உள்ளடக்கத்துக்குச் செல்

பி. வெங்கடசுவாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பி. வெங்கடசுவாமி (12, மே, 1935 - 21, அக்டோபர் 2023, B. Venkataswamy) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டப்பேரவையின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் 1935ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் நாள் ஒன்னலவாடியில் பிறந்தார். இவர் ஓசூர் உயர்நிலைப் பள்ளியிலும், பெங்களூரில் உள்ள புனித ஜோசப் கல்லூரியிலும் கல்வி பயின்றார். தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினரான இவர் சுதந்திராக் கட்சி சார்பாக ஓசூர் சட்டமன்றத் தொகுதியில் 1967ஆம் ஆண்டு மற்றும் 1971ஆம் ஆண்டு தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

பின்வரும் ஆண்டுகளில் சட்டப் பேரவைக்கு நடந்த தேர்தல்களில் தோல்வியடைந்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. Retrieved 2017-06-22.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2018-11-13. Retrieved 2017-06-22.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. Retrieved 2017-06-22.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. Retrieved 2017-06-22.
  5. "List Of Political Parties" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. Retrieved 2017-05-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._வெங்கடசுவாமி&oldid=3829831" இலிருந்து மீள்விக்கப்பட்டது