சர்தானா இயற்கை பூங்கா
Appearance
சர்தானா இயற்கை பூங்கா | |
---|---|
திறக்கப்பட்ட தேதி | 1984 |
அமைவிடம் | சூரத், குசராத்து, இந்தியா |
நிலப்பரப்பளவு | 81 ஏக்கர் |
சர்தானா இயற்கை பூங்கா என்பது இந்தியாவின் குஜராத்தின் சூரத்தில் அமைந்துள்ள சூரத் மாநகராட்சிக்குச் சொந்தமான மற்றும் மாநகராட்சியால் நிர்வகிக்கப்படும் ஒரு விலங்கியல் பூங்கா ஆகும்.
இது மாநிலத்தின் மிகப்பெரிய விலங்கியல் பூங்காவாகும். குசராத்தின் மிகப் பழமையான விலங்கியல் பூங்காக்களில் ஒன்றாகும். இது 81 ஏக்கர் பரப்பளவில் வடக்குப் பகுதியில் தபி நதியையும் அதன் தெற்கே சூரத் கம்ரேஜ் சாலையும் உள்ளது.
இந்த மிருகக்காட்சிசாலை 1984-ல் நிறுவப்பட்டது. இது தெற்கு குஜராத் பிராந்தியத்தில் முதல் மிருகக்காட்சிசாலை மற்றும் குஜராத்தின் கால்நடை இனப்பெருக்க மையமாகும். மிருகக்காட்சிசாலையில் சிங்கங்கள், வங்காளப் புலி, இமயமலை கருப்புக் கரடி மற்றும் வெள்ளை மயில் ஆகியவை வளர்க்கப்படுகின்றன.[1][2][3][4]