உள்ளடக்கத்துக்குச் செல்

சிவசேத்திரக் கோவை வெண்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிவசேத்திரக் கோவை வெண்பா[1] என்னும் நூல் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த குரு நமசிவாயர் என்பவரால் எழுதப்பட்டது.

விருத்தாச்சல புராணம் 1908 ஆம் ஆண்டுப் பதிப்பில் “சிதம்பரத்தில் தெய்வீகமுற்று விளங்கிய ஒரு நமசிவாய தேவ சுவாமிகள் அருளிச் செய்த சிவக்ஷேத்திரக் கோவைத் திருவெண்பா” என்னும் குறிப்பு உள்ளது கொண்டு இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. குரு நமசிவாயரின் ஆசிரியர் ‘ஓம் நமசிவாய குரு’. இவரது பெயர் இந்த நூலின் ஆறாம் பாடலில் வருகிறது. இதனால் இந்த நூல் செய்தவர் குரு நமசிவாயரே என்பது உறுதியாகிறது.

இதில் என்பது வெண்பாக்கள் உள்ளன. இவை திருமுது குன்றம் சிவபெருமானைப் போற்றுகின்றன.

சில பாடல்கள்

[தொகு]

(பொருள்நோக்கில் பிரித்துத் தரப்பட்டுள்ளன)

நீற்றை அணிந்து நினைந்துருகி நெஞ்சமே
போற்று செழுந்திருவின் பூமானும் – காற்றும்
கலைக்கிழத்திக் கோனும் கருதரிய கொல
மலைக்கிழத்தி கோமான் வரும்.

மன் அருணையோ நமசிவாய குருராயன் அது
பொன் அடியில் என்னைப் பொருத்துவாய் – துன்னும் மலர்ப்
பாதா, மலைக்கிழத்தி பாகா, பரமசிவ
நாதா, பழமலை வாணா.

விருப்பாய் முதுகுன்றின் மெய் ப்துமை கேளீர்
நெருப்பா மலையொன்று நிற்கும் – பொருப்பில் ஒரு
பச்சைப் கொடியும் படரும் அதனருகே
உச்சிக்கே ஆறும் ஓடும்.

கருவிநூல்

[தொகு]
  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம், பதிப்பு 2005

அடிக்குறிப்பு

[தொகு]
  1. நூலின் பெயர் சிவக்ஷேத்திரக் கோவை வெண்பா எனவே உள்ளது.