கார்பனேற்றம்
கார்பனேற்றம் (Carbonation) என்பது கார்பனேட்டுகள், பைகார்பனேட்டுகள் மற்றும் கார்போனிக் அமிலம் போன்றவற்றை பெறுவதற்கான கார்பனீராக்சைடின் வேதியியல் வினையாகும்.[1] வேதியியலில், இந்த சொல் சில நேரங்களில் கார்பாக்சிலேற்றத்திற்கு பதிலாகவும் பயன்படுத்தப்படுகிறது. கார்பாக்சிலேற்றம் என்பது கார்பாக்சிலிக் அமிலங்களை உருவாக்கும் வினையாகும். கனிம வேதியியலிலும் நிலவியலிலும் கார்பனேற்றம் என்பது பொதுவாக நிகழும் ஒரு வினையாகும். உலோக ஐதராக்சைடுகளும் (MOH) உலோக ஆக்சைடுகளும் (M'O) கார்பனீராக்சைடுடன் (CO2) வினையில் ஈடுபட்டு கார்பனேட்டுகளையும் பைகார்பனேட்டுகளையும் கொடுக்கின்றன.
- MOH + CO2 → M(HCO3)
- M'O + CO2 → M'CO3
வலுவூட்டப்பட்ட கற்காரை கட்டுமானத்தில், கற்காரையிலுள்ள கால்சியம் ஐதராக்சைடு மற்றும் நீரேற்ற கால்சியம் சிலிக்கேட்டு போன்றவற்றுடன் காற்றிலுள்ள கார்பனீராக்சைடு டை ஆக்சைடு ஈடுபடும் வேதிவினையும் நடுநிலையாக்கல் என்றே அழைக்கப்படுகிறது.
என்றி விதி
[தொகு]வெப்பநிலை குறையும்போது கரைசலில் கார்பனேற்றம் அதிகரிக்கிறது என்கிறது வாயு விதிகளில் ஒன்றான என்றி விதி.[2]
- PCO2=KBxCO2
- PCO2 = கரைசலின் மீதுள்ள கார்பனீராக்சைடு வாயுவின் பகுதி அழுத்தம்.
- KB = என்றி மாறிலி. வெப்பநிலை அதிகரித்தால் என்றியின் மாறிலியும் அதிகரிக்கும்.
- xCO2 = கரைசலிலுள்ள கார்பனீராக்சைடின் மோல் பின்னம்
கார்பனேற்றம் என்பது CO2 (வாயு) வாயுவிலிருந்து கார்போனிக் அமிலம் (நீர்மம்) போன்ற சேர்மங்களைக் கொடுக்கும் செயல்முறையாக (வாயுவிலிருந்து நீர்மம்) இருப்பதால் CO2 வாயுவின் பகுதி அழுத்தம் குறைய வேண்டும் அல்லது கரைசலில் CO2 வாயுவின் மோல் பின்னம் {PCO2/xCO2 = KB} அதிகரிக்க வேண்டும். இந்த இரண்டு நிபந்தனைகளுமே கார்பனேற்றம் அதிகரிப்பதை ஆதரிக்கின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Impregnation or treatment with carbon dioxide; conversion into a carbonate."Oxford English Dictionary. Oxford University Press. 2018.
- ↑ "Henry's ddLaw". ChemEngineering. Tangient LLC. Archived from the original on 2 ஜூன் 2017. பார்க்கப்பட்ட நாள் 7 November 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)