கவிதா ஜெயின்
கவிதா ஜெயின் | |
---|---|
அமைச்சர், அரியானா அரசு | |
பதவியில் 26 அக்டோபர் 2014 – 27 அக்டோபர் 2019 | |
அமைச்சர் | காலம் |
பெண்கள் & குழந்தைகள் நலத்துறை | 26 அக்டோபர் 2014 - 27 அக்டோபர் 2019 |
உள்ளாட்சி துறை அமைச்சர் | 22 சூலை 2016 - 27 அக்டோபர் 2019 |
சமூக நீதித்துறை அமைச்சர் | 26 அக்டோபர் 2014 - 22 சூலை 2016 |
பட்டிலியத்தவர் & பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சர் | 26 அக்டோபர் 2014 - 24 சூலை 2015 |
அரியான சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2009–2019 | |
முன்னையவர் | அணில் குமார் தாக்கர் |
பின்னவர் | சுரேந்திர பன்வார் |
தொகுதி | சோனிபத் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 2 செப்டம்பர் 1972 ரோத்தக், அரியானா இந்தியா |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | இராஜிவ் ஜெயின் |
பிள்ளைகள் | 1 மகள், 1 மகள் |
கல்வி | முதுநிலை வணிகவியல், இளங்கலை கல்வியியல் |
வேலை | அரசியல்வாதி |
கவிதா சுரேந்தர் குமார் ஜெயின் (Kavita Jain)(பிறப்பு: செப்டம்பர் 2, 1972) என்பவர் அரியான மாநிலத்தினை சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் சோனிபத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் இந்தியாவின் அரியானா மாநில அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சராவார்.
தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]
ஜெயின், அரியானா முதல்வரின் ஊடக ஆலோசகராக இருந்த ராஜீவ் ஜெயினை மணந்தார்.[1] இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.
ஜெயின் ரோத்தக்கில் முதுநிலை வணிகவியல் மற்றும் கல்வியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார்.[2]
அரசியல் வாழ்க்கை[தொகு]
2009 மற்றும் 2014-ல், அரியானா மாநில சட்டமன்றத் தேர்தலில் சோனிபத்தில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராகப் போட்டியிட்ட இவர் வெற்றிபெற்றுஅரியானா சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 26 அக்டோபர் 2014 அன்று, இவர் அரியானா அரசாங்கத்தில் அமைச்சராகப் பதவியேற்றார்.[2]
ஒரு அமைச்சராக, இவர் பின்வரும் துறைகளின் பொறுப்பை வகிக்கிறார்.
- நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் துறை, அரியானா
- பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை, அரியானா
- சட்டம் மற்றும் நீதித்துறை,[3] அரியானா
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Rajiv Jain appointed media adviser to Haryana Chief Minister Khattar". Tribune India. April 6, 2018. https://www.tribuneindia.com/news/haryana/rajiv-jain-appointed-media-adviser-to-haryana-chief-minister-khattar/569643.html.
- ↑ 2.0 2.1 "MLA Details". haryanaassembly.gov.in. பார்க்கப்பட்ட நாள் 11 October 2017.
- ↑ Minister, Contact. "Kavita Jain Contact Details". My Minister (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2020-06-26. பார்க்கப்பட்ட நாள் 2020-06-23.