சாய் தீனா
சாய் தீனா | |
---|---|
பிறப்பு | எம். ஜி. சாய் தீனா |
மற்ற பெயர்கள் | தீனா, பாக்சர் தீனா, ஸ்டண்ட் தீனா |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2004–தற்போது வரை |
சாய் தீனா (Sai Dheena) என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் 2004 முதல் தமிழ் படங்களில் நடித்துவருகிறார்.[1][2] இவர் திமிரு புடிச்சவன் (2018), வாண்டு (2019) ஆகிய படங்களில் எதிர்நாயகன் பாத்திரத்தில் நடித்தார்.[3][4]
தொழில்
[தொகு]சாய் தீனா ஒரு விளம்பரப்பலகை கலைஞராக பணியாற்றினார். படங்களில் துணை வேடங்களில் நடித்த இவர் பின்னர் அடியாள் வேடங்களில் நடித்தார்.[5] கமல்ஹாசனின் விருமாண்டி (2004) திரைப்படத்தில் அடியாள் பாத்திரத்தில் நடிக்க வந்த இவரை கமல்ஹாசன் சிறை வார்டனாக அறிமுகப்படுத்தினார். அதன்பிறகு இவர் ஷங்கரின் எந்திரன் (2010), அட்லீயில் தெறி (2016), வெற்றிமாறனின் வட சென்னை (2018) உள்ளிட்ட படங்களில் நடித்தார்.[2][6] திமிரு புடிச்சவன் (2018) படத்ததில் எதிர்நாயபனாக நடித்தார்.[7] நியூ இந்தியன் எக்ஸ்பிரசில் சாகா (2019) திரைப்படம் குறித்து எழுதிய ஒர, விமர்சகர் "அவர் இந்த பாத்திரத்தில் மிகச்சிறப்பாகவும், தீவிரத்துடனும் நடித்துள்ளார்" என்று குறிப்பிட்டார்.
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]காதல் (2004) படத்தில் நடித்த விருச்சககாந்த்த் சென்னையில் உள்ள கோயில்களில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் 2017 இல், அவருக்கு பண உதவி செய்ததற்காக தீனா ஊடகங்க கவனம் பெற்றார். தீனா, நடிகர்கள் அபிசரவணன், மோகன் ஆகியோருடன் சேர்ந்து விருச்சக்காந்துக்கு உதவினார்.[8] கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டபோது, தீனா 250 குடும்பங்களுக்கு அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் கொடுத்து உதவியது செய்தியானது.[9]
திரைப்படவியல்
[தொகு]- குறிப்புகள் ஏதும் குறிக்கப்படாவிடாத, எல்லா படங்களும் தமிழ் படங்களாகும்.
ஆண்டு | படம் | பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
2004 | விருமாண்டி | சிறை வார்டன் | |
2006 | புதுப்பேட்டை | அன்புவின் உதவியாளர் | |
2010 | எந்திரன் | ||
கற்றது களவு | பொட்டு | ||
ஆரண்ய காண்டம் | கஜபதி | ||
2014 | பர்மா | தரகர் ரவி | |
2015 | கொம்பன் | சந்தனக்கலை | |
இன்று நேற்று நாளை | மார்த்தண்டத்தின் அடியாள் | ||
கிருமி | சங்கர் | ||
வாலு | தீனா | ||
பூலோகம் | |||
2016 | ஜில்.ஜங்.ஜக் | அட்டாக் ஆல்பர்ட் | [10] |
கணிதன் | பாய் | ||
தேறி | ரோகு (புலிப்பு) | ||
2017 | மாநகரம் | பி. கே. பாண்டியனின் அடியாள் | |
தேரு நாய்கள் | |||
ஹரஹர மஹாதேவகி | |||
மெர்சல் | கைதி | ||
கொடிவீரன் | காவல்துறை அதிகாரி | ||
மாயவன் | தீனா | ||
2018 | மன்னர் வகையறா | ||
பக்கா | |||
செயல் | சேவா | ||
அண்ணனுக்கு ஜே | செல்வா | ||
வட சென்னை | "ஜாவா" பழனி | [11] | |
திமிரு புடிச்சவன் | மீசை பத்மா | ||
துப்பாக்கி முனை | பிரம்மராஜாவின் அடியாள் | ||
2019 | வாண்டு | தீனா | |
சகா | சிறை வார்டன் | ||
பிகில் | தீனா | ||
2020 | பல்லு படாம பாத்துக்க | ||
2021 | மாஸ்டர் | சிறார் பள்ளி வார்டன் | |
கபடதாரி | மெக்கானிக் பாபு | ||
ரிபப்லிக் | தெலுங்கு படம் | ||
கால் டாக்சி | குற்றவாளி |
குறிப்புகள்
[தொகு]
- ↑ Karikalan, R. Senthil. "'அவங்க ஏமாத்திட்டாங்க... அதான் ஜெயிச்சேன்..!' - 'ஸ்டன்ட்' தீனாவின் தன்னம்பிக்கை". ஆனந்த விகடன்.
- ↑ 2.0 2.1 "Sai Dheena: அனாதையாக இருந்த எங்களுக்கு வாழ்வு கொடுத்தார் விஜய்: வில்லன் நடிகர்!". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா.
- ↑ S, Srivatsan (16 November 2018). "'Thimiru Pudichavan' review: a tedious and almost forgettable film" – via www.thehindu.com.
- ↑ Subramanian, Anupama (26 January 2019). "A film on street fights". Deccan Chronicle.
- ↑ "How to make Simbu angry? - Stunt Dheena's Exclusive interview". ஆனந்த விகடன். 26 October 2016.
- ↑ "അന്ന് ആ പെണ്കുട്ടി പ്രണയാഭ്യര്ഥന നിരസിച്ചതിനാല് ഇന്ന് ഞാനൊരു നടനായി". Mathrubhumi (in Malayalam).
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Subramanian, Anupama (17 November 2018). "Thimiru Pudichavan movie review: Could be an engaging thriller, if more thoughtful". தி டெக்கன் குரோனிக்கள்.
- ↑ "பிச்சை எடுத்த காமெடியனுக்கு உதவி செய்து ஹீரோவாக உயர்ந்த வில்லன்! - Samayam Tamil". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 1 July 2017.
- ↑ "250 குடும்பங்களுக்கு உதவிய நடிகர் சாய் தீனா". மாலை மலர். 1 April 2020.
- ↑ Subramanian, Anupama (13 February 2016). "Jil Jung Juk movie review: Enjoyable only in parts". Deccan Chronicle.
- ↑ Subramanian, Anupama (19 October 2018). "Vada Chennai movie review: Dhanush shines in an author-backed role". Deccan Chronicle.