உள்ளடக்கத்துக்குச் செல்

சாக்சனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாக்சனி கட்டற்ற மாநிலம்
Freistaat Sachsen
Swobodny Stata Sakska
சாக்சனி கட்டற்ற மாநிலம்-இன் கொடி
கொடி
சாக்சனி கட்டற்ற மாநிலம்-இன் சின்னம்
சின்னம்
செருமனியில் சாக்சனி அமைவிடம்
செருமனியில் சாக்சனி அமைவிடம்
Countryஜெர்மனி
Capitalதிரெசுடன்
அரசு
 • அமைச்சர் தலைவர்மைக்கேல் குரெட்சுக்மெர் (CDU) (CDU)
 • Governing partiesCDU / SPD
 • Votes in Bundesrat{{{votes}}} (of 69)
பரப்பளவு
 • Total18,415 km2 (7,110 sq mi)
மக்கள்தொகை
 (திசம்பர் 2008){{{pop_ref}}}
 • Total41,92,700
 • அடர்த்தி230/km2 (590/sq mi)
நேர வலயம்ஒசநே+1 (CET)
 • கோடை (பசேநே)ஒசநே+2 (CEST)
ஐஎசுஓ 3166 குறியீடு{{{iso region}}}
NUTS Region{{{NUTS}}}
இணையதளம்sachsen.de

சாக்சனி கட்டற்ற மாநிலம் (Free State of Saxony, இடாய்ச்சு மொழி: Freistaat Sachsen), இடாய்ச்சுலாந்தின் 16 மாநிலங்களில் ஒன்றாகும். இது தென்கிழக்கில், செக் குடியரசுக்கு வடக்கில் உள்ளது. கிழக்கே போலந்து உள்ளது. இதன் மிகப்பெரிய நகரம் லைப்சிக். தலைநகரம் திரெசுடன். இம்மாநிலம் 1990இல் உருவானது. 18,413 சதுர கிலோமீட்டர்கள் (7,109 சது மை) பரப்பளவுடன் சாக்சனி செருமனியின் 16 மாநிலங்களில் பத்தாவது பெரிய மாநிலமாக உள்ளது. 4 மில்லியன் மக்கள்தொகையுடன் ஆறாவது மக்கள்மிகு மாநிலமாக விளங்குகின்றது.[1][2][3]

இந்த மாநிலத்தின் வரலாறு ஆயிரமாண்டுகளுக்கும் முந்தையது. இது பண்டைக்கால சிற்றரசாகவும் புனித உரோமைப் பேரரசை தேர்ந்தெடுக்கும் உரிமை பெற்ற தேர்வுநாடாகவும் சாக்சனி இராச்சியமாகவும் இருமுறை குடியரசாகவும் இருந்துள்ளது.

தற்கால சாக்சனியை பழங்குடி சாக்சன்கள் வாழ்ந்திருந்த தொன்மை சாக்சனியுடன் குழப்பிக் கொள்ளக்கூடாது. தொன்மை சாக்சன்கள் இருந்த பகுதி தற்கால செருமானிய மாநிலங்களான கீழ் சாக்சனி, சாக்சனி-அனால்ட், மற்றும் வடக்கு ரைன்-வெஸ்ட்பேலியாவின் வெஸ்ட்பேலியப் பகுதிகளுக்கு ஒத்திருக்கும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Bruttoinlandsprodukt, Bruttowertschöpfung | Statistikportal.de". Statistische Ämter des Bundes und der Länder | Gemeinsames Statistikportal (in ஜெர்மன்). Retrieved 2023-07-31.
  2. "Sub-national HDI – Area Database". Global Data Lab (in ஆங்கிலம்). Retrieved 2018-09-13.
  3. Gebel, K. (2002). Language and ethnic national identity in Europe: the importance of Gaelic and Sorbian to the maintenance of associated cultures and ethno cultural identities (PDF). London: Middlesex University. Archived from the original (PDF) on 1 May 2019. Retrieved 13 June 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாக்சனி&oldid=4098717" இலிருந்து மீள்விக்கப்பட்டது