கொலம்பிய கால்பந்துக் கூட்டமைப்பு
Appearance
தென்னமெரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு | |
---|---|
தோற்றம் | அக்டோபர் 12, 1924 |
ஃபிஃபா இணைவு | 1936 |
தென்னமெரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு இணைவு | 1936 |
தலைவர் | லூயிசு பெடோயா (Luis Bedoya) |
இணையதளம் | http://fcf.com.co/ |
கொலம்பிய கால்பந்துக் கூட்டமைப்பு (Colombian Football Federation ; Spanish மொழியில்: Federación Colombiana de Fútbol) என்பது தென்னமெரிக்காவின் கொலம்பியா நாட்டின் கால்பந்து மேலாண்மை அமைப்பாகும். 1924-ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்ட இவ்வமைப்பு, 1936-ஆம் ஆண்டில் பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பில் உறுப்பினராக இணைந்தது. பன்னாட்டுப் போட்டிகளுக்காக கொலம்பியா தேசிய கால்பந்து அணியைத் தேர்ந்தெடுத்து நிர்வகிப்பதும், கொலம்பியாவின் தேசிய கால்பந்துக் கூட்டிணைவை ஏற்பாடு செய்து நடத்துவதும் இதன் பொறுப்பாகும். தென்னமெரிக்க கால்பந்துக் கூட்டமைப்பில் இவ்வமைப்பு உறுப்பினராகும்.
வெளியிணைப்புகள்
[தொகு]- FCF Website
- Colombia பரணிடப்பட்டது 2018-11-23 at the வந்தவழி இயந்திரம் at FIFA site