உள்ளடக்கத்துக்குச் செல்

என்றியின் விதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இயற்பியலில், என்றியின் விதி (Henry's law of partial pressure) என்பது வளிம விதிகளில் ஒன்றாகும். இதனை 1803 ஆம் ஆண்டில் வில்லியம் என்றி உருவாக்கினார். பல்வேறு பட்ட வளிமங்கள் ஒரு நீர்மத்தின் மேல் உள்ள போது அவ்வளிமங்கள் எந்த வீதத்தில் நீர்மத்தில் கலக்கின்றன என்பதனை இவ்விதி விளக்குகின்றது.

"வெப்பநிலை மாறாதிருக்கும் நிலையில் எந்த வளிமத்தின் பகுதி அழுத்தம் அதிகமாக இருக்கிறதோ அந்த வளிமத்தின் நிறை கரைசலில் அதிகம் காணப்படும்," என்பதே என்றியின் விதியாகும். குறைந்த பகுதியழுத்தமுள்ள வளிமம் குறைந்த அளவிலிருக்கும். அதாவது, "நீர்மம் ஒன்றில் உள்ள வளிமத்தின் கரைதிறன் நீர்மத்தின் மேலுள்ள வளிமத்தின் பகுதி அழுத்தத்திற்கு நேர் விகித சமனில் இருக்கும்."

கார்பனேற்றப்பட்ட குளிர்பானம் இவ்விதிக்கு ஓர் எடுத்துக்காட்டாகும். கார்பனேற்றப்பட்ட குளிர்பானம் அடங்கிய புட்டியைத் திறக்க முன்னர், பானத்திற்கு மேலுள்ள வளிமம் வளிமண்டல அழுத்தத்திலும் பார்க்க ஓரளவு அதிக அழுத்தத்தில் தூய காபனீரொக்சைட்டு காணப்படும். புட்டி திறக்கப்படும் போது, இந்த வளிமத்தின் ஒரு பகுதி "பொப்" என்ற ஒலியுடன் வெளியேறுகிறது. நீர்மத்தின் மேலுள்ள கார்பனீரொக்சைடின் பகுதி அழுத்தம் இப்போது குறைவாக உள்ளதால், நீர்மத்தில் கரைந்துள்ள சில கார்பனீரொக்சைடு குமிழ்களாக வெளியேறுகின்றது. புட்டி திறந்த நிலையிலேயே வைத்திருக்கப்படும் போது, கரைசலில் உள்ள கார்பனீரொக்சைடின் செறிவு வளியில் உள்ள கார்பனீரொக்சைடின் செறிவுடன் சமநிலைக்கு வருகிறது.

சமன்பாடு

[தொகு]

என்றியின் விதி மாறா வெப்பநிலையில் பின்வருமாறு எழுதப்படலாம்:

இங்கு p கரைசலுக்கு மேலுள்ள வளிமத்தின் பகுதி அழுத்தம். c கரைபொருளின் செறிவு, kH மாறிலி, என்றியின் விதி மாறிலி எனப்படும் இம்மாறிலி கரைபொருள், கரைப்பான், மற்றும் வெப்பநிலையில் தங்கியுள்ளது. இதன் பரிமாணம் அழுத்தத்தை செறிவினால் பிரிக்கும் பரிமாணத்திற்கு ஒப்பானது.

298 கெ வெப்பநிலையில் நீரில் கரையும் சில வளிமங்களின் k மாறிலிகள் வருமாறு:

ஆக்சிசன் (O2) : 769.2 L·atm/மோல்
காபனீரொக்சைட்டு (CO2) : 29.41 L·atm/மோல்
நீரியம் (H2) : 1282.1 L·atm/மோல்

வேறு வடிவங்களில் என்றியின் விதி

[தொகு]

என்றியின் விதி பல்வேறு வடிவங்களில் தரப்படுகின்றன.[1][2]

அட்டவணை: என்றியின் விதியும் மாறிலிகளும் (நீரில் வளிமங்கள் 298.15 கெல். வெப்பநிலையில்)[2]
சமன்பாடு:
அலகுகள்: பரிமாணமற்றது
O2 769.23 1.3×10−3 4.259×104 3.181×10−2
H2 1282.05 7.8×10−4 7.099×104 1.907×10−2
CO2 29.41 3.4×10−2 0.163×104 0.8317
N2 1639.34 6.1×10−4 9.077×104 1.492×10−2
He 2702.7 3.7×10−4 14.97×104 9.051×10−3
Ne 2222.22 4.5×10−4 12.30×104 1.101×10−2
Ar 714.28 1.4×10−3 3.955×104 3.425×10−2
CO 1052.63 9.5×10−4 5.828×104 2.324×10−2
இங்கு:
caq = கரைசலில் வளிமத்தின் செறிவு (அல்லது மூலக்கூற்றுத்திறன்) (மோல்/லிட்)
cgas = கரைசலுக்கு மேலுள்ள வளிமத்தின் செறிவு (மோல்/லிட்)
p = கரைசலுக்கு மேலுள்ள வளிமத்தின் பகுதி அழுத்தம் (atm)
x = கரைசலில் உள்ள வளிமத்தின் மோல் பின்னம் (பரிமாணமற்றது)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "North Carolina State University CH 431/Lecture 14". Archived from the original on 2007-11-21. பார்க்கப்பட்ட நாள் 2013-12-24.
  2. 2.0 2.1 An extensive list of Henry's law constants, and a conversion tool

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்றியின்_விதி&oldid=3546253" இலிருந்து மீள்விக்கப்பட்டது