கோபால்பூர் விலங்குக் காட்சிச்சாலை
கோபால்பூர் விலங்குக் காட்சிச்சாலை | |
---|---|
அமைவிடம் | கோபால்பூர், பாலாம்பூர் தெகசில், இமாச்சலப்பிரதேசம், இந்தியா] |
ஆள்கூறுகள் | 32.1389°0′0″N 76.449°0′0″E / 32.13890°N 76.44900°E |
பரப்பளவு | 0.12 சதுர கிலோமீட்டர்கள் (0.046 sq mi) |
நிருவாக அமைப்பு | இமாச்சலப்பிரதேச அரசு |
வலைத்தளம் | 164 |
கோபால்பூர் விலங்குக் காட்சிச்சாலை (Gopalpur Zoo), என்பது இந்தியாவின் இமாச்சலப் பிரதேசம், காங்ரா மாவட்டத்தில் தரம்சாலா - பாலம்பூர் சாலையில் உள்ள கோபால்பூர் கிராமத்தில் அமைந்துள்ள ஒரு உயிரியல் பூங்காவாகும். இது இமயமலையின் தௌலாதர் மலைத்தொடரால் சூழப்பட்டுள்ளது. விலங்குக் காட்சிசாலையானது மேப்பிள் மரங்கள், குதிரை செஸ்நட் மரங்களால் சூழப்பட்டு குளிர்ச்சியுடன் பசுமையாக அமைந்துள்ளது.[1] இந்த மிருகக்காட்சிசாலையில் காணப்படும் முக்கிய விலங்குகள்: ஆசியச் சிங்கம், சிறுத்தை, இமயமலை கருப்புக் கரடி, கடமான், கேளையாடு, கோரல், காட்டுப் பன்றி, பூட்டான் சாம்பல் மயில்கள், சீர் பெசன்ட், சிவப்பு காட்டுக் கோழி,மயில், பிணந்தின்னிக் கழுகு, பருந்துகள் போன்றவை.

இமாச்சல பிரதேச உயிரியல் பூங்காக்கள் மற்றும் பறவைகள்
[தொகு]கோபால்பூர், ரேணுகா மற்றும் குப்ரி ஆகிய இடங்களில் மூன்று அங்கீகரிக்கப்பட்ட விலங்கியல் பூங்காக்களும் சிம்லா, சரஹான் மற்றும் சைல் ஆகிய இடங்களில் மூன்று பறவை காட்சியகங்களும் உள்ளன.
இமாச்சல பிரதேச தேசிய பூங்காக்கள்
[தொகு]- பெரிய இமாலய தேசியப் பூங்கா, குல்லு மாவட்டம்: பகுதி 765 கி.மீ 2
- ஊசி பள்ளத்தாக்கு தேசிய பூங்கா, லாஹெளல் மற்றும் ஸ்பிதி மாவட்டம் : பகுதி 675 கிமீ 2
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Gopalpur Zoo". Discovered India. Retrieved 9 August 2014.
வெளி இணைப்புகள்
[தொகு]- இமாச்சல் பிரதேச சுற்றுலா வளர்ச்சிக் கழகம் பரணிடப்பட்டது 2022-04-01 at the வந்தவழி இயந்திரம்
- இமாச்சல பிரதேசத்தின் சுற்றுச்சூழல் சுற்றுலா சங்கம் பரணிடப்பட்டது 2020-07-28 at the வந்தவழி இயந்திரம்
- இமாச்சல பிரதேச வனத்துறை பரணிடப்பட்டது 2022-03-12 at the வந்தவழி இயந்திரம்