கோலா திராங்கானு மாநகராட்சி
Dewan Bandaraya Kuala Terengganu Kuala Terengganu City Council | |
துறை மேலோட்டம் | |
---|---|
அமைப்பு | 1 சனவரி 2008 |
முன்னிருந்த அமைப்பு |
|
ஆட்சி எல்லை | கோலா திராங்கானு, கோலா நெருஸ் மாவட்டம் |
தலைமையகம் | கோலா திராங்கானு மாநகராட்சி தலைமையகம் Tingkat 4-8, Menara Permint, Jalan Sultan Ismail, 20200 Kuala Terengganu, Terengganu, Malaysia கோலா திராங்கானு, திராங்கானு |
குறிக்கோள் | நீர் முகப்பு வரலாற்று நகரம் (Waterfront Heritage City) |
அமைப்பு தலைமைகள் |
|
வலைத்தளம் | mbkt |
கோலா திராங்கானு மாநகராட்சி (மலாய்: Majlis Bandaraya Kuala Terengganu; ஆங்கிலம்: Kuala Terengganu City Council); (சுருக்கம்: MBKT) என்பது மலேசியா, திராங்கானு, மாநிலத்தில் கோலா திராங்கானு மாநகரத்தையும்; கோலா நெருஸ் மாவட்டத்தையும் (Kuala Nerus District) நிர்வகிக்கும் மாநகராட்சி ஆகும். மலேசியாவின் திராங்கானு மாநில அரசாங்கத்தின் கீழ் இந்த மாநகராட்சி செயல்படுகிறது.[1]
2008 சனவரி 1-ஆம் தேதி கோலா திராங்கானு நகரத்திற்கு அதிகாரப்பூர்வமாக மாநகரத் தகுதி வழங்கப்பட்டது. அதன் பிறகு மாநகராட்சி நிறுவப்பட்டது. இதன் அதிகார வரம்பு 605 சதுர கி. மீ. பரப்பளவைக் கொண்டது.
பொது
[தொகு]கோலா திராங்கானு மாநகராட்சியின் வளர்ச்சி நிலைகள்:
- 1905 - கோலா திராங்கானு மாவட்ட வாரியம் (Kuala Terengganu District Board)
- 1937 - கோலா திராங்கானு & மாராங் நகராட்சி (Kuala Terengganu & Marang Town Council)
- 1979 - கோலா திராங்கானு நகராட்சி (Kuala Terengganu Municipal Council)
- 2008 - கோலா திராங்கானு மாநகராட்சி (Kuala Terengganu City Council)
கோலா திராங்கானு மாநகராட்சி முதல்வரும்; மற்றும் 24 மாநகராட்சி மன்ற உறுப்பினர்களும் ஓராண்டு காலம் பணியாற்ற திராங்கானு மாநில அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த மாநகராட்சியின் நோக்கம்; கோலா திராங்கானு மாநகரத்தின் உள்கட்டமைப்பு, பொது வசதிகளைப் பராமரிப்பதாகும். மேலும், கட்டடங்களை ஒழுங்கான முறையில் கட்டமைப்பது; பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பது; சுற்றுச் சூழலை அழகுபடுத்துவது; போன்றவை மாநகராட்சியின் முக்கியச் செயல்பாடுகள் ஆகும்.[2].
கோலா திராங்கானு மாநகராட்சி முதல்வர்கள்
[தொகு]# | முதல்வர் | தொடக்கம் | முடிவு |
---|---|---|---|
1 | தெங்கு நோங் சிக் தெங்கு அச்சிக் | 18 சனவரி 1979 | 5 செப்டம்பர் 1982 |
2 | அப்துல் சைடி | 5 செப்டம்பர்1982 | 23 டிசம்பர் 1982 |
3 | அருண் அம்டான் | 23 டிசம்பர் 1982 | 8 மே 1986 |
4 | அப்துல் ரசீட் | 8 மே 1986 | 27 அக்டோபர் 1995 |
5 | மாட் இராண்டி ரபீக் | 27 அக்டோபர் 1995 | 4 பிப்ரவரி 2001 |
6 | சரோன் காடீர் | 4 பிப்ரவரி 2001 | 29 ஆகஸ்டு 2006 |
7 | மைமுனா சகாரா | 29 ஆகஸ்டு 2006 | 31 டிசம்பர் 2007 |
8 | மாட் ரசாலி காசிம் | 1 சனவரி 2008 | 31 சனவரி 2010 |
9 | அசுலான் டகாங் | 1 பிப்ரவரி 2010 | 9 டிசம்பர் 2014 |
10 | கமீல் ஒசுமான் | 1 சனவரி 2015 | 5 செப்டம்பர் 2016 |
11 | சுல்கிப்லி அபு பாக்கார் | 5 செப்டம்பர் 2016 | 31 டிசம்பர் 2017 |
12 | சைமுன் சாலே | 1 சனவரி 2018 | 15 சனவரி 2019 |
13 | சகிடான் எம்போக் | 16 சனவரி 2019 | 9 மே 2021 |
14 | ரொசாலி சாலே | 10 மே 2021 | பதவியில் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ The total population and total area also includes the population and area for the district of Kuala Nerus, which was a part of the district of Kuala Terengganu, but Kuala Nerus is still under the jurisdiction of Kuala Terengganu City Council.
- ↑ Mohd Yahya, N., The local government system in Peninsular Malaysia: with special reference to the structure, management, finance and planning, 1987