கோட்டு விளக்கப்படம்
கோட்டு விளக்கப்படம் அல்லது கோட்டு வரைபடம் (line chart, line graph) என்பது விளக்கப்படங்களுள் ஒரு வகையாகும். இவ்விளக்கப்படம் தகவல்களை, "அடையாளம் காட்டிகள்" எனப்படும் தரவு புள்ளிகளின் தொடரை நேர் கோட்டுத்துண்டுகளால் இணைத்து காட்சிப்படுத்துகிறது.[1] பலதுறைகளில் பரவலாகப் பயன்படுத்தப்படும் அடிப்படை வகை விளக்கப்படமாக இது உள்ளது. தரவு புள்ளிகள் வரிசைப்படுத்தப்பட்டும் (புள்ளிகளின் x-அச்சு மதிப்புகளைக் கொண்டு), கோட்டுத்துண்டுகளால் இணைக்கப்பட்டும் இருப்பதைத் தவிர கோட்டு விளக்கப்படமானது சிதறல் படத்தை ஒத்திருக்கும். பெரும்பாலும் கோட்டு விளக்கப்படங்கள், கால இடைவெளிகளில் தரவின் போக்கைக் காட்சிப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய கோட்டுப்படங்கள் ஓட்ட விளக்கப்படங்களென அழைக்கப்படுகின்றன.[2]
வரலாறு
[தொகு]கணிதவியலாளர்கள் பிரான்சிஸ் காக்சுபீ, நிக்கோலசு சாமுவேல் குருக்குயிசு, யோகான் என்றிச் இலாம்பெர்ட் மற்றும் வில்லியம் பிளேபேர் ஆகியோர் பயன்படுத்திய கோட்டு விளக்கப்படங்களே காலத்தால் முந்தியவையாகக் கருதப்படுகின்றன.[3]
எடுத்துக்காட்டு
[தொகு]அறிவியல் சோதனைகளில் கண்டறியப்பட்ட விவரங்கள் பெரும்பாலும் வரைபடம் மூலம் காட்சிப்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக, குறிப்பிட்ட காலங்களில் ஒரு பொருளின் வேகத்தைத் தரும் விவரங்கள் பின்வருமாறு வரிசைப் பட்டியலிட்டு அதற்கான கோட்டு விளக்கப்படம் காட்டப்பட்டுள்ளது:
முடிந்த நேரம் (sb | வேகம் (m s−1) |
---|---|
3 | 3 |
3 | 5 |
5 | 7 |
7 | 12 |
12 | 16 |
16 | 25 |
25 | 32 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Burton G. Andreas (1965). Experimental psychology. p.186
- ↑ Neil J. Salkind (2006). Statistics for People who (think They) Hate Statistics: The Excel Edition. page 106.
- ↑ Michael Friendly (2008). "Milestones in the history of thematic cartography, statistical graphics, and data visualization" பரணிடப்பட்டது 2018-09-26 at the வந்தவழி இயந்திரம். pp 13–14. Retrieved 7 July 2008.