உள்ளடக்கத்துக்குச் செல்

சிட்டுமலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிட்டுமலை (Chittumala) கொல்லம் மாவட்டத்தில் உள்ள ஒரு நகர்ப்புற குடியேற்றப் பகுதியாகும். இது கல்லாடா நதியை ஒட்டி தேசிய நெடுஞ்சாலை 183 இன் குந்தாரா - பரணிக்காவு வழித்தடத்திற்கிடையே அமைந்துள்ளது. சிட்டுமலை என்ற பெயர் சிட்டா என்ற மூதாட்டியின் பெயரிலிருந்து வந்ததாக கூறப்படுகிறது.

அஷ்டமுடி ஏரியின் தென்கரையில் அமைந்துள்ள 13 கிராம பஞ்சாயத்துகளை உள்ளடக்கிய சிட்டுமலை ஊராட்சி ஒன்றியத்தின் தலைமையகம் சிட்டுமலை ஆகும். [1] இது பழமையான ஸ்ரீ துர்கா தேவி கோயில் மற்றும் சிட்டுமலை சிரா என்ற ஏரி ஆகிய இரு பிரபலமான இடங்கள் இங்கு உள்ளன. [2] [3]

ஸ்ரீ துர்கா தேவி கோவில்

அமைவிடம் மற்றும் சாலை வசதிகள்

[தொகு]

இது கொல்லம் நகரில் இருந்து 23 கி.மீ தொலைவிலும், குந்தாராவில் இருந்து 9 கிமீ தொலைவிலும், பரணிக்காவில் இருந்து 8 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. இது கல்லடா ஆறு, அஷ்டமுடி ஏரி மற்றும் சிட்டுமலை சிரா ஏரி ஆகிய மூன்று நீர்நிலைகளால் சூழப்பட்டுள்ளது.

சிட்டுமலையை இணைக்கும் முக்கிய போக்குவரத்தாக சாலை போக்குவரத்து உள்ளது. இந்த கிராமம் குந்தாரா, கொல்லம், கருநாகப்பள்ளி, செங்கனூர் போன்ற நகரங்களுடன் தனியார் பேருந்துகள் மற்றும் கேரள மாநில சாலை போக்குவரத்து கழக பேருந்துகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. [4] கொல்லம்-செங்கோட்டை வழித்தடத்திலுள்ள உள்ள குந்தாரா ரயில் நிலையம் (9 கிமீ) அருகிலமைந்த இரயில் நிலையமாகும்.

கேரள மாநிலத்தின் நீர் போக்குவரத்து துறையின் போக்குவரத்து சேவைகள் அருகிலுள்ள மன்ரோ தீவில் இருந்து கிடைக்கின்றன. [5]

சிட்டுமலைக்கு அருகிலுள்ள விமான நிலையம் 73 கி.மீ தொலைவிலுள்ள திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம் ஆகும்.

சிட்டுமலை ஊராட்சி ஒன்றியம்

[தொகு]

கேரளாவில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் சிட்டுமலையும் ஒன்றாகும். சிறந்த உள்ளாட்சி சுயநிர்வாக அமைப்பிற்கான பல விருதுகளையும் சுவவராச்சிய கோப்பையையும் பலமுறை பெற்றுள்ளது [1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Local Self Government Department | Local Self Government Department". lsgkerala.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-23.
  2. mohammed, sham (2015-11-04). "Kunnathur's hopes 'rise' with revival of Chittumala". Deccan Chronicle (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-10-23.
  3. "Fig.5. Bathymetric map of Ashtamudi lake, Sasthamkotta lake, Chelupola,..." ResearchGate (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-10-23.
  4. "Popular Chengannur-Kollam KSRTC services disrupted due to insufficient staff". Mathrubhumi (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-10-23.
  5. "An incredible Ride". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2021-10-23.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிட்டுமலை&oldid=4097716" இலிருந்து மீள்விக்கப்பட்டது