கிருட்டிணராச சாகர்
கிருட்டிணராச சாகர் | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 12°26′N 76°23′E / 12.44°N 76.38°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
மாவட்டம் | மண்டியா |
ஏற்றம் | 791 m (2,595 ft) |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 8,510 |
மொழிகள் | |
• அலுவல் | கன்னடம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
கிருட்டிணராச சாகர் (Krishnarajasagara) என்பது தென்னிந்திய மாநிலமான கர்நாடகவின் மண்டியா மாவட்டத்திலுள்ள ஒரு நகரம் ஆகும்.
நிலவியல்
[தொகு]கிருட்டிணராச சாகர் 12°26′N 76°23′E / 12.44°N 76.38°Eஇல் அமைந்துள்ளது. [1] இது சராசரியாக 791 மீட்டர்கள் (2595 அடி) உயரத்தில் உள்ளது. கிருட்டிணராச சாகர் நகரம் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட நீர்த்தேக்கமான கிருட்டிணராச சாகர் அணைக்கு அருகில் உள்ளது. இந்த அணைகண்ணம்பாடி அணை என்றும் அழைக்கப்பட்டது. மைசூர் மகாராசா நான்காம் கிருட்டிணராச உடையார் நினைவாக இது பின் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. புகழ்பெற்ற இந்தியப் பொறியாளர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா இதை வடிவமைத்து கட்டினார்.
கிருட்டிணராச சாகர் ஸ்ரீரங்கப்பட்டணத்திலிருந்து 18 கிமீ தொலைவிலும், மைசூரிலிருந்து 16 கிமீ தொலைவிலும், பெங்களூரிலிருந்து 143 கிமீ தொலைவிலும் உள்ளது. ஏமாவதி மற்றும் லட்சுமண தீர்த்தம் ஆகிய 2 ஆறுகளும் கிருட்டிணராச சாகர் நீர்த்தேக்கத்தில் காவிரியுடன் இணைகின்றன. இங்கு புகழ் பெற்ற பிருந்தாவன் பூங்கா உள்ளது.
மக்கள்தொகை
[தொகு]2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்புப்படி,[2] கிருட்டிணராச சாகரின் மக்கள் தொகை 8510. ஆண்கள் 51% மற்றும் பெண்கள் 49%. சராசரி கல்வியறிவு 67% ஆகும். இது தேசிய சராசரியான 59.5% ஐ விட அதிகமாக உள்ளது: ஆண்களின் கல்வியறிவு 73%, பெண்களின் கல்வியறிவு 60%. இங்கு, 11% மக்கள் 6 வயதுக்குட்பட்டவர்கள்.
சான்றுகள்
[தொகு]- ↑ Falling Rain Genomics, Inc - Krishnarajasagara
- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
Source ; Karnataka State Gazetteer 1983.