அக்பர் பதம்சி
அக்பர் பதம்சி (Akbar Padamsee) (பிறப்பு: 1928 ஏப்ரல் 12 - இறப்பு: 2020 சனவரி 6), இவர் ஓர் இந்திய கலைஞர் மற்றும் ஓவியருமாவார். நவீன இந்திய ஓவியத்தின் முன்னோடிகளான, எஸ்.எச். ராசா, எஃப்.என். சௌசா மற்றும் எம்.எஃப் ஹூசேன் போன்றவர்களில் இவரும் ஒருவராக கருதப்படுகிறார்.[1] பல ஆண்டுகளாக அவர் எண்ணெய் ஓவியம், பிளாஸ்டிக் குழம்பு, நீர் வண்ணம், சிற்பம், அச்சு தயாரித்தல், கணினி வரைகலை மற்றும் புகைப்படம் எடுத்தல் வரை பல்வேறு ஊடகங்களுடன் பணியாற்றினார். மேலும், திரைப்படத் தயாரிப்பாளர், சிற்பி, புகைப்படக் கலைஞர், செதுக்குபவர், லித்தோகிராஃபர் என பல துறைகளிலும் பணியாற்றினார்.[2] இன்று அவரது ஓவியங்கள் நவீன இந்திய கலைஞர்களால் மிகவும் மதிக்கப்படுகின்றன. 2011, மார்ச்சு 25ம் தேதியில், அவரது ஓவியமான சயன நிர்வாணம் நியூயார்க்கு நகரத்திலுள்ள சொதேபியில், US $ 1,426,500 க்கு விற்றது.[3]
இவருக்கு 1962 ஆம் ஆண்டு,இந்தியாவின் தேசிய கலை அகாதமியான, லலித் கலா அகாதமி மூலம் லலித் கலா அகாதமி உறுப்பினர் விருது (லலித் கலா ரத்னா), 1997 இல், மத்தியப் பிரதேச அரசு, இவரது பிளாஸ்டிக் கலைகள் பங்களிப்பிற்காக, காளிதாஸ் சம்மன் விருது வழங்கப்பட்டது, மேலும், 2010 இல் இந்தியாவின் மூன்றாவது உயரிய சிவிலியன் மரியாதையான, பத்ம பூசண் விருது இவருக்கு வழங்கப்பட்டது.[4]
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி
[தொகு]இளமைப்பருவம்
[தொகு]பதம்சி குஜராத்தின் கட்ச் பகுதியைச் சேர்ந்த ஒரு பாரம்பரிய கோஜா முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தார்.[5] அவர்களின் மூதாதையர்கள் போர்டுகள் மற்றும் நீதிமன்ற இசைக்கலைஞர்களின் சரண் சாதியைச் சேர்ந்தவர்கள். இந்த குடும்பம் சில தலைமுறைகளாக அருகிலுள்ள கத்தியாவார் பகுதியில் குடியேறியது; பதம்சியின் தாத்தா, வாஹ்நகரின்" தலைவராக இருந்தார். இது, பாவ்நகர் மாவட்டத்தில், அமைந்துள்ளது. இவரது தாத்தா, ஒரு பஞ்சத்தின் போது, கிராமத்தில் உள்ள அனைவருக்கும் அவரது முழு களஞ்சியத்திலுள்ள தானியங்களை விநியோகித்தார். அதனால், மரியாதைக்குரிய பெயராக "பதம்சி" என்ற பட்டம் பெற்றார். அவரது மூதாதையர்கள் நீதிமன்ற கவிஞர்கள் என்பதால் அவரது அசல் குடும்ப பெயர் "சரண்யாக்கள்" ஆகும்.[2]
குடும்பம்
[தொகு]பதம்சியின் தந்தை ஹசன் பதம்சி ஒரு வசதியான தொழிலதிபர் ஆவார். அவர் 10 கட்டிடங்களை வைத்திருந்தார். மேலும் கண்ணாடி பொருட்கள் மற்றும் தளபாடங்கள் வியாபாரத்தையும் நடத்தி வந்தார். இவரது தாயார் ஜெனபாய் பதம்சி வீட்டு நிர்வாகியாக இருந்தார். அக்பர் பதம்சி அவர்களின் எட்டு குழந்தைகளில் ஒருவராவார்; அவரது சகோதரர்களில் ஒருவர் நடிகர் அலிக் பதம்சி. பணக்காரர் என்றாலும், குடும்பத்திலுள்ளவர்கள் நன்கு படித்தவர்கள் அல்ல, அவருடைய பெற்றோர் இருவருக்கும் அதிக கல்வி கிடைக்கவில்லை. அலிக் மற்றும் அவரது சகோதரர்கள், முதலில் பள்ளிக்குச் சென்று அங்கு ஆங்கிலம் கற்றவர்கள்; பின்னர் பெற்றோர்கள் தங்கள் மகன்களிடமிருந்து மொழியின் ஒரு சிறிய பகுதியை கற்றுக்கொண்டனர்.[6]
ஓவியப் பயிற்சி
[தொகு]இவர், தனது வாழ்க்கையின் ஆரம்பத்தில், தென் மும்பையில் உள்ள சக்லா தெருவில் உள்ள கடையில் தனது தந்தையின் கணக்கு புத்தகங்களில் தி இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி ஆஃப் இந்தியா பத்திரிகையின் படங்களை நகலெடுக்கத் தொடங்கினார். அவர் கோட்டையில் உள்ள செயின்ட் சேவியர் உயர்நிலைப் பள்ளியில் படித்தார், இங்குதான் அவரது முதல் வழிகாட்டியான அவரது ஆசிரியர் ஷிர்சாத், ஒரு நீர்வர்ணக் கலைஞரை சந்தித்தார். அவர் முதலில் இந்த ஊடகத்தைக் கற்றுக்கொண்டார். அதன்பின்னர் சார்னி சாலையில் உள்ள சர் ஜே.ஜே. கலைப் பள்ளியில் நிர்வாணங்களைப் பற்றிய வகுப்புகள் நடந்தன. இவரின் ஓவியம் குறித்த அனுபவம் காரணமாக, அதன் மூன்றாம் ஆண்டில் நேரடியாக பாடநெறியில் சேர அனுமதிக்கப்பட்டார். முற்போக்குக் கலைஞர்கள் குழு (பிஏஜி) 1947 இல் பிரான்சிஸ் நியூட்டன் சௌசா, எஸ்.எச். ராசா மற்றும் எம்.எஃப் . ஹுசைன் ஆகியோரால் உருவாக்கப்பட்டபோது, அவர் பள்ளியில் நுண்கலை பயின்றார். இந்தக் குழு இந்திய கலையில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்த இருந்தது. அவர் டிப்ளோமா பெறும் நேரத்தில் அவர் ஏற்கனவே குழுவுடன் தொடர்புடையவராக இருந்தார்.[2]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]அக்பர் 1954 இல் பாரிஸில் சோலங்கே கௌனெல்லை மணந்தார். தம்பதியருக்கு ரைசா_பதம்சி என்ற ஒரு மகள் இருந்தாள். அக்பர் 1968 இல் இந்தியாவுக்குச் சென்று தனது மனைவி பானுமதி பதம்சியுடன் மும்பையில் வசித்து வந்தார் [7] அவரது வாழ்க்கையின் கடைசி ஆண்டுகளில், பதம்சியும் அவரது மனைவி பானுவும் கோயம்புத்தூரின் ஈஷா யோகா மையத்திற்கு நிரந்தரமாக சென்றதாகக் கூறப்படுகிறது. இவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு சில முறை இம் மையத்திற்குச் சென்றுள்ளனர்.
குறிப்புகள்
[தொகு]- ↑ "The last great moderns: Akbar Padamsee". Mint. 13 January 2012. http://www.livemint.com/2012/01/13214056/The-last-great-moderns--Akbar.html?h=B.
- ↑ 2.0 2.1 2.2 "Biography". Official website.
- ↑ "Art under arc light". டெக்கன் ஹெரால்டு. http://www.deccanherald.com/content/214090/art-arc-light.html.
- ↑ "Padma Awards Directory (2010)" (PDF). Ministry of Home Affairs. Archived from the original (PDF) on 26 November 2011.
- ↑ "Akbar Padamsee Biography". www.akbarpadamsee.net. பார்க்கப்பட்ட நாள் 1 July 2016.
- ↑ "The Alyque Padamsee brand of life". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 23 January 2015.
I was born into riches: Ours was a Kutchi business family. My father, Jafferseth, owned 10 buildings and also ran a glassware and furniture business. My mother, Kulsumbai Padamsee, was a housewife. Anything I wanted was there for the asking. We were eight children in all but I, being born after three daughters, was pampered most. Among Gujarati families, it was only the Padamsees and the royal house of Rajpipla. At school, I learnt to speak in English. Later, our parents learnt the language from us. All that I am today is because of what I learnt at school. Miss Murphy, who ran the school, was an inspirational figure for me.
- ↑ "Akbar Padamsee: The Shastra of Art". Archived from the original on 2020-08-08. பார்க்கப்பட்ட நாள் 2020-01-11. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-08-08. பார்க்கப்பட்ட நாள் 2021-10-31.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link)
வெளி இணைப்புகள்
[தொகு]- " Akbar Padamsee " Charcoal Painting
- "Akbar Padamsee Profile, Interview and Artworks"
- Akbar Padamsee, website
- Akbar Padamsee, Profile at Saffronart
- Painting at the Lalit Kala Akademi website
- Some Padamsee Paintings
- Artist profile, some sketches
- Padamsee on Tevasia
- Pandole Art Gallery பரணிடப்பட்டது 2019-10-20 at the வந்தவழி இயந்திரம்