உள்ளடக்கத்துக்குச் செல்

கியோ சங் டே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கியோ சங் டே
பிறப்புஅக்டோபர் 20, 1977 (1977-10-20) (அகவை 47)
புசான், தென் கொரியா
படித்த கல்வி நிறுவனங்கள்புசான் தேசிய பல்கலைக்கழகம்
செயற்பாட்டுக்
காலம்
2011–இன்று வரை
முகவர்ஹனாஹ்ரியம் நிறுவனம்
அறியப்படுவதுஇசுக்விட் கேம் (2021)

கியோ சங் டே (ஆங்கில மொழி: Heo Sung tae) (பிறப்பு: அக்டோபர் 20, 1977) என்பவர் தென் கொரிய நாட்டு நடிகர் ஆவார். இவர் 2021 ஆம் ஆண்டு வெளியான இசுக்விட் கேம் என்ற தொடர்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர்.[1]

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

கியோ அக்டோபர் 20, 1977 ஆம் ஆண்டில் புசான் நகரில் பிறந்து வளர்ந்தார்.[2] இவர் புசான் தேசிய பல்கலைக்கழகத்தில் உருசிய மொழியில் தேர்ச்சி பெற்று பட்டம் பெற்றார். நடிப்புத்துறைக்கு வருவதற்கு முன்பு உருசிய சந்தையில் எல்ஜி நிறுவனத்தின் தொலைக்காட்சிகளை விற்கும் பணியில் இருந்தார். பின்னர் அவர் ஒரு கப்பல் கட்டும் நிறுவனத்தின் திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பு துறையில் பணிபுரிந்துள்ளார்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Jang, Ah-reum (June 2, 2020). "[단독] 허성태, 넷플릭스 '오징어 게임' 합류…대세 신스틸러 행보ing". News1 (in கொரியன்). Retrieved October 8, 2021.{{cite web}}: CS1 maint: url-status (link)
  2. "[인터뷰②] 영화 '밀정' 허성태 "따귀 장면 넣자고 3박4일 설득했죠"". sports.donga.com (in கொரியன்). 2016-09-26. Retrieved 2021-09-28.
  3. "Film & People > People Directory > HEO Sung-tae". Korean Film Biz Zone (in ஆங்கிலம்). Korean Film Council. Retrieved 2021-09-27.{{cite web}}: CS1 maint: url-status (link)

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கியோ_சங்_டே&oldid=3300823" இலிருந்து மீள்விக்கப்பட்டது