சரசுவதி விசுவேசுவரா
சரசுவதி விசுவேசுவரா | |
---|---|
குடியுரிமை | இந்தியா |
தேசியம் | இந்தியர் |
துறை | மூலக்கூறு உயிரி இயற்பியல் |
பணியிடங்கள் | கார்னிகி மெல்லன் பல்கலைக்கழகம் இந்திய அறிவியல் கழகம் |
கல்வி | பெங்களூர் பல்கலைக்கழகம் நியூயார்க் நகரப் பல்கலைக் கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | பெங்களூர் பல்கலைக்கழகம் |
துணைவர் | சி. வி. விசுவேசுவரா |
பிள்ளைகள் | 2 மகள் |
சரசுவதி விசுவேசுவரா (Saraswathi Vishveshwara)(பிறப்பு 1946) மூலக்கூறு உயிரியல் இயற்பியல் துறையில் நிபுணத்துவம் பெற்ற ஓர் இந்திய உயிரி இயற்பியலாளர் ஆவார். சரசுவதி பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் மூலக்கூறு உயிரியல் இயற்பியல் பிரிவில் பேராசிரியராக உள்ளார். இவர் கணினி உயிரியலில் பணிபுரிகிறார். சரசுவதியின் ஆராய்ச்சி முதன்மையாக உயிரியல் அமைப்புகளில் கட்டமைப்பு-செயல்பாடு உறவுகளைத் தெளிவுபடுத்துவதில் கவனம் செலுத்துவதாக உள்ளது. புரதங்கள் போன்ற பெரிய மூலக்கூறுகளின் செயல்பாட்டைப் புரிந்துகொள்வதற்குக் கணக்கீட்டு-கணித நுட்பங்களைப் பயன்படுத்துவது இவரது ஆராய்ச்சியின் முக்கிய அம்சமாகும்.
கல்வி
[தொகு]சரசுவதியின் இளம் அறிவியல் மற்றும் முதுநிலை அறிவியல் கல்வி பெங்களூரு பல்கலைக்கழகத்திலும் உயிர்வேதியியல் முனைவர் பட்ட ஆய்வினை நியூயார்க் நகரப் பல்கலைக்கழகத்தில் ஹண்டர் கல்லூரியின் டேவிட் பெவரிட்ஜின் வழிகாட்டுதலின் கீழ் முடித்தார். இவரது முனைவர் பட்டம் ஆய்வானது குவைய வேதியியலில் பிரிவிலிருந்தது.[1]
தொழில்சார் அனுபவம்
[தொகு]முனைவர் பட்டத்திற்குப் பிறகு விசுவேசுவரா பிட்சுபர்க்கில் உள்ள கார்னிகி மெல்லன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட மேலாய்வாளர் ஆனார். இவர் நன்கு அறியப்பட்ட குவைய வேதியியலாளர் மற்றும் நோபல் பரிசு பெற்ற ஜான் பாப்லுடன் ஆய்வுப் பணியினை மேற்கொண்டார். இவர் இந்தியாவுக்குத் திரும்பி, இந்திய அறிவியல் கழகத்தில் மூலக்கூறு உயிரியல் இயற்பியல் பிரிவில் முதுநிலை ஆசிரியராகச் சேர்ந்தார். இவர் ஆசிரிய உறுப்பினராகவும் பேராசிரியராகவும் ஆனார்.
வாழ்க்கை
[தொகு]சரசுவதியின் கணவர், இயற்பியலாளர், இந்தியாவின் கருந்துளை மனிதன் என்று அழைக்கப்படும் முனைவர் சி. வி. விசுவேசுவரா ஆவார். விசுவேசுவரா 2017-இல் காலமானார். சி. வி. விசுவேசுவரா பொதுச் சொற்பொழிவு தொடரை சரசுவதிச் தொடங்கியுள்ளார்.[2] இவர்களது மகள் இயற்பியலாளர் சுமிதா விசுவேசுவரா.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Godbole, Rohini (2008). Lilavati's Daughters: The Women Scientists of India. Bangalore: Indian Academy of Sciences. pp. 344–45. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8184650051. பார்க்கப்பட்ட நாள் 14 October 2014.
- ↑ "Black Hole Man of India lives on in many lectures".
- ↑ "Perspective from Smitha Vishveshwara: On Life, Quantum Physics, the Universe, and Compassion".