கள்ளந்திரி
கள்ளந்திரி Kallandhiri | |
---|---|
ஆள்கூறுகள்: 10°02′18″N 78°12′02″E / 10.0383°N 78.2005°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | மதுரை மாவட்டம் |
ஏற்றம் | 219 m (719 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 6,232 |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 625301 |
தொலைபேசி குறியீடு | +914549xxxxxx |
அருகிலுள்ள ஊர்கள் | மதுரை, அப்பன்திருப்பதி, மூன்றுமாவடி, கடச்சனேந்தல், கோ. புதூர், பீபி குளம், ஊமச்சிகுளம், யா. ஒத்தக்கடை, தல்லாகுளம், கே. கே. நகர், கோரிப்பாளையம் மற்றும் மாட்டுத்தாவணி |
மாவட்ட ஆட்சித் தலைவர் | மா. சௌ. சங்கீதா, இ. ஆ. ப. |
மக்களவைத் தொகுதி | மதுரை மக்களவைத் தொகுதி |
சட்டமன்றத் தொகுதி | மதுரை கிழக்கு (சட்டமன்றத் தொகுதி) |
மக்களவை உறுப்பினர் | சு. வெங்கடேசன் |
சட்டமன்ற உறுப்பினர் | பி. மூர்த்தி |
இணையதளம் | https://madurai.nic.in |
கள்ளந்திரி (ஆங்கில மொழி: Kallandhiri) என்பது தமிழ்நாட்டின் மதுரை மாவட்டம், மதுரை கிழக்கு வட்டம், மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம், கள்ளந்திரி ஊராட்சியில் உள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். கள்ளந்திரி, மதுரை - அழகர் கோவில் செல்லும் சாலையில், மதுரையிலிருந்து 18 கிமீ தொலைவில் உள்ளது. கள்ளந்திரி வருவாய் கிராமம், மதுரை கிழக்கு (சட்டமன்றத் தொகுதி)க்கும், மதுரை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இதன் அஞ்சல் சுட்டு எண் 625301 ; தொலைபேசி குறியீடு எண் 04549 ஆகும். [1] கள்ளந்திரியில் ஐடிபிஐ வங்கிக் கிளையும்; அரசு மருத்துவ மனையும் உள்ளது.
அமைவிடம்
[தொகு]மதுரை - அழகர் கோவில் செல்லும் அழகர்கோயில் சாலையில், மதுரையிலிருந்து 17 கி.மீ. தொலைவில், அப்பன்திருப்பதிக்கு அடுத்து கள்ளந்திரி அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 219 உயரத்தில், 10°02′18″N 78°12′02″E / 10.0383°N 78.2005°E என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு இவ்வூர் அமையப் பெற்றுள்ளது.
மக்கள்தொகை பரம்பல்
[தொகு]2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 1,488 குடும்பங்களும்; 892.62 ஹெக்டேர் நிலப்பரப்பும் கொண்ட கள்ளந்திரி வருவாய் கிராமத்தின் மொத்த மக்கள்தொகை 6,232 ஆகும். ஒடுக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,251 (20.07%) ஆகவுள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழைந்தகள் 706 ஆக உள்ளனர். சராசரி எழுத்தறிவு 77.13% ஆகும். இக்கிராமத்தின் மொத்த வேளாண் மற்றும் இதர தொழிலாளர்கள் 3,171 ஆகும். [2]அப்பன்திருப்பதியில் தமிழ், தெலுங்கு மற்றும் சௌராஷ்டிர மொழிகள் பேசப்படுகிறது.
அருகே அமைந்த கிராமங்கள்
[தொகு]- பொய்யக்கரைப்பட்டி
- அழகர் கோவில்
- அப்பன்திருப்பதி
- தொப்புலான்பட்டி
- நாயக்கன்பட்டி
- அமண்டூரபட்டி
- மஞ்சம்பட்டி
- பிள்ளையார்நத்தம்
வழிபாட்டுத் தலங்கள்
[தொகு]- வீரசின்னம்மாள் மற்றும் வீரநாகம்மாள் கோயில்