கோஹிஸ்தானி மொழி
கோஹிஸ்தானி மொழி | |
---|---|
Default
| |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-3 | mvy |
கோஹிஸ்தானி மொழி, பாகிஸ்தானின் வடமேற்கு முன்னரங்க மாகாணத்திலுள்ள கோஹிஸ்தான் பகுதியில் பேசப்படும் ஒரு மொழியாகும். எத்னோலாக் கோஹிஸ்தானி என்பதை பல மொழிகளைக் கொண்ட ஒரு குழுவின் பெயராகக் கொடுத்துள்ளது. எனினும் கோஹிஸ்தானில் சிந்து ஆற்றின் மேற்குக் கரையில் பெரும்பான்மையாகப் பேசப்படும் மொழியே இங்கே கோஹிஸ்தானி எனக் குறிப்பிடப்படுகின்றது. வேறு பல மலைப்பகுதி மொழிகளும் கோஹிஸ்தானி என்ற பெயருள் அடக்கப்படுவதனால், வேறுபடுத்துவதற்காக இம் மொழி சிந்து-கோஹிஸ்தானி என்ற பெயராலும் அழைக்கப்படுவது உண்டு. இது இந்திய-ஆரிய மொழிக் குடும்பத்தின், இந்திய-ஈரானிய மொழித் துணைக் குடும்பத்தில் உள்ள இந்திய-ஆரிய மொழிப் பிரிவைச் சேர்ந்தது. இம் மொழி தார்டிக் மொழிகளுள் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டு உள்ளது.
கோஹிஸ்தானி மொழியில் வாய்மொழி அல்லது எழுதப்பட்ட இலக்கியங்கள் எதுவும் இருப்பதாக அறியப்படவில்லை. இம் மொழி பற்றிப் போதிய அளவு ஆய்வுகள் நடத்தப்பட்டதாகத் தெரியவில்லை. எனினும் பிரித்தானியர் ஆட்சிக் காலத்திலும் அதன் பின்னரும் இம் மொழி பற்றிக் குறிப்பிட்டவர்கள் பல்வேறு பெயர்களால் இதனை அழைத்துள்ளனர். மையா' (Maiya), கில் (Khil), சேயோயிஸ் (Seois) என்பவை அவற்றுட் சில.
உசாத்துணைகள்
[தொகு]- கடல்கடந்த பாகிஸ்தான் பவுண்டேஷனின் இணையத் தளம் பரணிடப்பட்டது 2007-10-04 at the வந்தவழி இயந்திரம்
- சிந்து-கோஹிஸ்தானி மொழி பற்றிய எத்னோலாக் அறிக்கை