குற்றாலம் சுற்று சூழல் பூங்கா
சுற்றுச்சூழல் பூங்கா (ஆங்கிலம்:Eco Park) என்பது திருநெல்வேலி மாவட்டம், குற்றாலத்தில் தமிழக அரசினால் அமைக்கப்பட்ட பூங்காவாகும்.[1]
வரலாறு
[தொகு]இது தமிழ் நாட்டின் தென் பகுதியான திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது. சுற்றுச்சூழல் பூங்கா இதன் அருகே அமைந்த புகழ்பெற்ற காசி விசுவநாதர் கோவில், மெயின் அருவி, பழைய குற்றால அருவி, புலி அருவி, ஐந்தருவி, என பல்வேறு அருவிகளை உள்ளடக்கியது. சுற்றுலா பயணிகளைக் கவரும் விதமாக தமிழக அரசு 5.73 கோடி ரூபாய்ச் செலவில் 37.23 ஏக்கர் நிலப்பரப்பில் அமைத்துள்ளது.[2] மேலும் இப்பூங்காவை அருவிப் பூங்கா என்றும் அழைக்கப்படுவது உண்டு இப்பூங்காவில் எங்கு நோக்கினாலும் பூக்கள், மரங்கள் என்று கண்களுக்கு குளிர்ச்சியான இயற்கை நம் மனத்தைக் கவரும் வகையில் அமைந்துள்ளது. இங்கு பெரணி பூங்கா, இயற்கை ஒவிய பதாகைகள், பசுமை குடில், நறுமணப் பூங்கா, பார்வையாளர்கள் மடம், சாகச விளையாட்டுத் திடல், தாள்த்தள தோட்டம், மரப்பாலம் என பல உள்ளன. மேலும் இப்பூங்கா தமிழகத்தின் மிகப்பெரிய சுற்றுச்சுழல் பூங்காவாகக் கருதப்படுகிறது.[3]
சான்றுகள்
[தொகு]- ↑ "சுற்றுச்சூழல் பூங்காவின் அமைவிடம் படிமம்". kutralamlive.com. Archived from the original on 2014-05-31. பார்க்கப்பட்ட நாள் மே 24, 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help); zero width space character in|title=
at position 11 (help) - ↑ "சுற்றுச்சூழல் பூங்காவின் செலவு மற்றும் பரப்பளவுகள்". தி இந்து. 27 ஆகஸ்ட் 2012. பார்க்கப்பட்ட நாள் மே 24, 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help); zero width space character in|title=
at position 11 (help)[தொடர்பிழந்த இணைப்பு] - ↑ "தமிழகத்தின் மிகப்பெரிய சுற்றுச்சுழல் பூங்கா". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 24 மே 2014.[தொடர்பிழந்த இணைப்பு]