உள்ளடக்கத்துக்குச் செல்

காதலிக்க நேரமில்லை (2025 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காதலிக்க நேரமில்லை
Kadhalikka Neramillai
திரைப்படச் சுவரொட்டி
இயக்கம்கிருத்திகா உதயநிதி
தயாரிப்புஉதயநிதி ஸ்டாலின்
கதைகிருத்திகா உதயநிதி
இசைஏ. ஆர். ரகுமான்
நடிப்பு
ஒளிப்பதிவுகவாமிக் யூ ஆரி
படத்தொகுப்புஇலாரன்சு கிஷோர்
கலையகம்ரெட் ஜெயன்ட் மூவீசு
விநியோகம்ரெட் ஜெயிண்ட் மூவிஸ்
ஐங்கரன் இண்டர்நேசனல்
வெளியீடு14 சனவரி 2025 (2025-01-14)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

காதலிக்க நேரமில்லை (Kadhalikka Neramillai) என்பது 2025 இல் கிருத்திகா உதயநிதியின் எழுத்து, இயக்கத்தில் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.[1] காதல் நகைச்சுவை தொடர்பான இத்திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பாக உதயநிதி ஸ்டாலின் தயாரித்தார். இத்திரைப்படத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.[2] யோகி பாபு, வினய், ஜான் கோக்கன், லால் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

காதலிக்க நேரமில்லை என்ற தொலைக்காட்சித் தொடரின் தலைப்புடன் இப்படம் 2023 நவம்பர் மாதம் முறையாக அறிவிக்கப்பட்டது. முதன்மைப் படம் எடுக்கும் பணி அதே நவம்பர் மாதத்தில் தொடங்கியது. திரைப்படப் பணிகள் பெரும்பாலும் சென்னையில் படமாக்கப்பட்டு 2024 மே மாத இறுதியில் நிறைவுற்றது. இப்படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைக்க, கவாமிக் யூ ஆரி ஒளிப்பதிவு செய்ய, இலாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பு செய்துள்ளார்.

இத்திரைப்படம் 2025 சனவரி 14 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

நடிகர்கள்

[தொகு]

பாடல்கள்

[தொகு]

இத்திரைப்படத்தின் பாடல்கள், பின்னணி இசை ஆகியவற்றிற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்தார்.[3] 2024 நவம்பர் 22 அன்று "என்னை இழுக்குதடி" என்ற முதற் தனிப்பாடல் வெளியிடப்பட்டது.[4] இரண்டாவதாக 2024 திசம்பர் 18 அன்று "இலாவெண்டர் நேரமே" என்ற தனிப்பாடல் வெளியிடப்பட்டது.[5] 2025 சனவரி 4 அன்று "இட்ஸ் எ பிரேக் அப் டா" என்ற மூன்றாவது தனிப்பாடல் வெளியிடப்பட்டது.[6] அனைத்துப் பாடல்களும் 2025 சனவரி 7 அன்று வெளியிடப்பட்டது.[7][8] 2025 சனவரி 7 அன்று "பேபி சிக்கி சிக்கி" என்ற நான்காவது தனிப்பாடல் வெளியிடப்பட்டது.[9]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "'காதலிக்க நேரமில்லை' ட்ரெய்லர் எப்படி? - காதலும் 'இழுக்கும்' இசையும்!". Hindu Tamil Thisai. 2025-01-07. Retrieved 2025-01-15.
  2. "திருமணம் செய்யாமல் குழந்தையா?காதலிக்க நேரமில்லை திரை விமர்சனம்.". தினமணி. https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%BF.%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF&action=edit. பார்த்த நாள்: 15 January 2025. 
  3. M, Narayani (2024-11-21). "First single from Jayam Ravi-Nithya Menen's Kadhalikka Neramillai to be out on this date". சினிமா எக்ஸ்பிரஸ் (in ஆங்கிலம்). Retrieved 2024-11-21.
  4. Kumar, Akshay (2024-11-22). "'Yennai Izhukkuthadi' from Kadhalikka Neramillai Out: AR Rahman and Dhee lend vocals to this peppy number". சினிமா எக்ஸ்பிரஸ் (in ஆங்கிலம்). Retrieved 2024-11-23.
  5. "ஏ.ஆர்.ரகுமான் இசையில் மனதை மயக்கும் Lavender nerame பாடல்; 'காதலிக்க நேரமில்லை' இரண்டாவது சிங்கிள் வெளியீடு!". ETV Bharat News. 2024-12-18. Retrieved 2024-12-18.
  6. Kumar, Akshay (2025-01-04). "Third single from Jayam Ravi-Nithya Menen's Kadhalikka Neramillai out". சினிமா எக்ஸ்பிரஸ் (in ஆங்கிலம்). Retrieved 2025-01-04.
  7. Kumar, Akshay (2025-01-07). "Jayam Ravi-Nithya Menen's Kadhalikka Neramillai jukebox out". Cinema Express (in ஆங்கிலம்). Retrieved 2025-01-07.
  8. "Feel the magic of love with every song. Kadhalikka Neramillai Audio Jukebox now streaming! 🎶💓". டுவிட்டர். 7 January 2025.
  9. Features, C. E. (2025-01-11). "'Baby Chiki Chiki' song from Kadhalikka Neramillai out". சினிமா எக்ஸ்பிரஸ் (in ஆங்கிலம்). Retrieved 2025-01-11.

வெளி இணைப்புகள்

[தொகு]