கோசுதானி ஆறு
கோசுதானி ஆறு (Gosthani River இந்தியாவில் உள்ள ஒரு நதி ஆகும். இது கிழக்குத் தொடர்ச்சி மலையில் உள்ள அனந்தகிரி மலைகளில் உருவாகிறது. இதன் மூலத்திற்கு அருகில் அமைந்துள்ள போரா குகைகள் வழியாகப் பாய்கிறது. விசாகப்பட்டினம் நகரின் வழியாகப் பாயும் மிகப்பெரிய ஆறு இது. இது பீமுனிப்பட்டினம் அருகே ஒரு கழிமுகம் வழியாக வங்காள விரிகுடாவில் சேர்வதற்கு முன் 120 கி.மீ. தூரம் பயணிக்கிறது.[1][2] இதன் ஆற்றுப் படுகையானது இரண்டு கடலோர மாவட்டங்களான விசயநகரம் மற்றும் விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ளது. கோசுதானி ஒரு சிறிய ஆற்றுப் படுகை ஆகும். மொத்த வடிகால் பகுதி 2000க்கும் குறைவான சதுர கி.மீ. பரப்பில் அமைந்துள்ளது.[3] பள்ளத்தாக்கின் பெரும்பகுதி கோண்டலைட் பாறைகளால் மூடப்பட்டிருக்கும். விசாகப்பட்டினம் மாவட்டத்தின் மொத்த பரப்பளவில் சுமார் 3% கோசுதானி ஆற்றுப் படுகையில் உள்ளது.[4] இந்த ஆறு மானாவாரியாக உள்ளது. சராசரியாக ஆண்டிற்கு 110 செ.மீ. மழையைப் பெறுகிறது. பெரும்பாலான மழையானது தென்மேற்கு பருவமழைக் காலத்தில் கிடைக்கின்றது. பீமுனிப்பட்டினம் அருகே பல சிவப்பு மணல் மலைகள் உள்ளன. இங்கு கோசுதானி வங்காள விரிகுடாவுடன் இணைகிறது. இவை சம்பல் பள்ளத்தாக்குகளை நினைவூட்டுகின்றன. இவை ஆறு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு டெக்டோனிக் செயல்பாட்டைத் தொடர்ந்து ஆற்றின் போக்கில் ஏற்பட்ட மாற்றங்களால் உருவாக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. இந்த நதி பீம்லியில் வங்காள விரிகுடாவில் இணைகிறது. இங்கு இது ஒரு முகத்துவாரத்தை உருவாக்குகிறது.[5]
வரலாற்று இடங்கள்
[தொகு]வங்காள விரிகுடாவுடன் ஆற்றின் சங்கமத்தில் அமைந்துள்ள பீமுனிப்பட்டினம் அல்லது பீம்லி, இந்தியாவில் டச்சுக் கிழக்கிந்திய கம்பனியின் ஆரம்பக்கால புறக்காவல் நிலையங்களில் ஒன்றாகும். மேலும் அந்த காலத்தின் பல நினைவுச்சின்னங்கள் இந்த நகரத்தில் உள்ளன.[6][7] பௌரலகொண்டா, பீம்லிக்கு அருகில் மற்றும் குடிவாடா ஆகிய இடங்களில் பண்டைய பௌத்த குடியேற்றங்கள் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டுள்ளன. இந்த நதி மக்களுக்குக் குடிநீரை வழங்கியதாகவும், பீம்லியில் உள்ள முகத்துவாரம் கடல்வழி வர்த்தகத்தை எளிதாக்கியதாகவும் கருதப்படுகிறது.[5][8]
நீர்நிலைகள்
[தொகு]கோசுதானியின் நீர், விவசாயம் மற்றும் தொழில்துறை நோக்கங்களுக்காகத் திருப்பி விடப்படுகிறது. மேலும் இந்த நதி விஜயநகரம் மற்றும் விசாகப்பட்டினம் நகரங்களுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது. கோசுதானியின் ஆற்றங்கரையில் குறிப்பாகக் கோடை மாதங்களில் தண்ணீரை எடுப்பதற்காகப் பல ஊடுருவல் கிணறுகள் மூழ்கடிக்கப்பட்டுள்ளன.[9] 3 டிஎம்சி கொள்ளளவு கொண்ட தாடிப்புடி நீர்த்தேக்கத் திட்டம் 1963-68ஆம் ஆண்டு கோசுதானியில் நிறுவப்பட்டது. இது விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள கண்ட்யாடா மண்டலத்தில் அமைந்துள்ளது. இது 15,378 ஏக்கர்கள் (62.23 km2) பாசனம் செய்கிறது. விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள நிலம் மற்றும் விசாகப்பட்டினத்திற்குக் குடிநீர் வழங்குகிறது.[10] சப்பாறை அருவி பசுமையான பள்ளத்தாக்கு ஒன்றில் அமைந்துள்ளது.[11] இது கோசுதானி ஆற்றில் உள்ளது. விசாகப்பட்டினம் முதல் ஸ்ரீகாகுளம் வரையிலான தங்க நாற்கரச் சாலைத் திட்ட நெடுஞ்சாலை கோசுதானியைக் கடந்து செல்கிறது. இதற்காக 2003-ல் புதிய பாலம் திறக்கப்பட்டது.[12]
சுற்றுச்சூழல் பிரச்சனைகள்
[தொகு]ஆந்திரப் பிரதேச அரசு விசாகப்பட்டினத்தில் பாக்சைட் சுரங்க குத்தகைக்கு வழங்குவதற்கான முடிவு உள்ளூர் மக்கள், ஆர்வலர்கள் மற்றும் மத்திய அரசிடமிருந்து விமர்சனங்களை ஈர்த்துள்ளது. குழாய்க் கிணறுகளை மூழ்கடித்து[13][14] நிலத்தடி நீரைப் பிரித்தெடுப்பதற்காக கோசுதானியின் ஆற்றுப் படுகையை ஒரு தனியார் நிறுவனத்திற்குக் குத்தகைக்கு விடுவதற்கான முடிவு, இப்பகுதியில் உள்ள 100,000க்கும் மேற்பட்ட மக்களின் நீர்த்தேவை மற்றும் நிலத்தடி நீர்மட்டம் மற்றும் நீர் பாதுகாப்பில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்துவதாகக் கருதப்படுகிறது.[15]
படத்தொகுப்பு
[தொகு]-
கோசுதானி ஆறு மழைக்காலத்தில் போரா குகை அருகில்
-
கோசுதானி ஆறு பீமாசிங்கி அருகில்
-
கோசுதானி ஆறு தாகாரபுவாலாசாவில்
-
கோசுதானி ஆறு தாகாரபுவாலாசாவில் சூரியன் மறையும் வேளையில்
-
பீம்முனிபட்டிணத்தில் கோசுதானி ஆறு தாகாரபுவாலாசாவில்
-
கோசுதானி ஆற்றில் சூரியன் ஒளி மறையும் வேளையில்
-
பீம்முனிப்பட்டிணத்தில் கோசுதானி ஆற்றில் படகுப் பயணம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Ganesh, B (April 2013). "Studies on textural characteristics of sediments from Gosthani River Estuary - Bheemunipatnam, A.P., East Coast of India". Journal of the Indian Geophysical Union 17 (2): 139. http://www.igu.in/17-2/3ganesh.pdf. பார்த்த நாள்: 30 June 2013.
- ↑ "A journey into the heart of nature". The Hindu Businessline. 10 April 2013. http://www.thehindubusinessline.com/on-campus/a-journey-into-the-heart-of-nature/article4602904.ece.
- ↑ Bay of Bengal Large Marine Ecosystem Project - Country Report on Pollution (India) (PDF). 2011. p. 18.
- ↑ "IRRIGATION PROFILE: VISAKHAPATNAM DISTRICT". Government of Andhra Pradesh. Archived from the original on 20 August 2010. பார்க்கப்பட்ட நாள் 27 June 2013.
- ↑ 5.0 5.1 Indian Archaeology 2000-2001 - A Review (PDF). 2006.
- ↑ "Fifteen decades of glory" இம் மூலத்தில் இருந்து 2010-10-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101016060552/http://www.hindu.com/mp/2010/09/25/stories/2010092552240300.htm.
- ↑ "Andhra's English past". http://www.deccanherald.com/content/228219/F.
- ↑ "Evidence of Buddhist site found". The Hindu. 9 October 2012. http://www.thehindu.com/news/national/andhra-pradesh/evidence-of-buddhist-site-found/article3980627.ece.
- ↑ "Visakhapatnam's water problems may continue". தி இந்து. 12 April 2006 இம் மூலத்தில் இருந்து 19 April 2006 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060419152236/http://www.hindu.com/2006/04/12/stories/2006041203700200.htm.
- ↑ Irrigation profile of Vizianagaram district. Thatipudi Reservoir Project பரணிடப்பட்டது 2007-09-28 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "Green valley of delight". Deccan Herald. 14 April 2013. http://www.deccanherald.com/content/325675/green-valley-delight.html.
- ↑ "New bridges to be inaugurated in AP". The Hindu Businessline. 11 December 2003. http://www.thehindubusinessline.in/2003/12/11/stories/2003121102781700.htm.
- ↑ "Death Of Red Earth Foretold". Outlook. 9 April 2012. http://www.outlookindia.com/article.aspx?280388.
- ↑ "Tribal minister Kishore Chandra Deo to urge governors to use special powers to cancel mining leases in tribal areas". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 11 October 2012 இம் மூலத்தில் இருந்து 29 June 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130629090142/http://articles.timesofindia.indiatimes.com/2012-10-11/india/34386487_1_tribal-areas-tribal-affairs-5th-schedule.
- ↑ "Beyond the last frontier". Frontline 21 (19). 11–24 September 2004. http://www.frontline.in/static/html/fl2119/stories/20040924006400800.htm. பார்த்த நாள்: 27 June 2013.