கிருஷ்ணவேணி (நடிகை)
சித்தஜல்லு கிருஷ்ணவேணி | |
---|---|
பிறப்பு | 24 டிசம்பர் 1924 பங்கிடி, சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போதைய ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
இறப்பு | 16 பெப்ரவரி 2025[1] ஐதராபாத்து, தெலங்காணா, இந்தியா[2] | (அகவை 100)
பணி | |
வாழ்க்கைத் துணை | மிர்சாபுரம் ஜமீந்தார் மேகா வெங்கட்ராமையா அப்பா ராவ் பகதூர் (தி. 1939; இற. 2005) |
பிள்ளைகள் | 1 |
சித்தஜல்லு கிருஷ்ணவேணி (பிறப்பு 24 டிசம்பர் 1924-16 பெப்ரவரி 2025), பெரும்பாலும் சி. கிருஷ்ணவேணி அல்லது கிருஷ்ணவேணி என்று அழைக்கப்படும் இவர், இந்தியாவின் ஆந்திராவைச் சேர்ந்த தெலுங்கு மொழித் திரைப்பட நடிகையும் தெலுங்குத் திரைப்படத் தயாரிப்பாளரும்,[3] பின்னணிப் பாடகியும், வணிக நிர்வாகியுமாவார். இவருக்கு ஆந்திரப் பிரதேச அரசு இரகுபதி வெங்கையா விருதை வழங்கியது.[4][5]
வாழ்க்கை மற்றும் தொழில்
[தொகு]கிருஷ்ணவேணி, இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தின் பங்கிடி பகுதியில் பிறந்தவர் . திரையுலகில் நுழைவதற்கு முன்பு நாடகக் கலைஞராக இருந்த இவர், அனுசூயா (1936) என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக முதன்முதலில் அறிமுகமானார். இவரது தந்தை கிருஷ்ணராவ் ஒரு மருத்துவர் என்பதாலும் தெலுங்குத் திரைப்படங்களில் நடிக்க இவருக்கு பல வாய்ப்புகள் வந்ததாலும், 1939 ஆம் ஆண்டில் சென்னைக்கு குடிபெயர்ந்து, தெலுங்குப் படங்களைத் தவிர தமிழ் போன்ற பிற மொழி திரைப்படங்களிலும் நடித்து வந்துள்ளார்.
1939 ஆம் ஆண்டில் மிர்சாபுரம் ஜமீன்தாரான மேகா வெங்கட்ராமையா அப்பா ராவ் பகதூரை மணந்துள்ளார். இவரது கணவருக்கு சொந்தமான சென்னையில் இயங்கி வந்த சோபனாசல பட நிறுவனம், அந்த காலகட்டத்தில் மிகவும் பிரபலமானதாகவும், பல்வேறு தெலுங்குத் திரைப்படங்களை தயாரித்து வெளியிட்டும் வந்துள்ளது. இவரும், இவரது கணவரோடு இணைந்து இந்நிறுவனத்தின் மூலம் திரைப்படத் தயாரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
கிருஷ்ணவேணி, தெலுங்குத் திரைப்படமான மன தேசம் (1949) என்பதன் தயாரிப்பாளராக நடிகராக என். டி. ராமராவ், இசையமைப்பாளராக கன்டசால வெங்கடேசுவர ராவ், பின்னணிப் பாடகியாக பி. லீலா போன்ற பல திரையுலகப் பிரமுகர்களை அப்படத்தில் அறிமுகப்படுத்தியதற்காக நினைவுகூரப்பட்டு வருகிறார். இத்திரைப்படம் பெங்காலி புதினமான விப்ரதாஸ் என்பதை அடிப்படையாகக் கொண்டதாகும்.[6]
இறப்பு
[தொகு]கிருஷ்ணவேணி பிப்ரவரி 16, 2025 அன்று இந்தியாவின் ஐதராபாத்தில் உள்ள திரைப்பட நகரில் உள்ள தனது இல்லத்தில் காலமானார்.[7][8]
தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படங்கள்
[தொகு]தயாரிப்பாளர்
[தொகு]கிருஷ்ணவேணியால் நிர்வகிக்கப்பட்ட தயாரிப்பு நிறுவனங்கள்
[தொகு]- தனது கணவரின் நிறுவனம் – ஜெயா படத்தயாரிப்பு , பின்னர் சோபனாசல படத்தயாரிப்பு என்று பெயர் மாற்றப்பட்டது.
- தனது சொந்த நிறுவனம் – இவரது மகளின் பெயரான மேகா ராஜ்யலட்சுமி அனுராதா என்பதை முதலெழுத்தாக கொண்ட எம்ஆர்ஏ தயாரிப்பு நிறுவனம்
கிருஷ்ணவேணி தயாரித்த திரைப்படங்கள்
[தொகு]- மன தேசம் (1949)
- லக்ஷ்மம்மா
- தாம்பத்யம் ,
- பக்த பிரஹலாதன்
குறிப்பு: பட்டியல்கள் விரிவானவை அல்ல.
பாடகர்
[தொகு]- கீலு குர்ரம் (1949)
- பாலா மித்ருலா கதா (1972)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ https://www.news18.com/movies/veteran-telugu-actress-chittajallu-krishnaveni-dies-of-age-related-ailments-at-100-9229207.html
- ↑ https://www.thehindubusinessline.com/news/veteran-telugu-actress-krishnaveni-dies-at-102/article69225759.ece
- ↑ "Hollywood Singers: C. Krishnaveni profile". Archived from the original on 7 March 2023. Retrieved 23 November 2021.
- ↑ "Telugu Veteran Actress Chittajallu Krishnaveni Who Launched NT Rama Rao And Ghantasala Dies At 100". Times Now (in ஆங்கிலம்). 2025-02-16. Retrieved 2025-02-16.
- ↑ "Welcome To Andhra Pradesh State Film, Television and Theatre Development Corporation". apsftvtdc.in. Retrieved 2025-02-16.
- ↑ Kampella, Ravichandran (2005). Gnapakalu.
- ↑ PTI (2025-02-16). "Veteran Telugu actor Krishnaveni dies at 102" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/entertainment/movies/veteran-telugu-actor-krishnaveni-dies-at-102/article69225824.ece.
- ↑ "Krishnaveni: అలనాటి నటి కృష్ణవేణి కన్నుమూత". EENADU (in தெலுங்கு). Retrieved 2025-02-16.