உள்ளடக்கத்துக்குச் செல்

சக்குர்-உன்-நிசா பேகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சக்குர்-உன்-நிசா பேகம்
Shakr-un-Nissa Begum
முகலாய இளவரசி
பிறப்புபத்தேப்பூர் சிக்ரி, ஆக்ரா, முகலாயப் பேரரசு
இறப்பு1 சனவரி 1653
அக்பராபாது (நவீன ஆக்ரா), முகலாயப் பேரரசு
புதைத்த இடம்
துணைவர்
சாருக் கான் மிர்சா
(தி. 1594; d. 1607)
மரபுதைமூர்
தந்தைஅக்பர்
தாய்பீபி தௌலத் சாத்
மதம்சுன்னி இசுலாம்

சக்குர்-உன்-நிசா பேகம் (Shakr-un-Nissa Begum) அல்லது சக்குர் அல்-நிசா பேகம் (Shakr al-Nisa Begum) (இறப்பு 1 ஜனவரி 1653) ஒரு முகலாய இளவரசியும், பேரரசர் அக்பரின் மகளும் ஆவார்.[1]

இளமை வாழ்க்கை

[தொகு]

சக்குர்-உன்-நிசா பேகம், முகலாயப் பேரரசர் அக்பருக்கும், அவரது மனைவி பீபி தௌலத் சாத் ஆகியோருக்கு மகளாக பத்தேப்பூர் சிக்ரியில் பிறந்தார். இவருக்கு ஆரம் பானு பேகம் என்ற இளைய சகோதரி இருந்தார்.[2]

இவர் அக்பரின் பராமரிப்பில் வளர்க்கப்பட்டார். மேலும் நல்ல இயல்புடையவர் மற்றும் அனைத்து மக்களிடையேயும் இரக்கமுள்ளவராக இருந்துள்ளார். ஜஹாங்கீர் இவர் மீது ஒரு நிலையான அன்பைக் கொண்டிருந்தார்.[3]

திருமணம்

[தொகு]
சக்குர்-உன்-நிசா பேகத்தை மணந்த படாக்சானின் ஆட்சியாளர் மிர்சா சாருக் (இறப்பு. 1607-1608)

1594 ஆம் ஆண்டில், அக்பர் சாருக்கான் மிர்சாவுடன் இவரது திருமணத்தை ஏற்பாடு செய்தார். இவர் படாக்சானின் சுலைமான் மிர்சா மற்றும் ஹராம் பேகம் ஆகியோரின் மகனான இப்ராகிம் மிர்சாவின் மகன் ஆவார்.[4] [5] இந்த திருமணம் செப்டம்பர் 2,1594 அன்று பேரரசி ஹமிதா பானு பேகமின் அரண்மனையில் நடந்தது.[6] பிற்காலத்தில் சாருக் முகலாயரிடமிருந்து விலகிச் சென்ற பிறகு மால்வாவின் ஆட்சியாளரானார்.[7]

1607இல் சாருக் மிர்சா இறந்தார். இரட்டையர்களான ஹசன் மிர்சா மற்றும் ஹுசைன் மிர்சா, சுல்தான் மிர்சா மற்றும் பாடி-உசு-ஜமான் மிர்சா என நான்கு மகன்களும் மற்றும் மூன்று மகள்களை விட்டுச் சென்றார்.[8]

1605 ஆம் ஆண்டில் அக்பர் இறந்த பிறகு, இவர் தனது சகோதரர் ஜஹாங்கீரிடம் சென்று ஜஹாங்கீரின் மூத்த மகனான குஸ்ராவ் மிர்சாவுக்கு உதவியாக இருந்தார். மேலும், மரியம் உசு-சமானி மற்றும் சலீமா சுல்தான் பேகம் ஆகியோருக்கும் உதவினார்.[9]

இறப்பு

[தொகு]

சக்குர்-உன்-நிசா பேகம் ஜனவரி 1,1653 அன்று இறந்தார். சிக்கந்திராவில் அமைந்துள்ள தனது தந்தையின் கல்லறைக்கு அருகே அடக்கம் செய்யப்பட்டார்.[10][11]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Portrait of Mirza Shah Rukh". www.rct.uk (in ஆங்கிலம்).
  2. Beale, Thomas William; Keene, Henry George (1894). An Oriental Biographical Dictionary: Founded on Materials Collected by the Late Thomas William Beale. W.H. Allen. p. 107.
  3. Jahangir, Emperor; Rogers, Alexander; Beveridge, Henry (1909). The Tuzuk-i-Jahangiri; or, Memoirs of Jahangir. Translated by Alexander Rogers. Edited by Henry Beveridge. London Royal Asiatic Society. pp. 36.
  4. Varma, Ramesh Chandra (1967). Foreign Policy of the Great Mughals, 1526 - 1727 A.D. Shiva Lal Agarwala. p. 49.
  5. Gulbadan Begum]] (1902). The History of Humayun (Humayun-Nama). Royal Asiatic Society. pp. 247, 267.
  6. Beveridge, Henry (1907). Akbarnama of Abu'l-Fazl ibn Mubarak - Volume I. Asiatic Society, Calcuta. p. 990.
  7. "Portrait of Mirza Shah Rukh". www.rct.uk (in ஆங்கிலம்).
  8. Jahangir, Emperor; Thackston, Wheeler McIntosh (1999). The Jahangirnama: memoirs of Jahangir, Emperor of India. Washington, D. C.: Freer Gallery of Art, Arthur M. Sackler Gallery, Smithsonian Institution; New York: Oxford University Press. pp. 303–4. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-512718-8.
  9. Xavier, Jesuit (1606). Missoes Jesuitas Na India. British Library London, MS 9854. p. 44. 
  10. Khan, Inayat; Begley, Wayne Edison (1990). The Shah Jahan Nama of 'Inayat Khan: an abridged history of the Mughal Emperor Shah Jahan, compiled by his royal librarian: the nineteenth-century manuscript translation of A.R. Fuller (British Library, add. 30,777). Oxford University Press. p. 489.
  11. Kanbo, Muhammad Saleh. Amal e Saleh al-Mausoom Ba Shahjahan Nama (Persian) - Volume 3. p. 117.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சக்குர்-உன்-நிசா_பேகம்&oldid=4114941" இலிருந்து மீள்விக்கப்பட்டது