உள்ளடக்கத்துக்குச் செல்

காவடிகாரனூர்

ஆள்கூறுகள்: 11°36′N 77°54′E / 11.60°N 77.90°E / 11.60; 77.90
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காவடிக்காரனூர்
—  கிராமம்  —
காவடிக்காரனூர்
அமைவிடம்: காவடிக்காரனூர், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 11°36′N 77°54′E / 11.60°N 77.90°E / 11.60; 77.90
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சேலம்
வட்டம் எடப்பாடி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ஆர். பிருந்தா தேவி, இ. ஆ. ப [3]
சட்டமன்றத் தொகுதி எடப்பாடி
சட்டமன்ற உறுப்பினர்

எடப்பாடி க. பழனிசாமி (அதிமுக)

மக்கள் தொகை

அடர்த்தி

2,212 (2001)

179/km2 (464/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 12.35 சதுர கிலோமீட்டர்கள் (4.77 sq mi)
குறியீடுகள்


காவடிக்காரனூர் (ஆங்கிலம்:Kavadikaranoor), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டத்தில் அமைந்திருக்கும் இயற்கை அழகு பொருந்திய கிராமமாகும். தங்காயூர் பஞ்சாயத்தின் கீழ் குறிப்பிடப்படும் கிராமங்களில் இது பெரும் நிலப்பரப்பை கொண்டது. இங்கு பொருளாதாரம் பல்வேறு பரிணாமங்களில் கண்டறியப்படுகிறது. இக்கிராமத்தின் வடமேற்கு பகுதியில், பல்வேறு தாதுப் பொருட்கள் அடங்கிய பாறைகள் படிந்துள்ளன.

நிலவியல்

[தொகு]

காவடிக்காரனூர் 11°60′ வ 77°90′ கி, கடற் மட்டத்திலிருந்து 298 மீ உயரத்திலும், சூர்ய மலையின் கிழக்கிலும் அமைந்துள்ளது. சூர்ய மலையில் பஞ்ச பாண்டவர்கள் வாழ்ந்தாக இங்குள்ளவர்கள் கூறுகிறார்கள். இதனால்தான் இங்கு மரம், செடி கொடிகள் வளராமல், பயன்படுத்த இயலாத மலையானதாக கருதப்படுகிறது. ஆசாம்பள்ளி ஏரியின் நீர்ப்பாசனத்தால் உணவு தானியங்கள் பயிரிடப்படுகின்றது.

அமைவிடம்

[தொகு]

கொங்கணாபுரத்திலிருந்து 3 கி.மீ தென்மேற்கிலும் எடப்பாடியில் (வட்டம்) இருந்து 6 கி.மீ கிழக்கிலும் அமைந்துள்ளது. 12.35 சதுர பரப்பளவில், சுமார் 2212 .[4] மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். கோண மோரி (வளைவான சாலை பாலம்) - எனும் இடத்திலிருந்து இரவுநேரத்தில் இடைப்பாடி ஊர் அழகைக் கண்டு ரசிக்கலாம்.

பொருளாதாரம்

[தொகு]

20 ஆண்டுகளுக்கு முன்புவரை இங்குள்ள மக்கள் விவசாயத்தை மட்டுமே நம்பினர். மாறிவரும் பொருளாதார முன்னேற்றத்தால் விவசாயம், கனரக வாகனம்(Lorry Heavy trucks), வாகன தொழிற்சாலை, பட்டப்படிப்பு மற்றும் தொழிற்படிப்புகளால் மக்களின் வாழ்வாதாரம் உயர்ந்துள்ளது.

ஆதாரங்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு". Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 20, 2006.{{cite web}}: CS1 maint: unfit URL (link)


"https://ta.wikipedia.org/w/index.php?title=காவடிகாரனூர்&oldid=3594530" இலிருந்து மீள்விக்கப்பட்டது