உள்ளடக்கத்துக்குச் செல்

அக்பரின் கல்லறை

ஆள்கூறுகள்: 27°13′14″N 77°57′01″E / 27.22044°N 77.95031°E / 27.22044; 77.95031
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Tomb of Akbar
அக்பர் நிறுவிய நகரமான பத்தேப்பூர் சிக்ரியிலுள்ள புலாண்ட் தர்வாசா சாலையில் காணப்படும் அக்பரின் கல்லறையின் வெளிப்புற நுழைவாயில்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்இந்தியா சிக்கந்த்ரா, இந்தியா
புவியியல் ஆள்கூறுகள்27°13′14″N 77°57′01″E / 27.22044°N 77.95031°E / 27.22044; 77.95031
சமயம்இசுலாம்
மாகாணம்ஆக்ரா
ஆட்சிப்பகுதிசிக்கந்த்ரா
மாவட்டம்சிக்கந்த்ரா
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டு1605
நிலைTomb
தலைமைஜஹாங்கீர்

அக்பரின் கல்லறை (Akbar's tomb) முகலாய வம்சத்தில் மூன்றாவதும் மற்றும் பேரரசருமான அக்பரின் கல்லறையாகும். இவரது மகன் ஜஹாங்கீரால் கட்டப்பட்ட இந்த கல்லறை இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின் ஆக்ராவின் புறநகர்ப் பகுதியான சிக்கந்திராவில் 119 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இதன் கட்டிடங்கள் முக்கியமாக சிவப்பு மணற்கற்களால் கட்டப்பட்டுள்ளன. மேலும் அவை வெள்ளை பளிங்குகளால் செறிவூட்டப்பட்டுள்ளன.[1][2]

அமைவிடம்

[தொகு]

இது ஆக்ராவின் புறநகர்ப் பகுதியில் உள்ள சிக்கந்திராவில், மதுரா சாலையில் (தே.நெ.சா எண். 2) நகர மையத்திலிருந்து மேற்கு-வடமேற்கே 8 கி. மீ தொலைவில் அமைந்துள்ளது. கல்லறையிலிருந்து சுமார் 1 கிமீ தொலைவில், அவரது விருப்பமான மனைவியான <a href="./மரியம்_உசு-சமானி" rel="mw:WikiLink">மரியம் உசு-சமானி</a>யின் கல்லறை உள்ளது.[3][4] 

வரலாறு

[தொகு]
தனது அரசவையில் முகலாயப் பேரரசர் அக்பர் .

மூன்றாவது முகலாயப் பேரரசர் முதலாம் அக்பர் 1556 முதல் 1605 வரை ஆட்சி செய்தார். அக்பர் தனது தந்தை நசிருதீன் உமாயூனுக்குப் பிறகு, இந்திய துணைக் கண்டத்தில் முகலாய களங்களை விரிவுபடுத்தவும் ஒருங்கிணைக்கவும் இளம் பேரரசருக்கு உதவிய பைராம் கானின் கீழ் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்.[5][6] அக்பர் படிப்படியாக முகலாயப் பேரரசை விரிவுபடுத்தி, முகலாய இராணுவம், அரசியல், கலாச்சாரம் மற்றும் பொருளாதார மேலாதிக்கம் மூலம் இந்திய துணைக் கண்டத்தின் பெரும்பகுதியை உள்ளடக்கினார். அக்பரின் கீழ், முகலாய இந்தியா ஒரு வலுவான மற்றும் நிலையான பொருளாதாரத்தை உருவாக்கியது, இது அளவு மற்றும் செல்வத்தில் மூன்று மடங்காக அதிகரித்தது. இது வணிக விரிவாக்கத்திற்கும் இந்தோ-பாரசீக கலாச்சாரத்தின் அதிக ஆதரவிற்கும் வழிவகுத்தது.[7][8] தில்லி, ஆக்ரா மற்றும் ஃபதேபூர் சிக்ரி ஆகிய இடங்களிலுள்ள அக்பரின் அரசவைகள் பல மதங்களைச் சேர்ந்த துறவிகள், கவிஞர்கள், கட்டிடக் கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்களை ஈர்த்தன. மேலும் அவை கலைகள், எழுத்துக்கள் மற்றும் கற்றல் மையங்களாக அறியப்பட்டன.[9]

அக்பர், அக்டோபர் 3,1605 அன்று, அக்பர் வயிற்றுப்போக்கு தாக்குதலால் நோய்வாய்ப்பட்டார். அதில் இருந்து அவர் ஒருபோதும் மீளவில்லை. அக்பர் அக்டோபர் 26,1605 அன்று இறந்ததாக நம்பப்படுகிறது.[10][11] அக்பரின் மரணத்திற்குப் பிறகு, அவரது மகன் ஜஹாங்கீர் தனது தந்தையின் கல்லறையை கட்டத் திட்டமிட்டு முடித்தார். இதைக் கட்டுவதற்கு 1,500,000 ரூபாய் செலவானது. மேலும் இதை முடிக்க 3 அல்லது 4 ஆண்டுகள் ஆனது.[12][13]

அக்பரின் கல்லறை

இந்தியாவின் தலைமை ஆளுநர் என்ற முறையில், கர்சன் பிரபு அக்பரின் கல்லறையை விரிவான பழுதுபார்ப்பு மற்றும் மறுசீரமைப்புக்கு உத்தரவிட்டார். இப்பணிகள் 1905 இல் நிறைவடைந்தன. 1904 ஆம் ஆண்டில் பண்டைய நினைவுச்சின்னங்கள் பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் தொடர்பாக ஆக்ராவில் உள்ள கல்லறை மற்றும் பிற வரலாற்று கட்டிடங்களை மீட்டெடுப்பது குறித்து கர்சன் திட்டமிட்டார். இந்த திட்டத்தை "கடந்த காலத்திற்கு மரியாதை செலுத்துதல் மற்றும் எதிர்காலத்திற்கு மீட்கப்பட்ட அழகின் பரிசு" என்றும் விவரித்தார். இந்த பாதுகாப்புத் திட்டம் யாத்ரீகர்கள் மற்றும் அருகிலுள்ள மக்கள் கல்லறையை வணங்குவதை ஊக்கப்படுத்தியிருக்கலாம்.[14]

கல்லறையைச் சுற்றியுள்ள தோட்டத்தின் காட்சி

அக்பர், தனது பிரிய மனைவி மரியம்-உஸ்-ஜமானியின்மரணத்திற்குப் பிறகு, அவரது கல்லறையைச் சுற்றி ஒரு பெரிய தோட்டத்தை அமைத்தார். அதில் கிபி 1495 இல் சிக்கந்தர் லோடி ஆட்சியின் போது ஒரு திறந்த மாடம் ஒன்று கட்டப்பட்டது.[4] மே 1623 இல் மரியம் இறந்த பிறகு, அவர் தனது கணவரின் கல்லறைக்கு அருகில் இங்கு அடக்கம் செய்யப்பட்டார். இதனை அவரது மகன் ஜஹாங்கீர் ஒரு சிறந்த கல்லறையாக மாற்றினார்.[15] அக்பரின் ஒரே மனைவியாக அவர் அடக்கம் செய்யப்பட்டார். [16]

கல்லறையின் முதல் மாடியில், நான்கு பக்கங்களிலும் வளைவுகளுடன் கூடிய அறைகள் உள்ளன. மேலும் அக்பரின் கல்லறை அமைந்துள்ள ஒரு மண்டபமும் உள்ளது. அக்பரின் இரண்டு மகள்களான ஷக்ர்-உன்-நிசா பேகம் மற்றும் அராம் பானு பேகம் ஆகியோரின் கல்லறைகளும் இந்த மண்டபத்தில் உள்ளன.[17][18]

கல்லறையில் ஜாட்டுகளின் தாக்குதல்

[தொகு]

ஔரங்கசீப்பின் ஆட்சியின் போது, ராஜா ராம் ஜாட் தலைமையில் ஜாட் இன மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். அவர்கள் அக்பரின் கல்லறையை சூறையாடி, தங்கம், நகைகள், வெள்ளி மற்றும் தரைவிரிப்புகளை சூறையாடினர்.[19] கல்லறை திறக்கப்பட்டு மறைந்த மன்னரின் எலும்புகள் எரிக்கப்பட்டன.[20][21] இந்த வெற்றிகரமான தாக்குதல் 1685 இல் முந்தைய தோல்வியுற்ற முயற்சியைத் தொடர்ந்து வந்தது, இதன் விளைவாக முகலாயர்களுக்கும் ஜாட்டுகளுக்கும் இடையிலான மோதல் அதிகரித்தது.[22][23]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Smith, Vincent Arthur (1917). Akbar the Great Mogul. Oxford, Clarendon Press. p. 58. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0895634716. Archived from the original on 6 August 2017. பார்க்கப்பட்ட நாள் 13 November 2019.
  2. Eraly, Abraham (2000). Emperors of the Peacock Throne, The Saga of the Great Mughals. Penguin Books India. p. 136. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0141001437.
  3. Hindu Shah, Muhammad Qasim (1595–1612). Gulshan-I-Ibrahimi. Vol. 2. p. 143. Akbur, after this conquest, made a pilgrimage to Khwaja Moyin-ood-Deen Chishty at Ajmere and returned to Agra; from whence he proceeded to visit the venerable Sheikh Sulim Chishty, in the village of Seekry. As all the king's children had hitherto died, he solicited the Sheikh's prayers, who consoled him, by assuring him he would soon have a son, who would live to a good old age. Shortly after, his favourite sooltana, being then pregnant, on Wednesday the 17th of Rubbee-ool-Awul, in the year 997 was delivered of a son, who was called Sulim.
  4. 4.0 4.1 Aziz, Al (12 August 1905). Selections from the Native Newspapers Published in the United Provinces of Agra & Oudh. p. 262. JSTOR saoa.crl.25922623.
  5. Chandra, Satish (2005). Medieval India: from Sultanate to the Mughals (Revised ed.). New Delhi: Har-Anand Publications. pp. 111–112. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-241-1066-9.
  6. Srivastava. A.l. (1957). A Short History Of The Akbar The Great. p. 22.
  7. Vogel, Dr. J. Ph. (1910). Annual Report Archaeological Survey Of India 1910-II. Superintendent Government Printing, Calcutta, India. p. 94.
  8. Smith, Edmund W. (1973). Mughal Architecture of Fatehpur Sikri. Vol. I. Delhi: Indological Book. p. 31.
  9. Lal, Muni (1980). Akbar.
  10. "Remembering Akbar the Great: Facts about the most liberal Mughal emperor". India Today.
  11. The Fatehpur Sikri Chronicles
  12. "The Tuzuk-i-Jahangiri; or, Memoirs of Jahangir. Translated by Alexander Rogers. Edited by Henry Beveridge".
  13. Havell, E. B. (Ernest Binfield) (1918). The history of Aryan rule in India from the earliest times to the death of Akbar. The Library of Congress. New York, Frederick A. Stokes company. p. 463.
  14. Rajagopalan, Mrinalini (Summer 2011). "From loot to trophy: the vexed history of architectural heritage in imperial India". International Institute for Asian Studies. https://iias.asia/sites/default/files/IIAS_NL57_2425.pdf. 
  15. Mehta, J.L. (1981). Advance Study in the history of Medieval India. Vol. III. Sterling Publisher Private Limited. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8120704320. Bihari Mal gave rich dowry to his daughter and sent his son Bhagwan Das with a contingent of Rajput soldiers to escort his newly married sister to Agra as per Hindu custom. Akbar was deeply impressed by the highly dignified, sincere and princely conduct of his Rajput relations. He took Man Singh, the youthful son of Bhagwant Das into the royal service. Akbar was fascinated by the charm and accomplishments of his Rajput wife; he developed real love for her and raised her to the status of chief queen. She came to exercise a profound impact on the socio-cultural environment of the entire royal household and changed the lifestyle of Akbar. Salim (later Jahangir), the heir to the throne, was born of this wedlock on 30th August 1569.
  16. "Mariam's Tomb, Sikandara, Agra - Ticketed Monument - Archaeological Survey of India". Asi.nic.in. Archived from the original on 16 September 2013. பார்க்கப்பட்ட நாள் 2013-12-08.
  17. Kanbo, Muhammad Saleh. Amal e Saleh al-Mausoom Ba Shahjahan Nama (Persian) - Volume 3. p. 117.
  18. Fazl, Abul. The Akbarnama. Vol. III. Translated by Beveridge, Henry. Calcutta: ASIATIC SOCIETY OF BENGAL. p. 661. One of the occurrences was the birth of Ārām Bānū Begam.* On 12 Dai, 22 December 1584, divine month, and the 19th degree of Sagittarius, and according to the calculation of the Indians, one degree and 54 minutes, that night-gleaming jewel of fortune appeared, and glorified the harem of the Shāhinshāh.
  19. Catherine Blanshard Asher, Catherine Ella Blanshard Asher, 1992, "Architecture of Mughal India - Part 1", Cambridge University Press, Volume 4, Page 108.
  20. Edward James Rap; son, Sir Wolseley Haig and Sir Richard, 1937, "The Cambridge History of India", Cambridge University Press, Volume 4, pp.305.
  21. Waldemar Hansen, 1986, "The Peacock Throne: The Drama of Mogul India", Page 454.
  22. Manucci, Niccolao (2010). Mogul India (1653–1708): Or Storia Do Mogor. Low Price Publication.
  23. Dwivedi, Girish Chandra (1989). The Jats: Their Role in the Mughal Empire. Arnold Publishers. p. 36. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7031-150-8.

மேலும் வாசிக்க

[தொகு]
  • Keene, Henry George (1899). "Sikandra". A Handbook for Visitors to Agra and Its Neighbourhood (6 ed.). Thacker, Spink & Co. p. 43.
  • Havell, Ernest Binfield (1904). "Sikandra". A Handbook to Agra and the Taj, Sikandra, Fatehpur-Sikri, and the Neighbourhood. Longmans, Green & Co., London.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்பரின்_கல்லறை&oldid=4114788" இலிருந்து மீள்விக்கப்பட்டது