உள்ளடக்கத்துக்குச் செல்

கொ. கோபிநாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொ. கோபிநாத் (K. Gopinath, பிறப்பு: நவம்பர் 19, 1962) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி. இவர் தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பாக ஓசூர் சட்டமன்றத் தொகுதியில் 2011ஆம் ஆண்டின் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இதற்கு முன் இவர் இத்தொகுதியில் இருந்து இதே கட்சி சார்பாக 2001 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்[1][2]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016 இல் இத்தொகுதியில் இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் பாலகிருஷ்ணா ரெட்டியிடம் தோல்வி அடைந்தார்.[3]

இளமைப்பருவம்[தொகு]

இவர் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியில் 1962ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் நாள் பிறந்தார். இவரது தந்தை கொண்டப்பா ஆவார். இவர் மணமானவர்.[4]

போட்டியிட்டவை[தொகு]

தேர்தல்கள் தொகுதி கட்சி முடிவு வாக்கு விழுக்காடு எதிர் வேட்பாளர் எதிராக போட்டியிட்ட கட்சி எதிர் வேட்பாளரின் வாக்கு விழுக்காடு
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996 ஒசூர் காங்கிரசு தோல்வி 9.42 பி. வெங்கடசுவாமி ஜனதா தளம் 34.89[5]
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001 ஒசூர் காங்கிரசு வெற்றி 35.24 பி. வெங்கடசுவாமி பாஜக 30.25[6]
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006 ஒசூர் காங்கிரசு வெற்றி 42.08 வி. சம்பங்கி ராமையா அதிமுக 36.26[7]
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011 ஒசூர் காங்கிரசு வெற்றி 37.79 எஸ். ஜான்திமோதி தேமுதிக 29.56[8]
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016 ஒசூர் காங்கிரசு தோல்வி 30.92 பாலகிருஷ்ணா ரெட்டி அதிமுக 41.59[9]
இந்தியப் பொதுத் தேர்தல், 2024 கிரூஷ்ணகிரி காங்கிரசு வெற்றி 42.3 வி. ஜெயபிரகாஷ் அதிமுக 25.8

மேற்கோள்கள்[தொகு]

  1. 2001 Tamil Nadu Election Results, Election Commission of India
  2. 2006 Tamil Nadu Election Results, Election Commission of India
  3. "Hosur (Tamil Nadu) Election Results". Infobase. பார்க்கப்பட்ட நாள் 2017-05-02.
  4. "Thiru. K. Gopinath (INC)". Legislative Assembly of Tamil Nadu. Archived from the original on 2016-03-15. பார்க்கப்பட்ட நாள் 2017-05-02.
  5. Election Commission of India. "1996 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. பார்க்கப்பட்ட நாள் 19 April 2009.
  6. Election Commission of India (12 May 2001). "Statistical Report on General Election 2001" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010.
  7. Election Commission of India. "2006 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. பார்க்கப்பட்ட நாள் 12 May 2006.
  8. Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. பார்க்கப்பட்ட நாள் 9 May 2021.
  9. "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 April 2022. பார்க்கப்பட்ட நாள் 30 Apr 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொ._கோபிநாத்&oldid=3996696" இலிருந்து மீள்விக்கப்பட்டது