lanka). 7 May 2006. http://www.sundaytimes.lk/060507/columns/political.html. 
  11. "Mahinda talks to Prabha via Uthayan". The Nation (Sri Lanka). 25 June 2006. http://www.nation.lk/2006/06/25/politics3.htm. 
  12. "Solheim, Canadians join as LTTE's Paris meet concludes". தமிழ்நெட். 28 August 2003. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=9739. 
  13. "Paris meeting 'Positive and Innovative'". தமிழ்நெட். 30 August 2003. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=9759. 
  14. "Former Attorney General Shiva Pasupati highlights Human rights violations by Sri Lankan Government". Tamil Sydney.
  15. "Mr Shiva Pasupati". Tamil Senior Citizens' Association (NSW).
  16. "முன்னாள் சட்டமா அதிபர் சிவா பசுபதி காலமானார்!". தினகரன். 2025-01-18. Retrieved 2025-01-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவா_பசுபதி&oldid=4192255" இலிருந்து மீள்விக்கப்பட்டது