கோல்பெக்கைட்டு
Appearance
கோல்பெக்கைட்டு Kolbeckite | |
---|---|
இளம்பச்சை நிறத்தில் 1மி.மீ. அளவை விட சற்று அதிக அளவுள்ள நுண்படிகங்களாலான கோளத் தொகுதியாக கோல்பெக்கைட்டு கனிமம். இடம்: சிகிலார்பவும் குவாரி, ஆத்திரியா. அளவு: 4.9 x 3.9 x 2.3 செ.மீ. | |
பொதுவானாவை | |
வகை | பாசுப்பேட்டுக் கனிமம் |
வேதி வாய்பாடு | ScPO4·2H2O |
இனங்காணல் | |
படிக அமைப்பு | ஒற்றைச்சாய்வு |
கோல்பெக்கைட்டு (Kolbeckite) என்பது ScPO4·2H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். இசுக்காண்டியம் பாசுப்பேட்டு இருநீரேற்று கனிமம் என்று இது வகைப்படுத்தப்படுகிறது. 1926 ஆம் ஆண்டு செருமனியின் சாக்சனி மாநிலத்தில் உள்ள சிக்மைடெபெர்க்கில் முதன்முதலில் கோல்பெக்கைட்டு கண்டறியப்பட்ட்து. செருமன் நாட்டு கனிமவியலாலர் பிரடெரிக் எல் டபிள்யூ கோல்பெக்கின் நினைவாக கனிமத்திற்கு இப்பெயர் சூட்டப்பட்டது. பொதுவாக பிற பாசுப்பேட்டுக் கனிமங்களுடன் சேர்ந்து படிகத்தொகுதிகளாக கோல்பெக் கண்டறியப்படுகிறது. .
பன்னாட்டு கனிமவியல் சங்கம் கோல்பெக்கைட்டு கனிமத்தை Kbe[1] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- Hey, M. H.; Milton Charles; Dwornik Edward J. (1982). "Eggonite (Kolbeckite, Sterrettite), ScPO4·2H2O". Mineralogical Magazine 46 (341): 493–497. doi:10.1180/minmag.1982.046.341.15 இம் மூலத்தில் இருந்து November 14, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121114151211/http://www.minersoc.org/pages/Archive-MM/Volume_46/46-341-493.pdf.
- Kolbeckite at Mindat.org
- Kolbeckite at Webmineral
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.