பெரிங் நீரிணை
Appearance


பரணிடப்பட்டது 2009-07-26 at the வந்தவழி இயந்திரம்

பெரிங் நீரிணை ஆசியாவின் இரசியாவுக்கும் வட அமெரிக்காவின் அலாஸ்காவுக்கும் இடையிலுள்ள நீரிணையாகும். வட துருவத்துக்கு அருகில் அமைந்துள்ளது. இந்நீரீணை ஏறத்தாழ 92 கி.மீ அகலமானது. இதன் சராசரி ஆழம் 30 முதல் 50 மீ ஆகும். இந்நீரிணையை செமியோன் டெஸ்னெவ் 1648 இல் கடந்தார். ஆயினும் 1728 இல் இந்நீரிணையைக் கடந்த பெரிங் என்பவரது பெயரே இந்நீரிணைக்குச் சூட்டப்பட்டது. முற்காலத்தில் இந்நீரிணைக்குக் குறுக்காக நிலத்தொடர்பு அல்லது பனி உறைந்திருந்ததால் மனிதரும் மிருகங்களும் கடக்கக் கூடியதாக இருந்ததாக அறிவியலாளர்கள் கருதுகின்றனர். இதுவே பெரிங் பாலம் என்றழைக்கப்படுகிறது. இந்நீரிணைக்குக் குறுக்காக பாலம் அல்லது நிலக்கீழ் சுரங்கம் அமைப்பதற்கான யோசனைகள் உள்ளன.
