கேன் யமன்
கேன் யமன் | |
---|---|
பிறப்பு | 8 நவம்பர் 1989 இசுதான்புல், துருக்கி |
குடியுரிமை | துருக்கர் |
பணி | நடிகர், வடிவழகர், வழக்கறிஞர் |
செயற்பாட்டுக் காலம் | 2014–இன்று வரை |
வலைத்தளம் | |
http://www.canyaman.it |
கேன் யமன் (Can Yaman) (பிறப்பு: 8 நவம்பர் 1989) என்பவர் துருக்கிய நாட்டு நடிகர், வடிவழகர் மற்றும் வழக்கறிஞர் ஆவார். இவர் 2014 ஆம் ஆண்டு 'கோனல் இஸ்ரி' என்ற தொடரின் மூலம் நடிப்பு துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து இனதினா அஸ்க் (2015), ஹாங்கிமிஸ் செவ்மெடிக் (2016),[1][2] டோலுனே (2017), எர்கென்சி குஸ் (2018-2019)[3] போன்ற பல தொடர்களில் நடித்ததன் மூலம் துருக்கியில் மிகவும் அறியப்படும் நடிகர் ஆனார். இவர் 2018 ஆம் ஆண்டில் எர்கென்சி குஸ் என்ற தொடரில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான கோல்டன் பட்டர்பிளை விருது பெற்றார்.
ஆரம்பகால வாழ்க்கை
[தொகு]யமன் 8 நவம்பர் 1989 இல் துருக்கி நாட்டில் இசுதான்புல்லில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தைவழி தாத்தா கொசோவோ-அல்பேனியன் வம்சாவளியை சேர்ந்தவர்[4][5][6] மற்றும் இவரது தந்தைவழி பாட்டி வடக்கு மாசிடோனியாவில் இருந்து அல்பேனியா நாட்டிற்கு குடியேறியவர் ஆவார். இவரது பெற்றோர்கள் இவரின் 5 வயதில் விவாகரத்து செய்து பிரிந்தனர்.[7] அதன் பிறகு பாட்டி யின் அரவணைப்பில் வளர்ந்தார். அதை தொடர்ந்து 2012 ஆம் ஆண்டில் யெடிடெப் பல்கலைக்கழகத்தின் சட்டத் துறையில் பட்டம் பெற்றார். இவர் கால்பந்து பயிற்சியாளர் ஃபுவட் யமானின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.[8]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Rol arkadaşına bardak fırlatan Can Yaman'a ceza". T24. 29 March 2019. Retrieved 4 January 2020.
- ↑ "Selen Soyder'e bardak fırlatan Can Yaman'a ceza". www.ntv.com.tr. 29 March 2019. Retrieved 4 January 2020.
- ↑ "Erkenci Kuş Full HD izle | Star TV". startv.com.tr (in துருக்கிஷ்). Retrieved 18 December 2019.
- ↑ "Full english interview of Can and Demet". tekste (in Turkish and English). Retrieved 5 April 2020.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "Can Yaman kimdir?". www.biyografi.info.
- ↑ "Can Yaman NTV Bayram Özel Reporpajı" (in tr). http://www.milliyet.com.tr/-genis-omuzlarim-yuzunden-rolu/pazar/haberdetay/02.11.2014/1963557/default.htm.
- ↑ "Can Yaman". Hello Turkeye. 22 August 2018.
- ↑ "Can Yaman tuttuğunu koparır". http://hayat.sozcu.com.tr/can-yaman-tuttugunu-koparir-68577/.