கொயிலாண்டி வட்டம்
கேரளத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் கொயிலாண்டி வட்டம் அமைந்துள்ளது. கொயிலாண்டி நகராட்சியையும், அதைச் சுற்றியுள்ள 35 வருவாய் ஊராட்சிகளையும் சேர்த்து கொயிலாண்டி வட்டம் உருவாக்கப்பட்டது. இந்த வட்டம் 756.9 சதுரகிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த வட்டத்தின் தலைமையகம் கொயிலாண்டியில் உள்ளது.[1] இந்த வட்டத்தில் கொயிலாண்டி மட்டும் நகராட்சி என்னும் நிலையைப் பெற்றுள்ளது.
ஆட்சிப் பிரிவுகள்
[தொகு]தொகுதிகள்
[தொகு]இந்த வட்டத்தில் உள்ள சில பகுதிகள் கோழிக்கோடு மக்களவைத் தொகுதியிலும், மற்றவை [[வடகரை மக்களவைத் தொகுதி[]]யிலும் உள்ளன. [2] கேரள சட்டமன்றத்திற்கான பேராம்பிரா, கொயிலாண்டி, பாலுசேரி ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இவ்வட்டத்தில் உள்ள ஊர்களைக் கொண்டவை. [3]
மண்டலங்கள்
[தொகு]இந்த வட்டத்தை பாலுசேரி மண்டலம், பந்தலாயனி மண்டலம், மேலடி மண்டலம், பேராம்பிரை மண்டலம் எனப் பிரித்துள்ளனர். [4]
ஊராட்சிகள்
[தொகு]கீழரியூர், மேப்பய்யூர், பய்யோளி, திக்கோடி, துறவூர், சக்கிட்டபாறை, சங்கரோத்து, செறுவண்ணூர், காயண்ணை, கூத்தாளி, நொச்சாடு, பேராம்பிரை, அத்தோளி, பாலுசேரி, கூராச்சுண்டு, கோட்டூர், நடுவண்ணூர், பனங்காடு, உள்ளியேரி, உண்ணிகுளம், அரிக்குளம், சேமஞ்சேரி, செங்கோட்டுகாவு, மூடாடி ஆகிய 24 ஊராட்சிகள் உள்ளன. [5]
சான்றுகள்
[தொகு]- ↑ http://www.prd.kerala.gov.in/dkozhikode.htm[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ http://keralaassembly.org/lok/sabha/segmants.html
- ↑ http://www.ceo.kerala.gov.in/kozhikode.html
- ↑ http://www.old.kerala.gov.in/deptplanning/ann1.pdf[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ http://www.old.kerala.gov.in/deptplanning/ann1.pdf[தொடர்பிழந்த இணைப்பு]