உள்ளடக்கத்துக்குச் செல்

காசிம் ரசிவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சையது முகமது காசிம் ரசிவி
போலோ நடவடிக்கையின்போது காசிம் ரசிவி
பிறப்பு(1902-07-17)17 சூலை 1902
இலக்னோ, ஐக்கிய மாகாணங்கள் பின்னர் லாத்தூர், ஐதராபாத் இராச்சியம்[1][2]
இறப்பு15 சனவரி 1970(1970-01-15) (அகவை 67)
கராச்சி, பாக்கித்தான்
கல்லறைபபோசு நகரக் கல்லறை
படித்த கல்வி நிறுவனங்கள்அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம்
பணிவழக்கறிஞர், அரசியல்வாதி
பெற்றோர்சையது அகமது கான் ரசிவி
பிள்ளைகள்10 (5 மகன்கள் & 5 மகள்கள்)

காசிம் ரசிவி (Kasim Razvi) 17 ஜூலை 1902-15 ஜனவரி 1970) ஐதராபாத் இராச்சியத்தின் அரசியல்வாதி ஆவார். 1946 டிசம்பர் முதல் 1948 இல் மாநில இணைப்பு வரை மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் கட்சியின் தலைவராக இருந்தார்.[3] அவர் மாநிலத்தில் இரசாக்கர் என்ற போராளிக் குழுவின் நிறுவனராகவும் இருந்தார். இவர் ஐதராபாத் நிசாமுடன் நெருக்கமாக இருந்தார். ஐதராபாத் மாநிலத்தை இந்திய ஒன்றியத்துடன் இணைப்பதை இவர் எதிர்த்தார். நிசாமின் சுதேச அரசை இந்தியாவுக்கு பதிலாக பாக்கித்தானுடன் சேர்க்கும் திட்டமும் இவரிடம் இருந்தது.[4][5][6][7]

ஆரம்ப வாழ்க்கை மற்றும் தொழில்[தொகு]

காசிம் ரசிவி ஐக்கிய மாகாணங்களில் பிறந்தார்[1] [2] அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். பட்டப்படிப்புக்குப் பிறகு ஐதராபாத் மாநிலத்திற்கு குடிபெயர்ந்தார். நகரில் முகமது அலி பாசிலிடம் ஒரு குறுகிய பயிற்சி பெற்றார். பின்னர் இவர் ஒசுமானாபாத் மாவட்டத்திலுள்ள லாத்தூரில் வழக்கறிஞராக பயிற்சியைத் தொடங்கினார். அங்கு இவரது மாமனார் அப்துல் ஹை துணைக் கண்காணிப்பாளராக இருந்தார்.[8]

முன்னாள் ஐதராபாத் அரசின் ஊழியர் முகமது ஐதர் கருத்துப்படி, லத்தூரில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருந்தது. ரசிவி நிழல் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டு சிறிது செல்வத்தை குவித்தார். அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன்கட்சியில் சேர்ந்த பிறகு, ரசிவி தனது சொத்துக்கள் அனைத்தையும் கட்சிக்கு நன்கொடையாக அளித்ததாகக் கூறப்படுகிறது. இது இவரை பிரபலமாக்கியது. மேலும், இவருக்கு சித்திக்-இ-தெக்கான் என்ற பட்டத்தைப் பெற்றுத் தந்தது.[8]

போலோ நடவடிக்கை[தொகு]

போலோ நடவடிக்கையின் போது இந்தியத் தரைப்படை இரசாக்கர்களை விரட்டியது. காசிம் இரிசுவி கிட்டத்தட்ட பத்தாண்டு காலம் இந்திய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தார். தான் விடுவிக்கப்பட்ட நாற்பத்தெட்டு மணி நேரத்திற்குள் அவர் பாக்கித்தானுக்கு குடிபெயரவேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் பின்னர் விடுவிக்கப்பட்டார்.[9] இவருக்கு பாக்கித்தானில் புகலிடம் வழங்கப்பட்டது.[10]

ஐதராபாத், இந்தியாவுடன் இணைக்கப்பட்ட பின்னர் இரசாக்கர்கள் படை கலைக்கப்பட்டது. மேலும், மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் கட்சி தடை செய்யப்பட்டது. இருப்பினும் இது 1957 இல் காங்கிரசு அரசாங்கத்தின் கீழ் அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் (ஏஐஐஎம்) என மறுபெயரிடப்பட்டது.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

காசிமுக்கு "பேராசிரியர், மருத்துவர், ஆடை வடிவமைப்பாளர், மற்றும் ஆலோசகர்" என 10 குழந்தைகள் (5 மகன்கள் மற்றும் 5 மகள்கள்) உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் குடியேறியுள்ளனர்.[11]

நூல் பட்டியல்[தொகு]

மேலும் படிக்க[தொகு]


இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காசிம்_ரசிவி&oldid=3986945" இலிருந்து மீள்விக்கப்பட்டது