கோ. அமர்நாத்து செட்டி
கோத்மேன் அமர்நாத் செட்டி (Kodman Amarnath Shetty) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். கர்நாடக அரசாங்கத்தில் ஓர் அமைச்சராகப் பணியாற்றினார். மூடபித்ரி ரோட்டரி கல்வி நிறுவனத்தின் தலைவராக இருந்தார். கர்நாடகாவில் சமய சார்பற்ற சனதா தளம் கட்சியின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவராகக் கருதப்பட்டார்.
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]அமர்நாத்து மூடபித்ரியில் பிறந்து வளர்ந்தார். 1965 ஆம் ஆண்டில் அரசியலில் நுழைந்தார் மற்றும் கார்கலா தாலுகாவில் உள்ள பாலட்கா பஞ்சாயத்து தலைவர், மூட்பித்ரி நகரப் பஞ்சாயத்து தலைவர், கார்கால தாலுக் வணிகர் சங்கத் தலைவர், கூட்டுறவு சேவை வங்கி மற்றும் தட்சிண கன்னடா மாவட்ட சனதா கட்சி என பல பொறுப்புகளை வகித்தார். 1983 ஆம் ஆண்டு முதன்முறையாக மூடபித்ரி தொகுதியில் போட்டியிட்டு கர்நாடக சட்டப்பேரவைக்கு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மீண்டும் 1987 மற்றும் 1994 ஆம் ஆண்டுகளில் அதே தொகுதியில்ம் போட்டியிட்டு மீண்டும் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3] சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில், சுற்றுலா மற்றும் சமய அறநிலையத்துறை என பல்வேறு துறைகளை வகித்து கர்நாடக அரசின் அமைச்சராகவும் பணியாற்றினார்.[4][5]
2020 ஆம் ஆண்டு சனவரி மாதம் 27 ஆம் தேதியன்று இவர் காலமானார்.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Statistical Report" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். Retrieved 20 October 2010.
- ↑ "Statistical Report" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். Retrieved 20 October 2010.
- ↑ "Statistical Report" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். Retrieved 20 October 2010.
- ↑ "Freedom fighter invited to presidential banquet". தி இந்து (Chennai, India). 8 August 2005 இம் மூலத்தில் இருந்து 14 December 2006 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20061214121558/http://www.hindu.com/2005/08/08/stories/2005080817970300.htm.
- ↑ "Mega job fair in Moodabidre from today". டெக்கன் ஹெரால்டு. Retrieved 20 October 2010.
- ↑ "JD(S) leader K Amarnath Shetty passes away". Deccan Herald (in ஆங்கிலம்). 2020-01-27. Retrieved 2020-02-06.