உள்ளடக்கத்துக்குச் செல்

நோபல் பரிசு பெற்றவர்கள் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நோபல் பரிசு
The Nobel Prize
A golden medallion with an embossed image of Alfred Nobel facing left in profile. To the left of the man is the text "ALFR•" then "NOBEL", and on the right, the text (smaller) "NAT•" then "MDCCCXXXIII" above, followed by (smaller) "OB•" then "MDCCCXCVI" below.
விளக்கம்இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவமும் உடலியங்கியலும், அமைதி, பொருளியல் ஆகிய துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவோருக்கு ஆண்டு தோறும் வழங்கப்படும் பரிசு.
நாடுசுவீடன்
நோர்வே (அமைதிப் பரிசு மட்டும்)
வழங்குபவர்சுவீடன் அக்காதமி,
ரோயல் சுவீடிய அறிவியல் கழகம்,
கரொலீன்ஸ்கா கல்விநிலையம்,
நோர்வே நோபல் குழு
முதலில் வழங்கப்பட்டது1901
இணையதளம்nobelprize.org
நோபல் பரிசு பெற்றவர்கள் தங்கப் பதக்கத்துடன் டிப்ளோமா மற்றும் (2017 இன் படி) 9 மில்லியன் SEK (தோராயமாக US $1.0 மில்லியன், 0.87 மில்லியன்) பெறுகிறார்கள்.
Nobel 2012இன் விழாவில் பரிசாளர்கள் ஆல்வின் ரோத், பிரையன் கோபிலுக்கா, இராபர்ட்டு இலெவுக்கோவித்ஃசு, டேவிட். ஜே. வைன்லேண்டு, and செர்கே அரோழ்சி

நோபெல் பரிசுகள் (சுவீடிய: Nobelpriset, நோர்வே: Nobelprisen) ஆண்டுதோறும் சுவீடிய அரசுக் கல்விக்கழகத்தாலும் (The Royal Swedish Academy of Sciences), சுவீடியக் கல்விக்கழகத்தாலும் (The Swedish Academy), கரோலின்சுகா நிறுவனத்தாலும் (The Karolenska Institute) மற்றும் நார்வே நோபெல் குழுவாலும் (The Norwegian Nobel Committee) தனியொருவருக்கோ நிறுவனங்களுக்கோ வேதியியல், இயற்பியல், இலக்கியம், அமைதி, மற்றும் மருத்துவம் ஆகிய அறிவியல்புலங்களில் பெரும்பங்களிப்பு ஆற்றுபவர்களுக்குத் தரப்படுகின்றன.[1] இவை ஆல்ஃபிரெட் நோபெலின் 1895அம் ஆண்டு உயிலின்படி நிறுவப்பட்டுத் தரப்படுகின்றன.இது நோபெல் அறக்கட்டளையால் ஆளப்படுமெனக் கூறுகிறது. பொருளியலுக்கான நோபெல் நினைவுப் பரிசு 1968இல் சுவீடன்னைச் சார்ந்த Sveriges Riksbank எனும் வங்கியால் பொருளியலில் பெரும்பங்களிப்பவர்களுக்காக நிறுவப்பட்டது. இதில் ஒவ்வொரு பரிசாளருக்கும் பொற்பதக்கமும் பட்டயமும் நோபெல் அறக்கட்டளை குறிப்பிட்ட ஆண்டில் முடிவுசெய்யும் பணத்தொகையும் வழங்கப்படும்.[2]

பரிசு

[தொகு]

ஒவ்வொரு பரிசும் ஒரு தனிக்குழுவால் தரப்படுகிறது; இயற்பியல், வேதியியல், பொருளியல் பரிசுகளைச் சுவீடிய அரசுக்கழகம் தருகிறது; கரோலின்சுகா நிறுவனம் உடலியங்கியல் அல்லது மருத்துவப் பரிசுகளை வழங்குகிறது; நார்வே நோபெல்குழு அமைதிக்கான பரிசுகளை அளிக்கிறது.[3] ஒவ்வொரு பரிசாளரும் ஆண்டுஅகளைச் சார்ந்து வேறுபடும் பதக்கத்தையும் பட்டயத்தையும் பணத்தொகையையும் பெற்றுவந்துள்ளனர்.[2] முதல்நோபெல் பரிசுகள் 1901இல் பரிசாளர்களுக்கு 150,782 SEK அமைந்தன.இது 2007இல் 7,731,004 SEK மதிப்புக்குச் சம்மானது. பரிசாளர்களுக்கு 2008இல் பணத்தொகையாக 10,000,000 சுவீடியக் குரோனர்கள்(SEK) வழங்கப்பட்டன.[4] பரிசுகள் நோபெல் மறைந்த நாளான திசம்பர் 10இல் அவரது நினைவு ஆண்டுவிழாவில் சுட்டாக்கொல்மில் தரப்படுகின்றன.[5]

பெயர்கள் தரப்படாததாலோ வேறு புறநிகழ்வுகளாலோ நோபெல் பரிசு தரப்படாவிட்டால் பரிசுத்தொகை உரிய பரிசுக்கணக்கில் திரும்பச் செலுத்தப்படும்.[6] நோபெல் பரிசு போர்மூண்டதால் 1940முதல் 1942வரை தரப்படவில்லை.[7]

பரிசாளர்கள்

[தொகு]

கடந்த நூற்றாண்டு 1901 முதல் இந்த நூற்றாண்டு 2012 வரை நோபல் பரிசுகளும் பொருளியலுக்கான நோபெல் நினைவுப் பரிசுகளும் 555 தடவைகள் 863 பேருக்கும் நிறுவனங்களுக்கும் தரப்பட்டுள்ளன. இதில் சிலர் ஒருதடவைக்கும் மேல் பரிசு வாங்கியுள்ளதால் மொத்தத்தில் 825 பேரும் 21 நிறுவனங்களும் பரிசு பெற்றுள்ளன. நான்கு நோபெல் பரிசாளர்களுக்கு அவர்களது அரசுகள் இப்பரிசைப் பெற இசைவு தரவில்லை. [அடோல்ஃப் ஃஇட்லர் மூன்று செருமானியர்களான இரிச்சர்ட் குஃன் (வேதியியல், 1938), அடோல்ஃப் புட்டனண்ட் (வேதியியல், 1939), and ஜெரார்டு டொமாக் (உடலியங்கியல் அல்லது மருத்துவம், 1939), ஆகியோரை நொப்ர்ல் பரிசை வாங்கவிடவில்லை. முன்னாள் சோவியத் ஒன்றிய அரசு போரிசு பாசுதர்னாக்கை (இலக்கியம், 1958) பரிசை மறுக்கும்படி வற்புறுத்தியது. இரு நோபெல் பரிசாளர்களான [[ழீன் பௌல் சாட்ட்ரேயும்(இலக்கியம், 1964) இலே டக் தோவும் (அமைதி,1973) இப்பரிசை வாங்க மறுத்துவிட்டனர். சாத்ரே எந்த அலுவல்முறைப் பரிசையும் வாங்க விரும்பாதால் மறுத்தார்.இலே அப்போது வியட்நாம் இருந்த நிலைமையால் மறுத்தார்.

ஆறு பரிசாளர்கள் ஒரு தடவைக்கும் மேல் பரிசு பெற்றுள்ளனர்.; அந்த அறுவருள் செஞ்சிலுவைச் சங்கத்தின் பன்னாட்டுக்குழு அமைதிக்கான நோபெல் பரிசை மும்முறை பெற்றது வேறெவருமே மும்முறை பெறவில்லை..[8] அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் இருமுறை அமைதிக்கான நோபெல் பரிசைப் பெற்றது. மேலும் ஜான் பர்டீனுக்கு இருமுறை இயற்பியலுக்கான நோபெல் பரிசும் ஃபிரெடெரிக் சாங்கருக்கு இருமுறை வேதியியலுக்கான நோபெல் பரிசும் வழங்கப்பட்டன. வெவ்வேறு புலங்களில் இருவருக்கு வழங்கப்பட்டன: மேரி கியூரி (இயற்பியலும் வேதியியலும்);இலினசு பௌலிங் (வேதியியல், அமைதி). 826 பரிசாளர்களில் 43பேர் பெண்கள்; நோபெல் பரிசுபெற்ற முதள் பெண்மணி மேரி கியூரி ஆவார். இவர் 1903இல் இயற்பியலுக்கான நோபெல் பரிசைப் பெற்றார்.[9] இருபாலாரிலுமே முதல்முறையாக இரு நோபெல் பரிசு பெற்றவர் மேரி கியூரியே. இவர் இரண்டாவதாக 1911இல் வேதியியலுக்கான நோபெல் பரிசைப் பெற்றார்.[8]


மேற்கோள்கள்

[தொகு]
  1. "Alfred Nobel – The Man Behind the Nobel Prize". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-11-27.
  2. 2.0 2.1 "The Nobel Prize". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-11-27.
  3. "The Nobel Prize Awarders". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-11-27.
  4. "The Nobel Prize Amounts". Nobel Foundation. Archived from the original on 2008-07-31. பார்க்கப்பட்ட நாள் 2008-11-27. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  5. "The Nobel Prize Award Ceremonies". Nobel Foundation. Archived from the original on 2008-08-22. பார்க்கப்பட்ட நாள் 2008-11-27. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  6. "List of All Nobel Laureates 1942". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-11-30.
  7. Lundestad, Geir (2001-03-15). "The Nobel Peace Prize 1901-2000". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-11-30.
  8. 8.0 8.1 "Nobel Laureates Facts". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2013-10-11.
  9. "Women Nobel Laureates". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2011-10-11.

வெளி இணைப்புகள்

[தொகு]