பைராம் கான்
பைராம் கான் | |
---|---|
بيرام خان | |
இளவரசர் அக்பரின் காப்பாளர் | |
முகலாயப் பேரரசின் காப்பாளர் | |
பதவியில் 1556–1561 | |
ஆட்சியாளர் | அக்பர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | c. 1501 படாக்சன் |
இறப்பு | 31 சனவரி 1561 சகரஸ்ர லிங்க குளம், அங்கில்வாட் பதான், குஜராத் |
பிள்ளைகள் | அப்துல் ரகீம் கான் |
தொழில் | அக்பரின் தலைமை முதலமைச்சர் மற்றும் தலைமைப் போர்ப்படைத்தலைவர் |
Military service | |
பற்றிணைப்பு | முகலாயப் பேரரசு |
சேவை ஆண்டுகள் | 1517-1561 |
தரம் | 45 |
கட்டளை | முகலாயர் படைகள் |
போர்கள்/யுத்தங்கள் | கண்வா போர் காக்ராப் போர் சம்பல் கோட்டை முற்றுகை முதலாம் பானிபட் போர் |
பைராம் கான் (Bairam Khan) (பாரசீக மொழி: بيرام خان) (இறப்பு: 1561) உமாயூன் மற்றும் அக்பர் தலைமையிலான முகலாயப் பேரரசில் தலைமை அமைச்சராகவும் மற்றும் தலைமைப் போர்ப்படைத் தலைவராகவும் பணியாற்றியவர். அக்பரின் இளமைக்காலத்தில், அவரது காப்பாளாரகவும் விளங்கியவர்.[1][2]
இளமை வாழ்க்கை
[தொகு]நடு ஆசியாவின் ஆப்கானித்தான் நாட்டில் படாக்சன் என்ற மாகாணத்தில் பிறந்த கலப்பு துருக்கி இனத்தை சேர்ந்த பைராம் கான் மற்றும் அவரது தந்தை, பாபரின் படையில் பணியாற்றியவர்கள்.[1]
போர்கள்
[தொகு]இந்தியப் படையெடுப்பின் போது 16 வயது பைராம் கான் பாபரின் தலைமையிலான படையில் சேர்ந்து கொண்டார்.[3] இந்தியத் துணைக்கண்டத்தில் வலிமையான முகலாயப் பேரரசை நிறுவ உமாயூனுக்கு பக்க பலமாக இருந்தவர். வாரணாசி, வங்காளம், குஜராத் மீதான படையெடுப்புகளின் போது படைத்தலைவராக இருந்தவர்.[3] உமாயூனை பாரசீகத்திற்கு நாடு கடத்தப் போது, பைராம் கானும் உடன் சென்றார். உமாயூன் காந்தாரத்தைக் கைப்பற்றிய போரில் துணையிருந்தார். 1556இல் வட இந்தியா முழுவதையும் கைப்பற்றும் போரில், முகலாயப் பேரரசின் தலைமைப் படைத்தலைவராக இருந்தார்.[4]
1556இல் உமாயூன் இறந்த நேரத்தில் குழந்தையாக இருந்த இளவரசன் அக்பரின் காப்பாளாராக செயல்பட்டார். முதலாம் பானிபட் போர் பானிபட் போரில் தில்லி பேரரசர் ஹெமுவுடன் போரிட்டார்.
பிற்கால வாழ்க்கை
[தொகு]சியா இசுலாமியரான பைராம் கானின் அரசியல் ஏற்றத்தை கண்ட சன்னி இசுலாமியப் பிரபுக்கள், பைராம் கானை முகலாயப் பேரரசிலிருந்து நீக்கிவிட முடிவு செய்தனர்.[5][6]
பைராம் கான் குஜராத் வழியாக மெக்காவுக்கு பயணிக்கையில்[7] ஹெமுவின் ஆப்கானியப் படைத்தலைவர் ஹாஜி கானால் கொல்லப்பட்டார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Thackston, Wheeler M. (2002) The Baburnama: Memoirs of Babur, Prince and Emperor The Modern Library, New York, p.xix, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-375-76137-3
- ↑ Ahmed,Humayun,(2011) Badsha Namdar, National Library, Dhaka, pp.200-233. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-984-502-017-6
- ↑ 3.0 3.1 Ray, Sukumar & Beg, M.H.A. (1992) Bairam Khan, Mirza Beg, 1992, page 11, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 969-8120-01-7
- ↑ Ray, Sukumar & Beg, M.H.A. (1992) Bairam Khan, Mirza Beg, 1992, page 27, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 969-8120-01-7
- ↑ https://books.google.com/books?id=HHyVh29gy4QC&pg=PA13#v=onepage&q&f=false
- ↑ "Rahim-Abdul Rahim Khankhanan at Indiagrid". Archived from the original on 2011-07-13. பார்க்கப்பட்ட நாள் 2016-08-23.
- ↑ Bose, Mandakranta. Faces of the Feminine in Ancient, Medieval, and Modern India, 2000.