சரசுவதி வித்யார்த்தி
சரசுவதி வித்யார்த்தி | |
---|---|
பின்னணித் தகவல்கள் | |
பிறப்பு | 1 மே 1963 |
பிறப்பிடம் | இந்தியா |
இசை வடிவங்கள் | கருநாடக இசை, இந்திய பாரம்பரிய இசை |
தொழில்(கள்) | வாய்ப்பாட்டுக் கலைஞர், கல்வியாளர் |
சரசுவதி வித்யார்த்தி (Saraswati Vidyardhi) (பிறப்பு:1963 மே 1) இவர் இந்தியாவின் ஆந்திராவைச் சேர்ந்த கருநாடக பாடகரும் மற்றும் இசையமைப்பாளரும் ஆவார். கருநாடக இசையில் எண்களைக் குறிக்கும் அனுமந்திர ஸ்தாயி ( ஆக்டேவ் ) என்பதில் இவர் மேற்கொண்ட தீவிர ஆராய்ச்சிக்காக விமர்சன ரீதியான பாராட்டுகளைப் பெற்றுள்ளார். அனுமந்ரா சட்ஜம் வரை மந்த்ர சட்ஜத்திக்குக் கீழே குறிப்புகளைப் பாடும் திறன் கொண்ட இவர், அரிய பஞ்சமந்திய ராகங்களையும் கண்டுபிடித்துள்ளார்.
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் பயிற்சி
[தொகு]சரசுவதி கொல்கத்தாவில் இசைக்கலைஞர்களின் குடும்பத்தில் பிறந்தார். இவர் தனது தந்தை சிறீ ஐ.வி.எல் சாஸ்திரியிடமிருந்து அடிப்படை இசைப் பயிற்சியினைப் பெற்றார். இவரது தந்தை சங்கீத ஜனகுளம், என்ற ஒரு இலவச பள்ளியை வழங்கும் இசைப் பள்ளியின் நிறுவனராவார். பின்னர் இவர் நல்ல புகழ்பெற்ற பல்துறை இசைக்கலைஞரான சிரீ இவதூரி விஜயேசுவர ராவின் சீடரானார்.[1] . சரசுவதி வித்யார்த்தி முனைவர் நேதுனூரி கிருட்டிணமூர்த்தியின் கீழ் இருபது ஆண்டுகளாக பயிற்சியில் இருந்து வருகிறார்.[2]
நிகழ்ச்சிகள்
[தொகு]தி மியூசிக் அகாடமி,[3] சிறீ கிருட்டிண கானசபா,[4] முத்ரா, மற்றும் சிறீ சண்முகானந்தா உள்ளிட்ட பல்வேறு சபைகளின் உதவியுடன் இந்தியா முழுவதும் அனைத்து முக்கிய நகரங்களிலும் வித்யார்த்தி பல்வேறு விழாக்கள் மற்றும் அரங்குகளில் நிகழ்த்தியுள்ளார். தேசிய ஒருங்கிணைப்புக்கான ஸ்பிரிட் ஆஃப் யூனிட்டி கச்சேரிகள் மற்றும் அகில இந்திய வானொலியின் சங்கீத சம்மேலன் ஆகியவற்றிற்கும் இவர் நிகழ்த்தியுள்ளார்.[5]
கல்வி
[தொகு]வித்யார்த்தி ஆந்திர பல்கலைக்கழகத்தில் இசையில் முதுகலை முடித்துள்ளார். பத்ம பூசண், 'சங்கீத கலாநிதி' முனைவர் சிறீபாத பினாகபானி ஆகியோரின் தனித்துவமான நடை மற்றும் ஆளுமை "என்ற தனது ஆய்வறிக்கையை வழங்கி இசையில் பி.எச்.டி பெற்றார்.
வித்யார்த்தி 2008 முதல் 2014 வரை ஆந்திர பல்கலைக்கழக ஆய்வு வாரியத்தின் தலைவராக பணியாற்றினார்.[6][7] ராஜீவ் காந்தி அறிவு தொழில்நுட்ப பல்கலைக்கழகம், சிறீ பத்மாவதி மகிலா விஸ்வத்யாலயம், மற்றும் ஆந்திர பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்களுக்கு தேர்வுக் குழு உறுப்பினராக பணியாற்றினார். தற்போது, இவர் ஆந்திர பல்கலைக்கழகத்தில் இசைத் துறையில் பேராசிரியராக உள்ளார்.[1] மேலும் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக ஆராய்ச்சி அறிஞர்களுக்கு வழிகாட்டி வருகிறார்.
ஆராய்ச்சி கட்டுரைகள்
[தொகு]வித்யார்த்தி பதினாறு ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.[1] மேலும் அவற்றில் பத்து தேசிய மற்றும் சர்வதேச கருத்தரங்குகள் மற்றும் இசை தொடர்பான மாநாடுகளில் வழங்கியுள்ளார்.[8] இவரது எட்டு ஆய்வுக் கட்டுரைகள் ஜர்னல் ஆஃப் தி மியூசிக் அகாடமி உட்பட புகழ்பெற்ற இசை பத்திரிகைகளில் வெளியிடப்பட்டுள்ளன. இவர் இசை மாநாடுகளின் அமர்வுகளுக்குத் தலைமை தாங்கியுள்ளார். மேலும், பல பட்டறைகளில் வள அதிகாரியாக இருந்துள்ளார். இவர் கர்நாடக இசை குறித்து பல விரிவுரைகளையும் வழங்கியுள்ளார்.
புத்தகங்கள்
[தொகு]வித்யார்த்தி தனது தந்தையுடன் இணைந்து சிறீ தியாகராஜ கானராக பஞ்சரத்ன கிருதிமாலா மற்றும் சங்கீர்த்தன ரத்னாவளி என்ற இரண்டு நூல்களை எழுதியுள்ளார்.[9] இவரது வெளியிடப்படாத படைப்புகளில் தான தீபிகா, சங்கீர்த்தன ரத்னாகரம், மற்றும் சிம்ஹகிரி சங்கீர்த்தனைகள் போன்ற புத்தகங்கள் அடங்கும்.
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]சரசுவதி கே. ஈசுவர சந்திர வித்யார்த்தி என்பவரை மணந்தா., இவருக்கு லஹரி கோலாச்செலா என்ற ஒரு மகள் உள்ளார்.
குறிப்புகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 Chandaraju, Aruna (11 March 2012). "Touching new musical 'lows'". Deccan Herald. பார்க்கப்பட்ட நாள் 6 June 2014.
- ↑ "Dr. Nedunuri Krishnamurthy". Infocus (GITAM University): 15. 2013. http://www.gitam.edu/Images/INFOCUS_2013.pdf. பார்த்த நாள்: 6 June 2014.
- ↑ Chandaraju, Aruna (25 July 2008). "High on the low". The Hindu இம் மூலத்தில் இருந்து 4 ஆகஸ்ட் 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080804184410/http://www.hindu.com/fr/2008/07/25/stories/2008072550930300.htm. பார்த்த நாள்: 6 June 2014.
- ↑ Sivakumar, S (21 December 2010). "Refreshing inclusions". The Hindu இம் மூலத்தில் இருந்து 14 ஜனவரி 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120114074055/http://www.hindu.com/ms/2010/12/21/stories/2010122150130600.htm. பார்த்த நாள்: 6 June 2014.
- ↑ Narayanan, Damodar (1 October 2010). "Absorbing renditions". The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/absorbing-renditions/article805363.ece. பார்த்த நாள்: 6 June 2014.
- ↑ Chandaraju, Aruna (19 April 2012). "My digital saadhana". The Hindu BusinessLine. பார்க்கப்பட்ட நாள் 6 June 2014.
- ↑ "Board of Studies". Andhra University. பார்க்கப்பட்ட நாள் 6 June 2014.
- ↑ Trivedi, Rajiv. "'Africa Meets Asia' – International Conference". omenad.net. பார்க்கப்பட்ட நாள் 6 June 2014.
- ↑ ""®¾-A-'¹%-£¾Éðx "X¾"ä¬ÇEÂË Ÿ¿ª½-'Ç®¾ÕhÕ". VISAKHPATNUM-EENADU (in Telugu). Archived from the original on 14 ஜூலை 2014. பார்க்கப்பட்ட நாள் 6 June 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)CS1 maint: unrecognized language (link)
வெளி இணைப்புகள்
[தொகு]- Richly ornamented (தி இந்து)
- Intricate tapestry (The Hindu)
- Flavour of traditional music (The Hindu)
- Venkatasaila Vihaara - Raga Hamirkalyani on யூடியூப்