உள்ளடக்கத்துக்குச் செல்

குமார் சகானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குமார் சகானி
பிறப்பு(1940-12-07)7 திசம்பர் 1940 [1]
லர்கானா, சிந்து மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு24 பெப்ரவரி 2024(2024-02-24) (அகவை 83)
கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா
தேசியம்இந்தியர்
பணிதிரைப்பட இயக்குநர், திரைப்பட கல்வியாளர், காட்சிக்கலைஞர்
அறியப்படுவதுமாயா தர்பன், தரங், காயல் கதா, கஸ்பா

குமார் சகானி (Kumar Shahani, 7 திசம்பர் 1940-24 பிப்ரவரி 2024) என்பவர் ஒரு இந்திய திரைப்பட இயக்குநரும், திரைக்கதை எழுத்தாளரும் ஆவார். இவரது மாற்றுத் திரைப்படங்களான மாயா தர்பன் (1972), தரங் (1984), கயல் கத்த (1989) கஸ்பா (1990) ஆகியவற்றுக்காக பிரபலமானவராவார்.[2] இவரது திரைப்படங்கள் 1972, 1990, 1991 ஆம் ஆண்டுகளில் சிறந்த திரைப்படத்திற்கான பிலிம்பேர் விமர்சகர்கள் விருதைப் பெற்றன.[3] இவரது அர்ப்பணிப்பு, திரைப்படத் திறனுக்கு மாயா தர்பன் திரைப்படம் ஒரு எடுத்துகாட்டாகக் கருதப்படுகிறது. விமர்சகர்களும் திரைப்பட ஆர்வலர்களும் பெரும்பாலும் இவரை பியர் பாவ்லோ பசோலினி, ஆண்ட்ரி தர்கோவ்ஸ்கி ஜாக் ரிவெட் போன்ற திரைப்படப் படைப்பாளிகளுடன் ஒப்பிடுகின்றனர்.[4] இவர் பூனே திரைப்படக் கல்லூரியின் ஆசிரியராகவும், ஒரு திரைப்பட கோட்பாட்டாளராகவும் அறியப்படுகிறார். இவரது 51 கட்டுரைகள் அடங்கிய புத்தகமான குமார் ஷஹானி: ஆதி ஷாக் ஆஃப் டிசையர் அண்ட் அதர் எஸ்ஸேஸ், ராஜாத்யக்சயாவாவை பதிப்பாசிரியராகக் கொண்டு 2015 இல் துலிகா புக்சால் வெளியிடப்பட்டது.

துவக்ககால வாழ்க்கை

[தொகு]

சகானி 1940 திசம்பர் 7 அன்று சிந்து மாகாணத்தின் லர்கானாவில் (தற்போதைய பாக்கித்தானில்) பிறந்தார். 1947 இந்தியாவின் பிரிவினைக்குப் பிறகு, சகானியின் குடும்பம் பம்பாய் நகரத்திற்கு (தற்போதைய மும்பை) இடம் பெயர்ந்தது.[1] இவர் பம்பாய் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் மற்றும் வரலாற்றில் இளங்கலை பட்டம் பெற்றார். மேலும் பூனா திரைப்படக் கல்லூரியில் மேம்பட்ட இயக்கம் மற்றும் திரைக்கதை எழுதுதல் ஆகியவற்றைப் பயின்றார். அங்கு இவர் ரித்விக் கட்டக்கின் மாணவராக இருந்தார். மேலும் தாமோதர் தர்மானந்தா கோசாம்பியிடமும் பயின்றார். பிரெஞ்சு அரசாங்க உதவித்தொகையில்,[1][5] இவர் இன்ஸ்டிட்யூட் டெஸ் ஹாட்ஸ் எடுடெஸ் சினிமாட்டோகிராபிக்சில் (ஐடிஹெச்இசி) பயில்வதற்காக பிரான்சுக்குச் சென்றார். மேலும் யுனே ஃபெம் டூஸ் என்ற திரைப்படத்திற்கு இயக்குநர் ராபர்ட் பிரெசனிடம் உதவியாளராக பணியாற்றினார்.[6]

இந்தியா திரும்பிய பிறகு, சகானி 1972 இல் தனது முதல் திரைப்படமான மாயா தர்பன் படத்தை இயக்கினார். அதன் பிறகு பன்னிரண்டு ஆண்டுகளுக்கள் கழித்து 1984 இல் தான் அடுத்த முழுநீளத் திரைப்படமாக தரங் படத்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்றார்.[4][7] இவரது மற்ற முதன்மையான படங்களில் 1989 திரைப்படமான கயல் கத்த, 1990 படமான கஸ்பா ஆகியவை ஆடங்கும். மேலும் ரெயில்ஸ் ஃபார் தி வேர்ல்ட், ஃபயர் இன் தி பெல்லி, எவர் யுனிவர்ஸ், வர் வார் வாரி ஆகிய குறும்படங்களையும் பவந்தரண, சார் அத்யாய ஆகிய ஆவணப்படங்களையும் இயக்கினார். இவரது படங்கள் 1972, 1990, 1991 ஆகிய ஆண்டுகளில் சிறந்த திரைப்படத்திற்கான பிலிம்பேர் விமர்சகர் விருதைப் பெற்றன. மாயா தர்பன் 1972 இல் இந்தியில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதைப் பெற்றது. இவரது படங்கள் ரோட்டடாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டன. கயல் கத்த திரைப்படம் 1990 ரோட்டர்டாமில் திரைப்பட விழாவில் ஃபிப்ரெஸ்சி பரிசைப் பெற்றது. இவர் 1998 இல் பிரின்ஸ் கிளாஸ் விருதைப் பெற்றார்.[6][8]

1976 முதல் 1978 வரை, மகாபாரதத்தின் இதிகாச பாரம்பரியம், பௌத்த படிமவியல், இந்தியப் பாரம்பரிய இசை, பக்தி இயக்கம் ஆகியவற்றை ஆராய்வதற்காக ஹோமி பாபா பட்டதாரிகள் ஆதரவூதியத்திட்டத்தை நடத்தினார்.[9][10] சகானி இந்தியாவின் காப்பக மற்றும் மறுசீரமைப்புத் திட்டமான ஃபிலிம் ஹெரிடேஜ் அறக்கட்டளையிலும் செயல்பட்டார்.[6] புனே திரைப்படக் கல்லூரியில் கற்பித்தார். இவரது 51 கட்டுரைகள் அடங்கிய புத்தகமான, குமார் ஷஹானி: ஆதி ஷாக் ஆஃப் டிசையர் அண்ட் அதர் எஸ்ஸேஸ், 2015 இல் துலிகா புக்சால் வெளியிடப்பட்டது. அந்தக் கட்டுரைகள் 40 ஆண்டு காலக்கட்டத்தில் எழுதப்பட்டவையாகும்.[11]

மரணம்

[தொகு]

சகானி தனது 83வது வயதில் 24 பிப்ரவரி 2024 அன்று, மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில், இறந்தார்.[1][3][12] இவருக்கு மனைவியும் உத்தரா, ரேவதி என்ற மகள்களும் உள்ளனர்.[13]

திரைப்படவியல்

[தொகு]

சான்றுகள்:[9][14]

ஆண்டு படம் குறிப்புகள்
1966 தி கிளாஸ் பேன் b/w, 35mm, 10 min. Graduation film. FTII.
1967 மன்மட் பாசஞ்சர்ஸ் b/w, 35mm, 15 min. Short film. FTII.
1967 எ சர்டண்ட் சைல்ட்வுட் (ஆங்கிலம் மற்றும் குசராத்தி). b/w, 35mm, 22 min. Documentary for Directorate of Films, Gujarat, India.
1970 ரெயில்ஸ் பார் தி வேல்ட் 35mm, 20 min. Technicolor, Documentary made for Steel Authority of India Ltd. (SAIL)
1971 ஆப்ஜக்ட் 16mm, 10 min. Kodachrome, Short film made in coll;aboration wioth the psychoanalyst Udayan Patel.
1972 மாயா தர்பன் (இந்தி) 35mm, 100 min. Feature. NFDC. Winner Filmfare Award – Best Film (Critics)

National Film Award for Best Feature Film in Hindi[8]
1973 பயர் இந்த பெல் (ஆங்கிலம்). b/w, 35mm, Documentary made for Films Division, India.
1976 அவர் யூனிவர்ஸ் (ஆங்கிலம்). b/w, 16mm, Educational film
1983 எ மெமர் ஆப் தி பியூச்சர் (ஆங்கிலம்). 35mm (incomplete). Film made on the work of British psychoanalyst W.R. Bion
1983 ரூல்ஸ் ஆப் த கேம் 35mm, Documentary (censored but not released), made for Films Division.
1984 தரங் (இந்தி). 35mm, Cinemascope, Feature produced by NFDC. National Film Award – Special Jury Award (Certificate)[15][16]
1988 வர் வர் வரி (இந்தி). b/w, 35mm, 29 min, produced by the Film & Television Institute of India
1988 எ ஷிப் அக்ரவுண்ட் (ஆங்கிலம்). 16mm, Short film.
1989 காயல் கதா (இந்தி) 35 mm Winner Filmfare Award – Best Film (Critics)[3]

Winner FIPRESCI Prize – Rotterdam International Film Festival[3][6]
1991 கஸ்பா (இந்தி) 35 mm, produced by NFDC. Winner Filmfare Award – Best Film (Critics)[3]
1991 பவந்தரண (ஒரியா) film about Guru Kelucharan Mahapatra

National Film Award for Best Biographical Film[17][18]
1997 சார் ஆதியா (இந்தி மற்றும் வங்க மொழி) film based on Rabindranath Tagore's novel produced by NFDC
2000 ஆம்போ புலூட்/பிரஹா பாரியோ கர் அங்கன் கோனே (இந்தி மற்றும் தமிழ்) film produced by the Ministry of External Affairs
2004 ஆஸ்த குரோ பிளைஸ் Film based on the artist Akbar Padamsee
2007 சாபகானா (வங்க மொழி) short film made at Satyajit Ray Film & Television Institute
2019 பிரியே சாருஷிலே (ஒடியா மற்றும் இத்தாலியன்), feature documentary, completed but unreleased

விருதுகள்

[தொகு]

சான்றுகள்:[19]

  • தேசிய விருது (1972, 1984, 1991)
  • பிலிம்பேர் விமர்சகர்கள் விருதுகள்-சிறந்த படம் (1972, 1990, 1991)
  • ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழா – FIPRESCI விருது (1990)
  • பிரின்ஸ் கிளாஸ் விருது (1998)

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 . 
  2. Ashish Rajadhyaksha (January 1986). "Dossier on Kumar Shahani". Framework N 30.31 (academia.edu). https://www.academia.edu/2292735. பார்த்த நாள்: 3 May 2014. 
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 "Acclaimed filmmaker Kumar Shahani passes away at 83 from age-related ailments in Kolkata" (in en). டெக்கன் ஹெரால்டு. 25 February 2024. https://www.deccanherald.com/india/west-bengal/acclaimed-filmmaker-kumar-shahani-passes-away-at-83-from-age-related-ailments-in-kolkata-2909678. 
  4. 4.0 4.1 Winds From the East. "Interview With Kumar Shahani", Retrieved on 17 June 2014.
  5. Homi Bhabha Fellowships Council. "Mr. Kumar Shahani" பரணிடப்பட்டது 3 மார்ச்சு 2010 at the வந்தவழி இயந்திரம், Retrieved on 2 March 2009.
  6. 6.0 6.1 6.2 6.3 Ramachandran, Naman (25 February 2024). "Kumar Shahani, Pioneer of India's Parallel Cinema Movement, Dies at 83". Variety.
  7. Upperstall.com Profile. "Kumar Shahani Upperstall Profile", Retrieved on 2 March 2009.
  8. 8.0 8.1 "20th National Film Awards". இந்திய சர்வதேச திரைப்பட விழா. Archived from the original on 5 November 2013. பார்க்கப்பட்ட நாள் 26 September 2011.
  9. 9.0 9.1 Kumar Shahani, The Hindu
  10. House of World Culture. "Kumar Shahani", "Culturebase The International Artist Database" Retrieved on 2 March 2009.
  11. Ashish Rajadhyaksha. Kumar Shahani: The Shock of Desire and Other Essays. academia.edu.
  12. . 
  13. . 
  14. G.K., "Musings of a Marxist", The Hindu. Retrieved on 2 March 2009.
  15. "31st National Film Awards". இந்திய சர்வதேச திரைப்பட விழா. Archived from the original on 12 November 2013. பார்க்கப்பட்ட நாள் 9 December 2011.
  16. "31st National Film Awards (PDF)" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 9 December 2011.
  17. "39th National Film Awards". இந்திய சர்வதேச திரைப்பட விழா. Archived from the original on 15 March 2014. பார்க்கப்பட்ட நாள் 27 February 2012.
  18. "39th National Film Awards (PDF)" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 27 February 2012.
  19. "The 5th Asia Pacific Triennial of Contemporary Art" (பரணிடப்பட்டது 21 ஆகத்து 2008 at the வந்தவழி இயந்திரம்), Retrieved on 2 March 2009.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குமார்_சகானி&oldid=4050845" இலிருந்து மீள்விக்கப்பட்டது