காலதேசுவர் மகாதேவ் கோவில்
காலதேசுவர் மகாதேவ் கோவில் | |
---|---|
![]() கடவுளர் சிவன் | |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | இராசத்தான் |
மாவட்டம்: | பலோத்ரா மாவட்டம் |
அமைவு: | சிவானா |
கோயில் தகவல்கள் |
சிறு குன்று என்று பிரபலமாக அழைக்கப்படும் காலதேசுவர் மகாதேவ் கோவில் (Haldeshwar Mahadev Temple), ஆரவல்லி மலைத்தொடர்களுக்கு மத்தியில் பலோத்ராவில் உள்ள சிவானாவில் அமைந்துள்ளது.[1][2][3]
வழிபாடு
[தொகு]சிவ வழிபாட்டுத் தலமாக இந்தக் கோயில் தனித்துவமானது.
கோவில்
[தொகு]சிவானாவில் உள்ள பிப்ளூன் கிராமத்தில் சாப்பன் மலைகளின் அடிவாரத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. ஆவணி மாதத்தில் முழு மகிமையுடன் இக்கோயில் இருக்கும். மழை இப்பகுதி மக்களின் வாழ்வில் மகிழ்ச்சியினைக் கொண்டுவருகிறது. இந்த மலைகளுக்கு மத்தியில் காலதேசுவர் மகாதேவ் என்ற புனிதத் தலம் அமைந்துள்ளது. இது ஆரவல்லி மலைத்தொடரின் முடிவில் உள்ளது.[4]
ஆவணி மாதத்தில் காலதேசுவர் தாமில் பக்தர்கள் அதிக அளவில் கூடுவார்கள். இங்குச் செல்வது எளிதல்ல. பக்தர்களும் சுற்றுலாப் பயணிகளும் தாம் நகரத்தை அடைய ஏழு மலைகளைக் கடக்க வேண்டும். மலைப்பாதை கடினமானது மற்றும் குழப்பமானது. இங்கு வருபவர்களுக்கு, போலே பிரபுவின் மீதான நம்பிக்கை எளிதான வழியினை அமைத்துத் தருகிறது. இங்கு வரும் பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை. நாட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் பக்தர்கள் இங்குத் தரிசனத்திற்காக வருகிறார்கள்.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "सात दुर्गम पहाडिय़ों के पार है भोले का हल्देश्वर धाम | Faith of devotees in Savane in Haldeshwar Dham". Patrika News (in இந்தி). 2018-07-31. Retrieved 2024-05-27.
- ↑ "बाड़मेर: शिवालयों में गूंजे हर-हर भोले के शंखनाद, सुबह से भक्तों की भारी भीड़, मंदिरों में हुई विशेष पूजा". News18 हिंदी (in இந்தி). 2023-07-10. Retrieved 2024-05-27.
- ↑ Garg, Santosh Kumar (2024-07-27). "बजट घोषणा के तहत हल्देश्वर महादेव के किए दर्शन - Basti Times 24" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2024-08-21.
- ↑ "मिनी माउंट है छप्पन की पहाड़ियों में बसा 'हल्देश्वर महादेव तीर्थ - Namaskaar Nation" (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-07-19. Retrieved 2024-05-27.
- ↑ hindirakshakmanch (2020-01-09). "इतिहास नगरी गढ़ सिवाणा : संत-शूरमाओं की मातृभूमि". hindirakshak (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2024-05-27.