உள்ளடக்கத்துக்குச் செல்

சம்சா (எழுத்தாளர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏ. என். சுவாமி வெங்கடாத்ரி ஐயர்
A. N. Swamy Venkatadri Iyer
சம்சா
சம்சா
பிறப்பு(1898-01-13)13 சனவரி 1898 [1]
அகரா, எலந்தூர், மைசூர் அரசு (தற்போதைய கருநாடகம்),
இறப்பு14 பெப்ரவரி 1939(1939-02-14) (அகவை 41)[1]
மைசூர், கருநாடகம், இந்தியா
புனைபெயர்சம்சா
தொழில்
  • ஆசிரியர்
  • நாடக ஆசிரியர்
  • புதின எழுதளர்
மொழிகன்னடம்
தேசியம்இந்தியர்
வகைவரலாற்று நாடகங்கள்
பெற்றோர்நரசிம்ம பண்டிதர்
கௌரம்மாள்

ஏ. என். சுவாமி வெங்கடாத்ரி ஐயர் (A. N. Swamy Venkatadri Iyer) (13 ஜனவரி 1898 - 14 பிப்ரவரி 1939), சம்சா என்ற புனைப்பெயரால் அறியப்பட்டவர், 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கன்னட மொழியில் எழுதிவந்த இந்திய வரலாற்று நாடக ஆசிரியர் ஆவார். இவரது நாடகங்கள் சுகுண கம்பீரா, விகட விக்ரமராய மற்றும் பெட்டட அரசு ஆகியவை மேடை நாடகங்களாக உருவாக்கப்பட்டு கர்நாடகாவில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் பாடநூல்களாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.[2][3] He was called as Shakespeare of Kannada Drama.[4] இவர் “கன்னட நாடகத்தின் ஷேக்ஸ்பியர் ” என்று அழைக்கப்பட்டார். அரசுக்கு சொந்தமான இரவீந்திர கலாசேத்ரா வளாகத்தில் உள்ள ஒரு திறந்தவெளி அரங்கத்திற்கு சம்சா அரங்கம என பெயரிடப்பட்டது.[5][6][7]


தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

முந்தைய மைசூர் மாநிலத்திலுள்ள எலந்தூரில் நரசிம்ம பண்டிதருக்கும் கௌரம்மாவுக்கும் வெங்கடாத்ரி ஐயர் என்ற பெயரில் சம்சா பிறந்தார். மைசூர், ஹாசன், மும்பை மற்றும் பிற இடங்களில் பல்வேறு பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் ஆசிரியர் மற்றும் எழுத்தராக பணியாற்றினார். இவர் தனது விசித்திரமான நடத்தைக்காக அறியப்பட்டார். திருமணமாகாமல் தனிமையான வாழ்க்கையை நடத்தினார். இவர் மற்றவர்களால் தனக்கு துன்பம் ஏற்படுகிறது என்ற மனநிலையிலேயே இருந்தார். இதனால் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு அலைந்து திரிந்தார்.[8]

எழுத்தாளர்[தொகு]

சம்சா 23 க்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியதாகக் கூறப்படுகிறது. அவற்றில் 6 மட்டுமே கிடைத்துள்ளன.[9][10] நவீன கன்னட இலக்கியத்தின் முதல் வரலாற்று நாடக ஆசிரியராக இவர் கருதப்படுகிறார். இவரது நாடகங்கள் மைசூர் இராச்சியத்தில் மைசூர் மன்னர்களின் நிர்வாகம் மற்றும் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டவை. அலேகானதா என்ற பழைய கன்னட மொழியை இவர் நாடகங்களில் பயன்படுத்தினார்.[11]

இறப்பு[தொகு]

மைசூரில் உள்ள சத்வித்யா பள்ளியில் இவர் தனது வாழ்க்கையின் கடைசி ஆண்டுகளைக் கழித்து வந்தார். 1939 பிப்ரவரி 14 அன்று பள்ளியலுள்ள ஒரு சிறிய அறையில் சம்சா தற்கொலை செய்து கொண்டார்.[12] இவர் ஒரு தற்கொலைக் குறிப்பை விட்டுச் சென்றார்:

““முப்பத்தொரு ரூபாய், ஒரு அணா மற்றும் ஒன்பது பைசாக்களை என் சட்டைப் பையில் வைத்துவிட்டுச் செல்கிகிறேன்; இந்தத் தொகை, எனது மரணத்திற்குப் பிறகு, எனது உடலை தகனம் செய்வதற்கு எடுத்துக் கொள்ளவும். எந்த மதத்தின் மீதும் எனக்கு நம்பிக்கை இல்லாததால், எந்த ஒரு திறந்த வெளியிலும், எந்த மதச் சடங்குகளும் இன்றி, தகனம் செய்ய விரும்புகிறேன்”.[8]

சம்சா பற்றிய புத்தகங்கள்[தொகு]

பல எழுத்தாளர்கள் சம்சாவின் தனிமையான வாழ்க்கையைப் பற்றிய விஷயங்களை வெளியே கொண்டு வர முயற்சித்துள்ளனர். இவரது குறிப்பிடத்தக்க சில படைப்புகள்:

  • சம்சா கவி (வாழ்க்கை வரலாறு-ஜி. பி. ராஜரத்னம் [13]
  • சம்சா ஸ்மரனே: ஜீவன சித்திரனா-ஆ. நா. சுப்பிரமணியம்
  • நீகிகொண்டா சம்சா (நாடகம்-கி. ராம். நாகராஜ் [14]
  • சம்சா (புதினம்-பேராசிரியர் மலேயூர் குருசாமி [15][16]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Kannada kavi 'Samsa'". Kannadakavi.com (in Kannada). பார்க்கப்பட்ட நாள் 11 Oct 2020.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. "Samsa a native of Mandya". Deccan Herald. 8 Sep 2012. https://www.deccanherald.com/content/277403/samsa-native-mandya.html. 
  3. Santosh Guddiyangadi (4 Apr 2013). "ಮಹಿಷೂರಿನಲ್ಲಿ ಮತ್ತೆ ಸಂಸ". Prajavani. https://www.prajavani.net/article/%E0%B2%AE%E0%B2%B9%E0%B3%80%E0%B2%B7%E0%B3%82%E0%B2%B0%E0%B2%B2%E0%B3%8D%E0%B2%B2%E0%B2%BF-%E0%B2%AE%E0%B2%A4%E0%B3%8D%E0%B2%A4%E0%B3%86-%E0%B2%B8%E0%B2%82%E0%B2%B8. 
  4. Poonam Trivedi & Dennis Bartholomeusz, ed. (2005). India's Shakespeare: Translation, Interpretation, and Performance. Pearson Education India. p. 172. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8177581317. பார்க்கப்பட்ட நாள் 26 Oct 2020.
  5. Muralidhara Khajane (15 Oct 2014). "Raveendra Kalakshetra, Nayana, Samsa to get a facelift". The Hindu. https://www.thehindu.com/news/cities/bangalore/raveendra-kalakshetra-nayana-samsa-to-get-a-facelift/article6500957.ece. 
  6. "Kannada and Culture Department: Ravindra Kalakshetra – Samsa Open Air Theatre". kalakshetra.kannadasiri.co.in. பார்க்கப்பட்ட நாள் 11 Oct 2020.
  7. "Samsa Bayalu Rangamandira". Times of India. 27 Jan 2019. https://timesofindia.indiatimes.com/topic/samsa-bayalu-rangamandira/news. 
  8. 8.0 8.1 Mamta Sagar (22 Feb 2015). "The troubled genius of an iconic Kannada writer". Bangalore Mirror. https://bangaloremirror.indiatimes.com/opinion/views/Vigada-Vikrama-Raaya-Bettada-Arasu-and-Birudentembara-Ganda-Kannada-playwrights/articleshow/46335382.cms?. 
  9. "ಸಂಸ" [Samsa]. Kanaja.com (in Kannada). பார்க்கப்பட்ட நாள் 11 Oct 2020.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  10. Firoz Khan (1 Nov 2019). "ಕನ್ನಡ ಸಾಹಿತ್ಯ ಮುಕುಟಮಣಿಗಳಿಗಿಲ್ಲ ಆಸರೆ" (in Kannada). Udayavani. https://www.udayavani.com/district-news/chamarajanagar-news/kannada-rajyotsava-special. 
  11. Madur (24 October 2011). "The classical novelist – Samsa". Karnataka.com. பார்க்கப்பட்ட நாள் 11 Oct 2020.
  12. "Playwright Samsa". Bookbrahma (in Kannada). பார்க்கப்பட்ட நாள் 11 Oct 2020.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  13. "Samsa Kavi by G. P. Rajarathnam". BookBrahma.com. பார்க்கப்பட்ட நாள் 18 Nov 2020.
  14. "A legend in oral tradition". The New Indian Express. https://www.newindianexpress.com/cities/bengaluru/2010/may/05/a-legend-in-oral-tradition-152318.html. பார்த்த நாள்: 3 Nov 2020. 
  15. "'ಸಂಸ' ಕಾದಂಬರಿ ಬಿಡುಗಡೆ". Prajavani. https://www.prajavani.net/amp/district/mysore/samsa-novel-released-768045.html. பார்த்த நாள்: 11 Oct 2020. 
  16. "'Samsa' novel released". Star of Mysore. https://starofmysore.com/samsa-novel-released/#aoh=16023948572515&csi=1&referrer=https%3A%2F%2Fwww.google.com&amp_tf=From%20%251%24s. பார்த்த நாள்: 11 Oct 2020. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சம்சா_(எழுத்தாளர்)&oldid=4021414" இலிருந்து மீள்விக்கப்பட்டது