உள்ளடக்கத்துக்குச் செல்

சின்னதும்பூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சின்னதும்பூர்
—  கிராமம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் நாகப்பட்டினம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் பி. ஆகாசு, இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


சின்னதும்பூர் (Sinna Thumbur) நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் வட்டத்திலுள்ள ஒரு கிராமம்.[4] மொத்த ஊரின் பரப்பளவு 100 ஏக்கர். மொத்த மக்கள் தொகை 500. இவ் வூர் வேளாங்கண்ணிக்கு மிக அருகில் உள்ளது. இங்குள்ள மக்களின் பிரதான தொழில் விவாசாயம்.

விஸ்வநாதர் கோவில்

[தொகு]

இங்கு ஒரு பழைமை வாய்ந்த சிவன் கோவில் (விஸ்வநாதர் கோவில்) உள்ளது[5]. இது சோழர் காலத்தில் கட்டப்பட்டது என்பதற்கு சான்றாக அங்கு கல்வெட்டு உள்ளது. இந்த கோவிலின் மூலவராக விஸ்வநாதரும், பார்வதியும் உள்ளனர். அவர்களுக்கு எதிரே ஒரு நந்தி சிலையும் உள்ளது. கோவிலை சுற்றிப் பெரிய மதில் சுவரும், உள்ளே மூலவரைச் சுற்றி வினாயகர், முருகன், அய்யானார், சேவிராயர் எனச் சிறுசிறு சன்னிதிகள் உள்ளன. இவையனைத்தும் கோவிலில் சுற்றி இருந்தாலும் கோபுரம் தான் கோவிலின் சிறப்பு. பெரிய கருங்கல்லை கொண்டு 50அடி உயரத்தில் உள்ளது. இந்த கோவில் சுமார் 30ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருந்தது. 2008 ஆம் ஆண்டு ஒரு சிவனடியார் இதன் கோவில் திருப்பணிகளை மேற்கொண்டு கும்பாபிஷேகமும் நடத்தினார். மேலும் இந்த கோவிலில் அந்த காலத்து குகை ஒன்று உள்ளது. இது தஞ்சை பெரிய கோவிலுக்கு அந்த காலத்தில் செல்லும் வழியென்ற செய்தி வழங்கப்படுகிறது. மாதம் தோறும் சிவராத்தி அன்று கோவிலில் சிறப்பான பூஜைகளும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். மிகவும் சக்தி வாய்ந்த கோவில் என்பது இந்தப் பகுதி மக்களின் நம்பிக்கை. கோவில் முகவரி: சின்னதும்பூர், கீழ்வேளுர் தாலுக்கா, நாகப்பட்டினம் மாவட்டம்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2013-10-11.
  5. http://temple.dinamalar.com/ListingMore.php?c=3&D=57&Page=11
"https://ta.wikipedia.org/w/index.php?title=சின்னதும்பூர்&oldid=3554622" இலிருந்து மீள்விக்கப்பட்டது