உள்ளடக்கத்துக்குச் செல்

காங்ரா கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காங்கிரா கோட்டை
Kangra Fort
பகுதி: இமாச்சலப் பிரதேசம்
தரம்சாலா, இமாச்சலப் பிரதேசம், இந்தியா
காங்கிரா கோட்டை
வகை கோட்டை
இடத் தகவல்
கட்டுப்படுத்துவது இமாச்சலப் பிரதேச அரசு
நிலைமை சிதைவுகள்
இட வரலாறு
கட்டியவர் காங்கிரா நாட்டின் ராஜ்புத் குடும்பம்
கட்டிடப்
பொருள்
கருங்கற் பாறைகள், சுண்ணக்காரை

காங்ரா கோட்டை (Kangra Fort) இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் காங்ரா மாவட்டத்தில் காங்ரா நகராட்சியின் புறநகரில் உள்ள தரம்சாலா நகரிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

வரலாறு

[தொகு]

மகாபாரத காவியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பண்டைய திரிகர்த்த இராச்சியத்தின் தோற்றத்தால் அறியப்படும் காங்ரா, கடோச் வம்ச அரச ராஜபுத்திர குடும்பத்தினரால் காங்க்ரா கோட்டை கட்டப்பட்டது. இது இமயமலையின் மிகப் பெரிய கோட்டையாகும். அநேகமாக இந்தியாவின் மிகப் பழமையான கோட்டையாகவும் இருக்கலாம்.

1009 இல் முகம்மது கஜினி, 1360 இல் பெரோஸ் ஷா துக்ளக் மற்றும் 1540 இல் சேர் ஷா மூன்று ஆட்சியாளர்களால் கோட்டை கைப்பற்றப்பட்டு அதன் பொக்கிஷங்களை சூறையாடப்பட்டது.[1] அக்பரின் மகன் ஜஹாங்கிர் 1620 இல் கோட்டையைக் கைப்பற்றினார்.[2] முகலாயப் பேரரசர் ஜஹாங்கிர் சூரஜ் மாலின் உதவியுடன் காங்ராவைச் சேர்ந்த ராஜா ஹரி சந்த் கடோச் (ராஜா இரண்டாம் ஹரி சந்த் என்றும் அழைக்கப்படுகிறார்) [3]காவலில் வைக்கப்பட்டார்.[4] மேலும், காங்ரா கோட்டைக்குள் ஒரு மசூதியும் கட்டப்பட்டது.

கடோச் மன்னர்கள் முகலாயக் கட்டுப்பாட்டுப் பகுதிகளை மீண்டும் மீண்டும் சூறையாடி, முகலாயக் கட்டுப்பாட்டைப் பலவீனப்படுத்தி, முகலாயரின் வீழ்ச்சிக்கு உதவினர். 1789 இல் ராஜா இரண்டாம் சன்சார் சந்த் தனது மூதாதையர்களின் பண்டைய கோட்டையை மீட்பதில் வெற்றி பெற்றார். மகாராஜா இரண்டாம் சன்சார் சந்த் ஒருபுறம் கூர்க்காக்களுடனும், மறுபுறம் சீக்கிய மன்னர் மகாராஜா ரஞ்சித் சிங்குடனும் பல போர்களில் ஈடுபட்டார். சன்சார் சந்த் தனது அண்டை நாட்டு மன்னர்களை சிறையில் அடைத்திருந்தார். இது அவருக்கு எதிரான சதித்திட்டங்களுக்கு வழிவகுத்தது. இதனால் சீக்கியர்களுக்கும் கடோச்சிற்கும் இடையே போர் நடைபெற்றது. போரின்போது, கோட்டையின் வாயில்கள் பொருட்களுக்காக திறந்து வைக்கப்பட்டிருந்தன.

கோர்காலி இராணுவம் 1806 ஆம் ஆண்டில் திறந்ததிருந்த வாயில்களுக்குள் ஆயுதமேந்தி நுழைந்தது. இது மகாராஜா சன்சார் சந்த் மற்றும் மகாராஜா ரஞ்சித் சிங் இடையே கூட்டணி அமைய காரணமானது. நீண்ட கூர்க்கா-சீக்கியப் போருக்குப் பிறகு கோட்டைக்குள் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக இல்லாததாலும், எதையும் வாங்க முடியாமலும் இருந்ததால், கூர்க்காக்கள் கோட்டையை விட்டு வெளியேறினர். 1828 வரை கோட்டை கடோச்சுடன் இருந்தது. சன்சார் சந்த் இறந்த பின்னர் ரஞ்சித் சிங் அதை தன் இராச்சியத்துடன் இணைத்தார். 1846 ஆம் ஆண்டு சீக்கியப் போருக்குப் பின்னர் இந்தக் கோட்டை ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டது.

ஏப்ரல் 4, 1905 இல் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சேதமடையும் வரை பிரித்தானிய காவல் படை கோட்டையை ஆக்கிரமித்தது.

அமைவு

[தொகு]

கோட்டையில் இரண்டு வாயில்களுக்கு இடையில் ஒரு சிறிய முற்றத்தின் வழியாக நுழைவாயில் அமைந்துள்ளது. நுழைவாயிலுக்கு மேலே உள்ள ஒரு கல்வெட்டில் இருந்து சீக்கியர்கள் காலத்தில் கட்டப்பட்டதாக தெரிகிறது. இங்கிருந்து ஒரு நீண்ட மற்றும் குறுகிய பாதை கோட்டையின் உச்சியில், அஹானி மற்றும் அமிரி தர்வாசா (தர்வாசா - வாயில்) வழியாக செல்கிறது. வெளிப்புற வாயிலிலிருந்து சுமார் 500 அடி தூரத்தில் பாதை மிகவும் கூர்மையான கோணத்தில் திரும்பி ஜஹாங்கிரி தர்வாசா வழியாக செல்கிறது.

இப்போது கங்கை மற்றும் யமுனா நதிகளுக்கான சிலைகளால் சூழப்பட்ட தர்சனி தர்வாசா, ஒரு முற்றத்திற்கு நுழைவாக அமைந்துள்ளது. அதன் தெற்கே லட்சுமி-நாராயணா மற்றும் அம்பிகா தேவியின் கல் ஆலயங்களும், ரிஷபநாதரின் பெரிய சிலை கொண்ட ஒரு சமண கோவிலும் இருக்கின்றன.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Everyday Creativity: Singing Goddesses in the Himalayan Foothills.
  2. A Textbook of Medieval Indian History.
  3. History of the Panjab Hill States, Volume 1.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-02-04. பார்க்கப்பட்ட நாள் 2020-01-04.
  5. Jeratha, Aśoka (2000), Forts and Palaces of the Western Himalaya, Indus Publishing, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788173871047
"https://ta.wikipedia.org/w/index.php?title=காங்ரா_கோட்டை&oldid=3707188" இலிருந்து மீள்விக்கப்பட்டது