ஆவணி
Appearance

காலக்கணிப்பில் தமிழர் வழக்கப்படி, ஆண்டின் ஐந்தாவது மாதம் ஆவணி (ⓘ) ஆகும். இம்மாதத்தை தமிழில் மடங்கல், கார் என்ற பெயர்களாலும் அழைப்பர். சூரியன் சிங்க இராசியுட் புகுந்து அங்கே வலம் வரும் காலமான 31 நாள், 02 நாடி, 10 விநாடிகளைக் கொண்டதே இம் மாதமாகும். வசதிக்காக இந்த மாதம் 31 நாட்களை உடையதாகக் கொள்ளப்படும்.
ஆவணி மாதங்களில் மாரியம்மனுக்கு ஆவணி விரதம் இருக்கும் பழக்கம் தமிழ்நாட்டில் உள்ளது. சிவனின் திருவிளையாடல்களில் ஒன்றான பிட்டுக்கு மண் சுமந்த கதை ஆவணி மாதத்தில் விழாவாக கொண்டாடப்படுகிறது.[1]
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "ஆவணியின் சிறப்பு: ஆவணி அழகன்". Hindu Tamil Thisai. 2024-09-05. Retrieved 2024-10-05.
வெளியிணைப்புக்கள்
[தொகு]- ஆங்கில தேதியிலிருந்து தமிழ் தேதி வருவித்தல்
- தமிழ் நாட்காட்டி பரணிடப்பட்டது 2006-12-14 at the வந்தவழி இயந்திரம்
தமிழ் மாதங்கள் |
---|
சித்திரை | வைகாசி | ஆனி | ஆடி | ஆவணி | புரட்டாசி | ஐப்பசி | கார்த்திகை | மார்கழி | தை | மாசி | பங்குனி |