சிறிய டையோமெதி தீவு
உள்ளூர் பெயர்: Iŋaliq | |
---|---|
சிறிய டையோமெதி தீவின் கடற்கரை கிராமம் | |
புவியியல் | |
அமைவிடம் | பெரிங் நீரிணை |
ஆள்கூறுகள் | 65°45′15″N 168°55′15″W / 65.75417°N 168.92083°W |
தீவுக்கூட்டம் | டையோமெதி தீவுகள் |
பரப்பளவு | 2.8 sq mi (7.3 km2) |
உயர்ந்த ஏற்றம் | 494 m (1,621 ft) |
நிர்வாகம் | |
மக்கள் | |
மக்கள்தொகை | 115[1] |
அடர்த்தி | 48 /sq mi (18.5 /km2) |
மேலதிக தகவல்கள் | |
நேர வலயம் |
|
சிறிய டையோமெதி தீவு (Little Diomede Island or “Yesterday Isle”)[2] அமெரிக்க ஐக்கிய நாட்டின் அலாஸ்காவின் வடகிழக்கில், பெரிங் கடலில் உள்ள பெரிங் நீரிணையில் அமைந்துள்ளது. இதனருகே உருசியாவின் தூரக்கிழக்கில் உள்ள சைபீரியாவிற்கு கிழக்கில் அமைந்த பெரிய டையோமெதி தீவு உள்ளது.
1867-ஆம் ஆண்டில் அலாஸ்காவை ருசியா பேரரசரிடமிருந்து, அமெரிக்க ஐக்கிய நாடுகள் விலைக்கு வாங்கியது. ருசியாவின் பெரிய டையோமெதி தீவிற்கும், அமெரிக்காவின் சிறிய டையோமெதி தீவிற்கும் இடையே 2.4 மைல் தொலைவு உள்ளது. சிறிய டையோமெதி தீவிலிருந்து 1.3 கிலோ மீட்டர் தொலைவில், அமரிக்கா-ருசியா இடையே பன்னாட்டுக் கடல் எல்லை உள்ளது.
சிறிய டையோமெதி தீவு 2.8 சதுர மைல் பரப்பளவு கொண்டது. இதனருகில் அமெரிக்காவையும், உருசியாவையும் பிரிக்கும் பன்னாட்டுக் கடல் எல்லை உள்ளது. 2010-ஆம் ஆண்டில் இத்தீவின் மக்கள் தொகை 115 மட்டுமே.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Local Economic Development Plan for Diomede, 2012–2017, citing 2010 U.S. census (and this was a decline since the 2000 census). பரணிடப்பட்டது 2016-12-02 at the வந்தவழி இயந்திரம்.
- ↑ The American Local History Network பரணிடப்பட்டது 2012-04-24 at the வந்தவழி இயந்திரம்