சன்னி சன்வார்
சன்னி சன்வார் Sunny Sanwar | |
---|---|
பிறப்பு | சன்வார் அசாம் சன்னி 17 திசம்பர் 1989 டாக்கா |
கல்வி | இளங்கலை (இயந்திரப் பொறியியல்) |
பெற்றோர் | சர்வார் அசாம் பேகம் கம்ருன் நாகர் |
சன்வார் ஆசாம் சன்னி (Sanwar Azam Sunny, வங்காள மொழி: সানওয়ার আজম সানি, பிறப்பு 17 திசம்பர் 1989)[1] ஒரு வங்காளதேசக் கலைஞர் ஆவார். மேலும் இவர் சமூக ஆர்வலர், சுற்றுச்சூழல்வாதியும் ஆவார். வங்காளதேச ஆங்கில பத்திரிகையான தி டெய்லி ஸ்டார் என்ற நாளிதழின் கட்டுரையாளராகவும், பதிப்பாளராகவும் பணியாற்றிவருகிறார். பன்முக மொழிபுலமையை பெற்ற இளம் கலைஞர்களில் ஓருவரான இவர் தனித்து சொற்பொழிவாற்றும் வல்லமை பெற்றவர். தேசிய கலைக்கூடத்தில் உள்ள விடுதலை போர் அருங்காட்சியகத்தில் பல நிரந்தர தொகுப்புகளை வழங்கி பணிகளை மேற்கொண்டார். அமெரிக்க நான்காண்டு உயர் நிலைப் பள்ளி படிப்பை எட்டு மாதங்களில் படித்து முடித்து தனது 18 வது வயதில் கல்லூரி மூத்த மாணவரானார். 21 வது வயதில் பொறியியல் துறையில் கற்பித்தல் பல்கலைக்கழக படிப்புகள் படித்து முடித்தார்.[2][3]
குடும்பம் மற்றும் ஆரம்ப வாழ்க்கை
[தொகு]இவர்களது குடும்பம் வடக்கு வங்கதேச பகுதியை தோற்றமாக கொண்டது. சன்னி சன்வாரின் தந்தை இக் குடும்பத்தின் மூத்த உரிப்பினராவார். வங்காளதேச தரைப்படையில், ஐக்கிய நாடுகள் சபையில் வங்காளதேச அமைதிகாக்கும் படையில் மற்றும் வங்காளதேச எல்லை பாதுகாப்பு படையில் கமாண்டோவாக பணியாற்றினார். இவர் தாய் தேற்கு வங்காளதேசத்தை சார்ந்த துருக்கிய வம்சாவளி குடும்பத்தை சேர்ந்தவர். இவர் ஒரு கலைஞர் மற்றும் அறிவியல் அறிஞர் ஆவார். இவர் வங்காளதேசக் குடியரசுத் தலைவர் யஜுதின் அஹமதின் மாணவி ஆவார். இரு பெற்றோர்களும் கிழக்கு பாகிஸ்தான் நாட்டில்தான் பிறந்தனர். சன்னி சன்வார் வங்காளதேச முழுமையும் பல நகரங்களில் வளர்ந்தார். அவருக்கு ஷாஹிய சர்வார் என்ற ஒரு மூத்த சகோதரி உள்ளார் இவர் ஒரு கட்டிட கலைஞர் ஆவார். இக் குடும்பம் சிங்கராநாதூர் குடும்பம் என வழங்கப்படுகிறது. இவர்கள் வடமேற்கு வங்காளதேச பகுதியான ராஜசாகி கோட்டம் பகுதிகளை ஆண்ட ஆட்சியாளர்கள் ஆவர். 1950 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட மாநில கையகப்படுத்துதல் சட்டம் மூலம் இக் குடும்ப ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இருப்பினும் அரசியல் முன்னுரிமை மக்கள் செல்வாக்கு இன்றும் அவர்கள் நிலைநாட்டுகின்றனர்.[4][5]
பின்னணி மற்றும் கல்வி
[தொகு]அமெரிக்காவின் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் பணியகம் மூலம் அமெரிக்காவில் இளைஞர் தூதராக ஆனார்.[6] அமெரிக்க நான்காண்டு உயர் நிலைப் பள்ளி படிப்பை எட்டு மாதங்களில் படித்து முடித்து தனது 18 வது வயதில் கல்லூரி மூத்த மாணவரானார். தனது 16 ஆம் வயதிலே மேட்லேப் நிறுவனத்தில் பணியில் அமர்த்தப்பட்டு வங்காளதேசthதின் வட தென் பல்கலைக்கழகத்திற்காக கணினி அறிவியல் மற்றும் மின் பொறியியல் துறை சம்பந்தப்பட்ட நிரலாக்க திட்ட பணிகளை மேற்கோண்டார். இவர் ஒரு சிறுமுது அறிஞர் தனது 8 வது வயதிலேயே 6 மொழியில் எழுத படிக்க பேச கவனிக்க புலமை பெற்றவர். அமெரிக்க நான்காண்டு உயர் நிலைப் பள்ளி படிப்பை எட்டு மாதங்களில் படித்து முடித்ததால் சர்வதேச அறிவியல் ஒலிம்பியாட் என்ற கவுரவ பட்டத்தை அமெரிக்கா வழங்கியது.[7] இவருக்கு கேன்சஸ் பொறியியல் பல்கலைக்கழகம் ஊக்க தொகை வழங்கி கவுரவித்த போது வயது 16. தனது 19 வயதுக்குள்ளாகவே கல்லூரி இருதியாண்டை நிறைவு செய்தார்.[7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Soszynski, Henry (1996). "Sahibzada Sanwar Azam Sunny: Brief biography and family history". Australia: Genealogical Gleanings of the Indian Princely States. Archived from the original on 27 ஜூலை 2014. Retrieved 28 September 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ 15 Smartest kids to ever exist பரணிடப்பட்டது 2015-11-16 at the வந்தவழி இயந்திரம் Rantlifestyle 29 July 2015
- ↑ Fernández-Aráoz, Claudio (2014). "17". It's Not the How Or the What But the Who: Succeed by Surrounding Yourself with the Best. Harvard Business Press (published 3 June 2014). p. 86. ISBN 978-1625271525.
{{cite book}}
: Cite has empty unknown parameter:|chapterurl=
(help) - ↑ Syed Ismail Ashraf (14 March 2013). "Legacy of Bengali zamindars". Daily Sun. http://www.daily-sun.com/index.php?view=details&archiev=yes&arch_date=14-03-2013&type=Legacy-of-Bengali-zamindars&pub_no=437&cat_id=1&menu_id=19&news_type_id=1&index=2. பார்த்த நாள்: 16 March 2013.
- ↑ Chowdhury, S. R. Kumar; Singh, P. K.; M. Ali, Ismail (2012). Blood Dynasties: Zemindaris of Bengal – A Chronicle of Bengal’s Ruling families. Dictus: Politics and Democracy series. ISBN 9783847385080.
- ↑ DU Correspondent (14 July 2006). "17 Bangladeshi students receive US State Dept certificates". The Daily Star. http://www.thedailystar.net/2006/07/14/d60714060666.htm. பார்த்த நாள்: 31 March 2008.
- ↑ 7.0 7.1 https://web.archive.org/web/20120622025423/http://www.aiub.edu/HtmlViewer2.aspx?EventsID=499
வெளி இணைப்புகள்
[தொகு]- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் சன்னி சன்வார்
- Smart City - Case Study, by Sunny, Sanwar A. at Harvard Business Review
- Sunny, Sanwar Biography at அமேசான்.காம்
- Sanwar Azam Sunny at Google Scholar
- Sanwar Azam Sunny profile at ancestry.com
- 15 Smartest kids to ever exist at eBaum's World (July 2015)
- Environmental Uncertainty and Climate Change How about the "whether"? 2013 article with Jimmy Adegoke in Daily Star