உள்ளடக்கத்துக்குச் செல்

சிறீ இலங்கமல்லேசுவர காட்டுயிர் காப்பகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

 

சிறீ இலங்கமல்லேசுவர காட்டுயிர் காப்பகம் (Sri Lankamalleswara Wildlife Sanctuary) என்பது ஆந்திரப் பிரதேசத்தின் கடப்பா மாவட்டத்தில் அமைந்துள்ள காட்டுயிர் காப்பகம் ஆகும். ஜெர்டன் கல்குருவி காணப்படும் ஒரே ஒரு வாழிடம் இதுவாகும். இங்கு 176 குடும்பத்தினைச் சார்ந்த தாவரங்கள் காணப்படுகிறது. ஜெர்டனின் கல்குருவி மீண்டும் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, கண்டுபிடிக்கப்பட்ட இப்பகுதி வனவிலங்கு காப்பகமாக அறிவிக்கப்பட்டது.

வரலாறு

[தொகு]

இந்த சரணாலயம் ஜெர்டன் கல்குருவியின் வசிப்பிடமாக நன்கு அறியப்பட்டதாகும். இது மிகவும் ஆபத்தான உயிரினமாகும். இந்த பறவை முதன்முதலில் 1848ஆம் ஆண்டில் அறுவை சிகிச்சை நிபுணர் - இயற்கை ஆர்வலர் தாமஸ் சி. ஜெர்டன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. 1986ஆம் ஆண்டு மீண்டும் கண்டுபிடிக்கப்படும் வரை அழிந்துவிட்டதாக கருதப்பட்டது.[1] இந்தப் பறவை இப்போது சிறீலங்கை மல்லேசுவரா காட்டுயிர் காப்பகத்தில் அரிதான புதர்ப் பகுதிகள் மற்றும் காடுகளில் வாழ்கிறது. இங்குள்ள நிலப்பரப்பு மற்றும் வானிலை நிலைமைகள் இதன் இருப்புடன் ஒத்துப்போகின்றன.

தாவரங்களும் விலங்குகளும்

[தொகு]

சிறீ இலங்கமல்லேசுவர காட்டுயிர் காப்பகத்தில் 1400 தாவரச் சிற்றினங்கள் உள்ளன. இவை 176 குடும்பங்களின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இது ஆழமான பள்ளத்தாக்குகள் மற்றும் செங்குத்தான சரிவுகளுடன் கூடிய உலர்ந்த இலையுதிர் கலந்த முள் காடுகளைக் கொண்டுள்ளது. செஞ்சந்தனம், அகணிய தாவரமாக இங்கு காணப்படுகிறது.[2] சிறுத்தை, தேன் கரடி, புள்ளி மான், கடமான், நாற்கொம்பு மான், இந்தியச் சிறுமான், நீலான், காட்டுப்பன்றி, நரி மற்றும் செர்டன் கல்குருவி இங்குக் காணப்படும் விலங்குகள் ஆகும்.

வருகை

[தொகு]

வருடத்தின் எந்த நேரத்திலும் சுற்றுலாப் பயணிகள் சரணாலயத்திற்குச் செல்ல அனுமதிக்கப்பட்டாலும், அக்டோபர் மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடைப்பட்ட காலப்பகுதியே பார்வையிடச் சிறந்த காலம் ஆகும்.[3] சரணாலயத்தை எளிதில் அடையலாம். இக் காட்டுயிர் காப்பகம் கடப்பா நகரத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கடப்பா நகரத்தில் வானூர்தி நிலையமும் அமைந்ள்ளது.[4]

  • அணுகல்தன்மை: கடப்பா தொடருந்து நிலையத்திலிருந்து 60 கி.மீ.
  • தங்குமிடம்: சித்தாவட்டம் & கடப்பாவில் உள்ள வன ஓய்வு இல்லம்.
  • பருவம்: அக்டோபர் முதல் மார்ச் வரை.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Endangered Jerdon's Courser on Centre's priority list". 13 February 2011.
  2. "博创彩票_博创彩票代理_博创彩票代理平台". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2023-09-09.
  3. "APFD Website". Archived from the original on 2014-01-25. பார்க்கப்பட்ட நாள் 2014-07-05.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2023-09-09.

வெளி இணைப்புகள்

[தொகு]